இந்தியர்களே தயாரா?- உச்ச அம்சங்களுடன் இந்திய தயாரிப்பு ப்ளூடூத் இயர்பட்ஸ்: விலை குறைவுதான்!

|

லாவா ப்ரோ பட்ஸ் என்1 இயர்போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை இரட்டை இணைப்பு, விரைவான சார்ஜிங் மற்றும் கிங்-சைஸ் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. லாவா ப்ரோ பட்ஸ் என்1 வயர்லெஸ் இயர்போன்கள் ரூ.1499-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதல் நெக் பேண்ட் வயர்லெஸ் இயர்போன்கள்

முதல் நெக் பேண்ட் வயர்லெஸ் இயர்போன்கள்

லாவா தனது முதல் நெக் பேண்ட் வயர்லெஸ் இயர்போன்களை லாவா ப்ரோபட்ஸ் என் 1 என அறிமுகம் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்த இயர்போன்கள் விலை ரூ.1499 ஆக இருக்கிறது. இந்த சாதனம் வாங்க விரும்புபவர்கள் லாவா இஸ்டோர் மற்றும் அமேசான் மூலம் வாங்கலாம். பெர்ரி நீலம் மற்றும் சார்கோல் சாம்பல் வண்ண விருப்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மெட்டல் பேண்ட் ஆனது சிலிக்கான் மற்றும் மெட்டல் கலவையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரோ பட்ஸ் என்1 இரட்டை இணைப்பு, விரைவான சார்ஜிங் மற்றும் கிங் சைஸ் அளவிலான பேட்டரி உள்ளிட்ட அம்சங்களோடு வருகிறது.

லாவா ப்ரோ பட்ஸ் என்1 அம்சங்கள்

லாவா ப்ரோ பட்ஸ் என்1 அம்சங்கள்

லாவா ப்ரோ பட்ஸ் என்1 அம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த சாதனம் 220 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இந்த சாதனம் 30 மணிநேர மியூசிக் ப்ளே டைம் மற்றும் 200 மணி நேர காத்திருப்பு நேரத்துடன் வருகிறது. இது 20 நிமிட சார்ஜிங்கிற்கு பிறகு எட்டு மணிநேர பின்னணி நேரத்தை வழங்குகிறது. விரைவான சார்ஜிங் அம்சத்துடன் இந்த சாதனம் வருகிறது.

இரண்டு சாதனங்களுடன் இணைக்க அனுமதி

ப்ரோ பட்ஸ் என்1 இரட்டை அம்சமானது ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைக்க அனுமதிக்கிறது. மல்டி டாஸ்க் செய்ய விரும்பும் பயனர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர்களுடன் இயர்போன்களை அடிக்கடி பகிர்ந்து கொள்ளலாம். இதன் இரட்டை இணைப்பு அம்சமானது பெரிதளவு பயனுள்ளதாக இருக்கிறது. இரண்டு 10 மிமீ டிரைவர்கள் இலகுரக இயர்போன்களை இயக்குகின்றன. மேம்பட்ட பாஸ் திறனுடன் சிறந்த ஒலி தரத்தை வழங்குவதாக கூறப்படுகிறது. இணைப்பு முன்னணியில் ப்ளூடூத் பதிப்பு 5.0 மூலம் ஆதரிக்கின்றன.

ஸ்லைடர் சுவட்ச் ஆதரவு

ப்ரோ பட்ஸ் என்1 இலகுரக ஆதரவோடு பயனரின் கழுத்தில் வசதியாக உட்காரும் வகையில் வருகிறது. இயர்போன்கள் பயன்பாட்டில் இல்லாதபோது அணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவதற்கா பிரத்யேக ஸ்லைடர் சுவட்சையும் கொண்டிருக்கிறது. பயனரின் அதிகபட்ச வசதியை உறுதி செய்ய ஒவ்வொரு காது விளிம்புக்கும் பொருந்தும் வகையில் நெக் பேண்ட் முழுமையான ஆதரவோடு வருகிறது. அதன் காதில் பொருந்தும் அம்சம் ஆனது காதுகள் வலிக்காத அளவிற்கு பொருத்தமான வசதியை வழங்குகிறது. இயர்போன்கள் நீர் மற்றும் வியர்வையை எதிர்க்கும் அம்சத்தோடு வருகிறது. இது பயணம், ஒர்க்-அவுட் போன்ற எந்த பயன்பாட்டிற்கும் ஏகுவான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

5G தொழில்நுட்ப ஆதரவு

ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்கள் சமீபத்தில் 5G ஸ்மார்ட்போன்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன, இந்தியாவில் 5G தொழில்நுட்பத்தின் சரியான வெளியீடு எப்போது என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. சாம்சங், ஆப்பிள் அல்லது பட்ஜெட் பிராண்டு என்று எதுவாக இருந்தாலும், அனைத்து பிராண்டுகளும் அதன் சொந்த 5 ஜி சாதனங்களைத் தயார் செய்து வருகின்றது. மேலும், மற்றொரு பட்ஜெட் பிளேயர் இந்த கூட்டத்தில் சேரத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

ரூ.20,000 க்கு கீழ் ஸ்மார்ட்போன்கள்

லாவா இன்டர்நேஷனலின் மூத்த நிறுவன அதிகாரி புதன்கிழமை தனது முதல் 5 ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தின் தோற்றத்தைக் காட்சிப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக வெளிப்படுத்தினார், இதன் விலை ரூ.20,000 க்கு கீழ் இருக்கும் என்று கூறியுள்ளார். வெறும் ரூ. 20,000 விலைக்குள் 5ஜி சாதனம் கிடைக்கவிருக்கும் தகவல் தற்பொழுது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. லாவா நிறுவனம் திட்டமிடப்பட்ட படி, இந்த சாதனம் தீபாவளியின் போது அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lava Pro Buds N1 Launched in India with Dual Connectivity, 220 mAh Battery and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X