மாணவர்களின் கல்வியே கொள்கை: ரூ.9,499-க்கு டேப்லெட் அறிமுகம் செய்த லாவா- பல்வேறு அம்சம்!

|

லாவா மின் கல்வித் தொடரின் கீழ் 3 புதிய டேப்லெட்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த டேப்லெட்கள் அனைத்தும் குறைந்த விலையில் கல்வி சார்ந்த அணுகலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழங்கப்படுகிறது. லாவா மேக்னம், லாவா ஆரா, லாவா ஐவரி ஆகிய மூன்று டேப்லெட்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

மாணவர்களின் கல்வியே கொள்கை: ரூ.9,499-க்கு டேப்லெட் அறிமுகம் செய்த லாவா

கொரோனா பரவிய காலம் முதல் ஏணைய செயல்பாடுகளும் மாறி இருக்கிறது என்றே கூறலாம். வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் வகுப்புகள், ஸ்மார்ட்போனில் வீட்டுப்பாடம் எழுதி அனுப்புவது என பல தேவைகளுக்கும் ஸ்மார்ட்போன் தேவை பிரதானமாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் பயன்பாடு சிக்கலை ஏற்படுத்தும் நேரத்தில் இதுபோன்ற பணிகளுக்கு சிறந்த தேர்வாக இருப்பது டேப்லெட்.

டேப்லெட் விலை அதிகாமாக இருக்கும் என்று கருதுபவர்களுக்கு லாவா தனது மின்-கல்வி தொடரின் கீழ் 3 புதிய மாணவர் மைய டேப்லெட்டை கொண்டு வந்திருக்கிறது. லாவா தற்போது மூன்று புதிய மாணவர் டேப்லெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. லாவா அறிமுகம் செய்துள்ள டேப்லெட் அனைத்தும் கல்வியை ஆதரவு அம்சத்தோடு உருவாக்கப்பட்டுள்ளன.

லாவா நிறுவனம் லாவா மேக்னம் எக்ஸ்எல், லாவா ஆரா, லாவா ஐவரி ஆகிய மூன்று டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று டேப்லெட்களும் கல்வியை மையமாக வைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ரூ.9000 முதல் ரூ.15000 என்ற விலை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

லாவா அறிமுகம் செய்துள்ள மூன்று டேப்லெட்களும் வெவ்வேறு டிஸ்ப்ளே அளவுகளில் வருகிறது. ஆன்லைன் கல்வி ஆதரிப்போடு இந்த டேப்லெட் வருகிறது. டேப்லெட்கள் பிளிப்கார்ட் மூலம் தற்போது வாங்குவதற்கு கிடைக்கிறது. டேப்லெட் வாங்க முடிவெடுத்திருந்தால் லாவா டேப்லெட் சிறந்த தேர்வாகும்.

மாணவர்களின் கல்வியே கொள்கை: ரூ.9,499-க்கு டேப்லெட் அறிமுகம் செய்த லாவா

லாவாவின் மின்-கல்வி தொடரில் மேக்னம் எக்ஸ்எல், லாவா ஆரா, லாவா ஜவரி ஆகிய 3 டேப்லெட்கள் வெவ்வேறு டிஸ்ப்ளே அளவுகளில் வருகிறது. லாவா அறிவிப்புப்படி இந்த 3 புதிய டேப்லெட்களும் பெரிய டிஸ்ப்ளே அளவிலும், சக்தி வாய்ந்த பேட்டரி அளவிலும், சிறந்த ஆடியோ தர அம்சத்தோடு வருகிறது. இந்த 3 டேப்லெட்களின் நோக்கமும் மாணவர்களுக்கு தடையற்ற கற்றல் அனுபவத்தை வழங்கும் நோக்கத்தோடு வருகிறது.

லாவா மேக்னம் எக்ஸ்எல் டேப்லெட் விலை குறித்து பார்க்கையில், இந்த டேப்லெட் ரூ.15,499 என்ற விலையில் வருகிறது. லாவா மேக்னம் எக்ஸ்எல் டிஸ்ப்ளே அளவு 10.1 இன்ச் அளவோடு வருகிறது. இது ஹ்யூகல் 6100 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வருகிறது. டிஸ்ப்ளே 390 நிட்ஸ் பிரகாசத்துடன் ஐபிஎல் எல்சிடி பேலனலை கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டில் 2 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் பின்புறத்தில் 5 எம்பி கேமரா இருக்கிறது.

லாவா மேக்னம் எக்ஸ்எல் 32ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. அதோடு 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய வசதி இதில் இருக்கிறது. மேலும் இதில் மீடியா டெக் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. லாவா மேக்னம் எக்ஸ்எல் டார்க் க்ரே ஷேட் மற்றும் மெட்டாலிக் வடிவமைப்போடு வருகிறது.

லாவா ஆரா

மாணவர்களின் கல்வியே கொள்கை: ரூ.9,499-க்கு டேப்லெட் அறிமுகம் செய்த லாவா

லாவா ஆரா டேப்லெட்டின் விலை குறித்து பார்க்கையில், இந்த டேப்லெட் ரூ.12,999 என்ற விலையில் கிடைக்கிறது. லாவா ஆரா டேப்லெட் ஆனது 8 இன்ச் டிஸ்ப்ளே அளவு, 5100 எம்ஏஎச் நீண்டகால பேட்டரி ஆயுளுடன் வருகிறது. டேப்லெட் 32ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. மேலும் இதில் 256ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதி இருக்கிறது. மேலும் இந்த டேப்லெட்டில் 8எம்பி பின்புற கேமராவும் முன்புறத்தில் 5எம்பி கேமராவுடன் பொருத்தப்பட்டுள்ளது. லாவா ஆரா டேப்லெட் மெட்டாலிக் வடிவமைப்பு மற்றும் மீடியாடெக் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் செயலியுடன் வருகிறது.

லாவா ஐவரி

லாவா ஐவரி டேப்லெட் 7 இன்ச் டிஸ்ப்ளே அளவுடன் வருகிறது. இந்த மூன்று ரக டேப்லெட்டில் சிறிய ரக டிஸ்ப்ளே அளவுடன் வருகிறது. இந்த டேப்லெட் 7 இன்ச் அளவிலான டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 16ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது, மேலும் 256ஜிபி மெமரி விரிவாக்க வசதியும் இருக்கிறது. இந்த டேப்லெட்டில் 5 எம்பி முதன்மை பின்புற கேமரா, பின்புறத்தில் 2 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.9,499 ஆக இருக்கிறது.

ஆன்லைன் கல்விக்கு மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த டேப்லெட் இருக்கிறது. இந்த அனைத்து டேப்லெட்களும் இலவச படிப்புகளை ஆதரிக்கும் எடுக்சம் அணுகலோடு வருகிறது. எடுக்சம் உடனான கூட்டு லாவா டேப்லெட்களை கல்வி அணுகலை வழங்க அனுமதிக்கிறது. ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி சார்ந்த யூடியூப் சேனல்களுக்கு இந்த மின்-புக் டேப்லெட் அனைத்து வடிவிலான அம்சங்களையும் வழங்குகிறது.

லாவா மேக்னம் எக்ஸ்எல் டேப்லெட் இந்த மூன்று ரகத்தில் பெரிய டிஸ்ப்ளேவுடன் விலை உயர்ந்ததாக இருக்கிறது. இதன் விலை ரூ.15,499 ஆக இருக்கிறது. அதேபோல் இரண்டாம் ரக டேப்லெட் ஆனது லாவா ஆரா ஆகும். இந்த டேப்லெட் விலை ரூ.12,99 ஆக இருக்கிறது. மேலும் கடைசி ரக மிக குறைந்த டேப்லெட் ஆக இருக்கும் லாவா ஜவாரி டேப்லெட் விலை குறித்து பார்க்கையில் இது 9,499 ஆக இருக்கிறது. இந்த டேப்லெட் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் தற்போதே வாங்கக் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lava Launched its 3 New Tablets at Budget Price Under E-Education Series

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X