இதுவும் நல்ல போன் தான், நம்புங்க ப்ளீஸ்...!

By Meganathan

லாவா நிறுவனம் பிக்ஸல் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. இதன் படி அவ்வகையின் முதல் ஸ்மார்ட்போனாக லாவா பிக்ஸல் வி1 கருவி வெளியிடப்பட்டுள்ளது. கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தின் கீழ் இந்த கருவி தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிடம் அடி பணிந்தது அமெரிக்கா..!

பிக்ஸல் வி1 கருவி லாவா மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. ஹார்டுவேர் சிறப்பம்சங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் பயனாளிகளுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்குகின்றது.

எக்ஸ்பிரஸ் வேகத்தில் ரயில் டிக்கெட் வேண்டுமா..?

கீழ் வரும் ஸ்லைடர்களில் புதிய கருவியின் தலைசிறந்த சிறப்பம்சங்கள் மற்றும் அனைத்து தகவல்களையும் பாருங்கள்..

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

5.5 இன்ச் ப்ரைட், ஐபிஎஸ், எச்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளதோடு கைகளில் கச்சிதமாக பொருந்த கூடியது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

முற்றிலும் புதிய வடிவமைப்பு நிச்சயம் அனைவரையும் கவரும் விதமாக அமைந்துள்ளது. இந்த கருவியின் மொத்த எடை 135 கிராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிராசஸர்

பிராசஸர்

பிக்ஸல் வி1 ஸ்மார்ட்போன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், மெயில்-400எம்பி2 ஜிபியு 2 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு ஒன் மூலம் இயங்குகின்றது.

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

மெமரியை பொருத்த வரை இந்த கருவியில் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதிக இன்டர்னல் மெமரி தகவல்களை பறிமாற்றும் பணியை பத்து மடங்கு வேகமாக செயல்படுத்துகின்றது.

கேமரா

கேமரா

பிக்ஸல் வி1 போனில் 13எம்பி ப்ரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளதால் பயனாளிகள் சிறப்பான புகைப்படங்களை எடுக்க முடியும்.

செல்பீ

செல்பீ

8 எம்பி பிஎஸ்ஐ சென்சார் கொண்ட முன்பக்க கேமரா பயனாளிகளின் முகத்தினை அழகாக காட்டும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது.

யூஸர் இன்டர்ஃபேஸ்

யூஸர் இன்டர்ஃபேஸ்

ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் பயனாளிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவதோடு இரு மடங்கு வேகமாகவும் இயங்குகின்றது.

பேட்டரி

பேட்டரி

லாவா பிக்ஸல் வி1 கருவி 2560 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

பிக்ஸல் வி1 டூயல் சிம் ஸ்லாட், 3ஜி, வை-பை, வை-பை ஹாட்ஸ்பாட், ப்ளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டிருக்கின்றது.

விலை

விலை

வைட் சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் இந்த கருவி இந்தியாவில் ரூ.12,250க்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Read more about:
English summary
Check out here the 10 Stunning Features Of The Android One Smartphone. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X