Home
News

இந்தியாவில் விற்பனைக்கு வரும் இன்டெல் ஸ்மார்ட்போன்!

By Super
இந்தியாவில் விற்பனைக்கு வரும் இன்டெல் ஸ்மார்ட்போன்!

புதிய ஸ்மார்ட்போனை லாவா நிறுவனத்தினுடன் இணைந்து வெளியிட இருக்கிறது இன்டல் நிறுவனம். தொழில் நுட்ப வரலாற்றில் சாதனை படைத்து வரும் இன்டல் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் லாவா மொபைல் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட உள்ளது. ஸோலோ எக்ஸ்-900 என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனையும் விட மிக மெலிதான வடிவம் கொண்டதாக இருக்கும்.

4 இஞ்ச் திரையில் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட பிராசஸரின் மூலம் நிச்சயம் நவீன தொழில் நுட்பம் கொண்ட கேம்களையும் மற்றும் சிறப்பான வீடியோவினையும் வழங்கும்.

பீஃபி பிராசஸரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இன்னும் பல புதுமையான செயல்பாடுகளை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பினை அதிகப்படுத்துகிறது. வருகிற ஏப்ரல் மாதத்தின் முடிவில் இந்த புதிய ஸ்மார்ட்போனை இன்டல் நிறுவனம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8 மெகா பிக்ஸல் கொண்ட கேமராவின் மூலம் புகைப்படத்தினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதில் ஆன்ட்ராய்டு 4.0 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்கிரேட் செய்யும் வசதியினையும் வழங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஸ்மார்ட்போன் ஸோலோ எக்ஸ்-900 ரூ.10,000 விலைக்கும் குறைந்ததாக இருக்கும். உலக அளவில் பெரும் புகழை பெற்றுள்ள இன்டெல் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் இந்த ஸ்மார்ட்போன் மீது இப்போதே ஏக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X