லாவாவின் புதிய ஸ்மார்ட்போன் விலை ரூ.8,888
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா ஐரிஸ் ஃபூயல் 60 என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. நீண்ட நேரம் சார்ஜ் அளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,888 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக இருக்கும் ஸ்மார்ட்போன்கள் நீண்ட நேரம் பயன்படுத்த அதிக நேரம் நீடிக்க கூடிய பேட்டரிகளை அளிக்க வேண்டும் என லாவா நிறுவனத்தின் தலைவர் நவின் சாவ்லா தெரிவித்தார். ஐரிஸ் ஃபூயல் 60 மற்ற ஸ்மார்ட்போன்களை போன்று சார்ஜிங் பிரச்சனை இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
[உபயோமான கூகுள் க்ரோம் பயன்பாடு மற்றும் தந்திரங்கள்]
சிறப்பம்சங்களை பொருத்த வரை 5 இன்ச் எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ராம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஆன்டிராய்டு லாலிபாப் அப்டேட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

கேமராவை பொருத்த வரை 10 எம்பி ப்ரைமரி கேமராவும் 2 எம்பி முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் பேக்கப்ப அளிக்க 4000 எம்ஏஎஹ் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications