Home
News

Lava Blaze Duo 5G: போட்றா வெடிய.. பட்ஜெட்ல 2 டிஸ்பிளே.. 8GB + 8GB ரேம்.. மாஸான கேமரா.. ரிலீஸ் தேதி இதான்..

லாவா (Lava) நிறுவனம் அதன் அடுத்த புதிய ஸ்மார்ட்போன் மாடலான லாவா பிளேஸ் டூவோ 5ஜி (Lava Blaze Duo 5G) போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போனை பற்றிய பல டீஸர் தகவல்களை நிறுவனம் வெளியிட்டு வந்தது. இப்போது ஒருவழியாக இந்த டூயல் டிஸ்பிளே (dual display) கொண்ட லாவா பிளேஸ் டூவோ 5ஜி போனின் அறிமுக தேதியை (launch date) நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதன் எதிர்பார்க்கப்படும் அம்சம் மற்றும் விலை பற்றிய தகவல்களும் லீக் ஆகியுள்ளது. வாருங்கள் அவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

லாவா பிளேஸ் டூவோ 5ஜி (Lava Blaze Duo 5G) ஸ்மார்ட்போன் சாதனத்தை லாவா நிறுவனம் வரும் டிசம்பர் 16, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. இந்த புதிய லாவா பிளேஸ் டூவோ 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் டூயல் டிஸ்பிளே கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போனாக (dual display budget smartphone) வெளிவரவுள்ளது. அதாவது, இதில் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என்று மொத்தமாக இரண்டு டிஸ்பிளேக்கள் இடம்பெறுகிறது.

Lava Blaze Duo 5G: போட்றா வெடிய.. பட்ஜெட்ல 2 டிஸ்பிளே.. 8GB + 8GB ரேம்

போட்றா வெடிய.. பட்ஜெட்ல 2 டிஸ்பிளே.. கலக்குது புது லாவா பிளேஸ் டூவோ 5ஜி (Lava Blaze Duo 5G):

இந்த புதிய லாவா பிளேஸ் டூவோ 5ஜி (Lava Blaze Duo 5G) சாதனம் 6.67" இன்ச் அளவு கொண்ட மெயின் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) ஆதரவை கொண்டுள்ளது. இது வளைந்த 3D அமோலேட் (AMOLED) டிஸ்பிளேவை கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது. இத்துடன், இந்த போனின் பேக் பேனலில் 1.58" இன்ச் அளவு கொண்ட AMOLED டிஸ்பிளே வழங்கப்படும்.

லாவா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த, லாவா அக்னி 3 5ஜி (Lava Agni 3 5G) போனில் காணப்படும் செக்கண்டரி டிஸ்பிளேவான 1.74" இன்ச் டிஸ்பிளேவை விட, லாவா பிளேஸ் டூவோ 5ஜி போனில் காணப்படும் டிஸ்பிளே சற்று சிறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பின்பக்க இரண்டாம் டிஸ்பிளே, உங்களுக்கு வரும் நோட்டிபிகேஷன், அழைப்பு விபரம் மற்றும் பல ஆப்ஸ் தகவல்களை டிஸ்பிளேவில் காண்பிக்கிறது.

Lava Blaze Duo 5G இல் 8GB ரேம் + 8GB விர்ச்சுவல் ரேம்.. மாஸான கேமரா:

லாவா பிளேஸ் டூவோ 5ஜி (Lava Blaze Duo 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 6GB ரேம் (RAM) + 6GB விர்ச்சுவல் ரேம் (virtual RAM) கொண்ட ஒரு மாடலாகவும், மற்றும் 8GB ரேம் + 8GB விர்ச்சுவல் ரேம் உடன் 128GB UFS 3.1 ஸ்டோரேஜ் (storage) ஆதரவை கொண்ட ஸ்டோரேஜ் வேரியண்ட் (storage variants) மாடலாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

Lava Blaze Duo 5G ஸ்மார்ட்போனில் நிறுவனம் 64MP மெயின் ரியர் கேமராவை (rear camera) வழங்கியுள்ளது. இது இரண்டாம் நிலை கேமராவுடன் இணைக்கப்பட்டு டூயல் கேமரா (dual camera) அம்சத்தை வழங்குகிறது. இந்த டிவைஸின் முன்பக்கத்தில், லாவா நிறுவனம் 16MP செல்பி கேமராவை (selfie camera) வழங்கியுள்ளது. இந்த Lava Blaze Duo 5G ஸ்மார்ட்போன் சாதனம் இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (in-display fingerprint scanner) ஆதரவை பெறுகிறது.

Lava Blaze Duo 5G விலை என்ன இருக்கும்?

லாவா பிளேஸ் டூவோ 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (fast charging) ஆதரவுடன் 5000mAh பேட்டரியை (battery) பேக் செய்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனை லாவா நிறுவனம் செலெஸ்டியல் ப்ளூ (Celestial Blue) மற்றும் ஆர்டிக் வைட் (Arctic white) நிறங்களில் (Lava Blaze Duo 5G colours) வழங்கவுள்ளது. இது பிரீமியம் மேட் பினிஷ் (premium matte finish) உடன் வெளிவரவுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் ஆண்ட்ராய்டு 15 (Android 15) அப்டேட்டை பெறுகிறது. Lava Blaze Duo 5G சாதனம் அமேசான் (Amazon.in) வழியாக பிரத்தியேகமாக விற்பனைக்கு கொண்டுவரப்படும். இந்த போன் வரும் டிசம்பர் 16ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை ரூ. 15,000 முதல் ரூ. 20,000 விலைக்குள் இருக்குமென்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze Duo 5G Dual Display Budget Smartphone Launching On December 16 2024 In India Via Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X