திரும்ப வந்துட்டேனு சொல்லு- ரூ.8,699 க்கு அறிமுகமான LAVA Blaze கண்ணாடி ஸ்மார்ட்போன்!

|

போக்கோ சி31, ரியல்மி சி30, மோட்டோ இ32எஸ், இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ளே போன்ற பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக Lava Blaze அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 13 எம்பி பிரதான கேமரா, ஆண்ட்ராய்டு 12 ஆதரவோடு வெளியாகி இருக்கிறது. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அறிமுகமான Lava Blaze ஸ்மார்ட்போனின் அம்சம் மற்றும் விலையை பார்க்கலாம்.

விடாமுயற்சியாக பல்வேறு நடவடிக்கைகள்

விடாமுயற்சியாக பல்வேறு நடவடிக்கைகள்

இந்திய தொழில்நுட்ப நிறுவனமான லாவா பல்வேறு விலைப் பிரிவில் அவ்வப்போது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இருப்பினும் எந்த ஸ்மார்ட்போன்களும் எதிர்பார்த்த அளவு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதில்லை. ஆனால் லாவா விடாமுயற்சியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை லாவா அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,000 க்குள் வெளியாகி இருக்கிறது.

Lava Blaze என்ற புதிய ஸ்மார்ட்போன்

Lava Blaze என்ற புதிய ஸ்மார்ட்போன்

லாவா நிறுவனம் Lava Blaze என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லாவா ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் க்ளாஷ் ஃபினிஷிங் மற்றும் டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிட்டத்தக்க அம்சங்கள் மற்றும் விலையை விரிவாக பார்க்கலாம்.

லாவா ப்ளேஸ் சிறப்பம்சங்கள்

லாவா ப்ளேஸ் சிறப்பம்சங்கள்

Lava Blaze ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். லாவா பிளேஸ் ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி 1600 x 720 பிக்சல்கள் HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. வாட்டர் டிராப் நாட்ச் வசதியோடு முன்பக்க கேமரா இருக்கிறது. ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது.

மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப் ஆதரவுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போன்

மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப் ஆதரவுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போன்

Lava Blaze ஸ்மார்ட்போனானது ஹூட்டின் கீழ் மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த சிப்செட் மிகவும் பழமையானது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலமாக 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

டிரிபிள் கேமரா அமைப்பு

டிரிபிள் கேமரா அமைப்பு

Lava Blaze ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கிறது. 13 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் VGA சென்சார் வசதி இருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் வசதியோடு 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

Lava Blaze ஸ்மார்ட்போனானது சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 ஆதரவைக் கொண்டிருக்கிறது. USB Type-C வசதியோடு கூடிய 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அனைத்தும் ரூ.10,000 விலைப் பிரிவில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களிலும் இருக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

அளவான ரேம் மற்றும் நிறைவான சேமிப்பு வசதி

அளவான ரேம் மற்றும் நிறைவான சேமிப்பு வசதி

லாவா ப்ளேஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரத்தை பார்க்கலாம். LAVA Blaze ஸ்மார்ட்போனானது ஒரே வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகி இருக்கிறது. இதன் விலை ரூ.9,699 ஆகும். தற்போது சிறப்பு சலுகையாக ரூ.8,699 என கிடைக்கிறது.

எப்போது விற்பனை, தள்ளுபடி விவரம்

எப்போது விற்பனை, தள்ளுபடி விவரம்

சலுகை விலையில் ஸ்மார்ட்போனை வாங்க பிளிப்கார்ட் தளத்தை அணுக வேண்டும். பிளிப்கார்ட் தளத்தில் பேங்க் ஆஃப் பரோடா கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போன் வாங்கும் போது 10% தள்ளுபடி கிடைக்கும். தற்போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது. ஜூலை 15 முதல் லாவா ப்ளேஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
LAVA Blaze Smartphone Launched in India With Android 12, Triple Rear Camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X