Home
News

1206 மொபைல்.. பெரிய தேசிய கொடி அமைத்து கின்னஸ் சாதனை செய்த நிறுவனம் எது? கொடியின் நிறங்கள் என்ன சொல்கிறது?

லாவா (Lava) நிறுவனம் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 1206 எண்ணிக்கை கொண்ட லாவா பிளேஸ் 2 (Lava Blaze 2) ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி, இந்திய தேசிய கோடியை வடிவமைத்து, புதிய கின்னஸ் (Guinness) சாதனையை நிறுவனம் இப்போது படைத்துள்ளது.

லாவா மொபைல்ஸ் நிறுவனம், இந்தியக் கொடி வடிவில் மிகப்பெரிய அனிமேஷன் மொபைல் மொசைக்கை உருவாக்கியுள்ளது. இது புதிய கின்னஸ் சாதனையாக கின்னஸ் சாதனை அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் உள்ள DLF மாலில், லாவா நிறுவனம் சுமார் 1206 ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.

1206 மொபைல்.. பெரிய தேசிய கொடி அமைத்து கின்னஸ் சாதனை.. எந்த நிறுவனம்?

1206 எண்ணிக்கையான லாவா பிளேஸ் 2 (Lava Blaze 2) ஸ்மார்ட்போன்களை ஒன்றாக சேர்த்து அடுக்கி வைத்து, அதில் இந்திய தேசிய கொடியின் நிறங்களான காவி, வெள்ளை மற்றும் பச்சை ஆகிய நிறங்களை வெளிப்படுத்தும் படி, லாவா நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் ஒன்றின் பின் ஒன்றாக அடுக்கி வைத்திருந்தது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயமாக, கொடியின் மையப்பகுதியில் இருக்கும் 24 கோடுகளோடு இருக்கும் அசோக சக்கரமும் தெளிவாக காண்பிக்கப்படும் படி, லாவா நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அடுக்கி வைத்திருந்தது. நமது இந்திய கோடியில் இருக்கும் நிறங்கள் எதை குறிக்கிறதென்று உங்களுக்கு தெரியுமா?

காவி நிறம் வலிமையின் அடையாளத்தையும், தைரியத்தையும், போர் குணத்தையும் குறிக்கிறது. இந்த வலிமை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருப்பதால் தான் கிடைத்தது என்பதை விளக்கும் விதமாக காவி நிறம் தேசியக் கொடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொடியில் உள்ள வெள்ளை நிறம், அமைதி, அறியாமை, தூய்மை என்பதைக் குறிக்கிறது.

1206 மொபைல்.. பெரிய தேசிய கொடி அமைத்து கின்னஸ் சாதனை.. எந்த நிறுவனம்?

அதேபோல், மாநிலங்களுக்கு இடையே இருக்கும் அமைதியை நாம் நிலைநாட்டுவோம் என்ற சத்தியத்தை நினைவூட்டுகிறது. கொடியின் பச்சை நிறம், பாதிப்பில்லாத வகையில் வளர்ச்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் போன்ற அர்த்தங்களை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நீல நிறத்தில் இருக்கும் அசோக சக்கரத்தில் உள்ள 24 கோடுகள் வாழ்வின் சுழற்சியைக் காட்டுகிறது.

லாவா நிறுவனம், இத்தகைய பெருமைமிக்க தேசிய கொடியின் உருவத்தை Lava Blaze 2 ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி உருவாக்கி, குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த சாதனையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் கின்னஸ் உலக சாதனையாளர் தளத்தில் இருந்து அதிகாரப்பூர்வ நீதிபதியுடன் இந்த சாதனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

லாவா இன்டர்நேஷனலின் தலைவரும் வர்த்தகத் தலைவருமான சுனில் ரெய்னா, இந்த சாதனையை இந்தியா முறியடித்ததில் தனது பெருமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக, இந்திய நாட்டின் 77 வது சுதந்திர தினத்துடன் இந்த சாதனை ஒத்துப் போகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சாதனையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். லாவா அக்னி 2 இன் வெற்றியை இந்திய தொழில்நுட்ப தயாரிப்புகளின் திறனுக்கான சான்றாக இது நிகழ்த்தப்பட்டதாக அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.

1206 மொபைல்.. பெரிய தேசிய கொடி அமைத்து கின்னஸ் சாதனை.. எந்த நிறுவனம்?

இந்த சாதனையை முறியடிக்கும் சாதனைக்கு கூடுதலாக, லாவா மொபைல்ஸ் சமீபத்தில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. லாவா யுவா 2 (Lava Yuva 2), லாவா அக்னி 2 (Lava Agni 2), லாவா பிளேஸ் 5 ஜி (Lava Blaze 5G) மற்றும் லாவா யுவா 2 ப்ரோ (Lava Yuva 2 Pro) போன்ற பல புதுமையான ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது.

கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் அறிக்கையின் படி, இந்த Q2, 2023 ஆண்டின் போது லாவா நிறுவனம் பாதிக்கு பாதி அதிக வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுள்ளது. குறிப்பிடத்தக்க 53% YoY வளர்ச்சியில் இந்த ஸ்மார்ட்போன்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன என்று கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த லாவா இன்டர்நேஷனல் தலைவர் மற்றும் வணிகத் தலைவர் திரு. சுனில் ரெய்னா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Creates Guinness World Record With 1206 Lava Blaze 2 Mobile For Creating Largest Mobile Phone Mosaic
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X