3ஜி, ஆன்டிராய்டு கிட்காட் கொண்ட லாவா ஐரிஸ் 370 வெளியானது
லாவா நிறுவனம் ஐரிஸ் 370 எனும் ஸ்மார்ட்போனை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ரூ.3,599க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இருந்தும் இந்த ஸ்மார்ட்போன் என்று முதல் கிடைக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

லாவா ஐரிஸ் 370 டூயல் சிம் கொண்டு ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது. இந்த ஸ்மார்ட்போன் 3.5 இன்ச் HVGA TFT டிஸ்ப்ளே, 1 ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் பிராசஸர் 256 எம்பி ராம், 512 எம்பி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளதோடு கூடுதலாக மெமரியை 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.
இந்த ஸ்மார்ட்போனில் 2 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா இருக்கின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, GPRS/ EDGE, Wi-Fi 802.11 b/g/n,மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியை பொருத்த வரை 1300 எம்ஏஎஹ் மூலம் சக்தியூட்டப்படுகின்றது.


Click it and Unblock the Notifications