Home
News

Lava Blaze 2 மீது ஒரு கண்ணு இருக்கட்டும்! ரூ.10,000 விலையில் ராக்கெட் வேக Smartphone!

Lava நிறுவனம் ரூ.10,000 விலை பிரிவில் ஒரு சூப்பர் பாஸ்ட் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதை நிறுவனம் Lava Blaze 2 என்று அழைக்கிறது. 10,000 விலையில் மொத்தம் 11ஜிபி ரேம் உடன் வரும் முதல் சாதனம் இதான்.

லாவா நிறுவனம், கடந்த ஜூலை 2022 இல், லாவா பிளேஸ் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. அப்போதிருந்து, நிறுவனம் தொடர்ந்து Lava Blaze NXT, Lava Blaze Pro மற்றும் Lava Blaze 5G ஆகிய ஸ்மார்ட்போன்களை பிளேஸ் தொடரின் கீழ் அறிமுகப்படுத்தி வருகிறது. இப்போது, ​​​இந்த வரிசையின் கீழ் புதிய லாவா பிளேஸ் 2 என்ற பெயருடன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த பிராண்ட் தயாராகி வருகிறது.

Lava Blaze 2 மீது ஒரு கண்ணு இருக்கட்டும்! ரூ.10000 விலையில் புது போன்!

லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போனுக்கான அமேசான் பட்டியல் இப்போது லைவ் செய்யப்பட்டுள்ளது. இது போனின் வருகை மிக அருகில் உள்ளதென்பதை தெளிவாக காண்பிக்கிறது. இந்த சாதனமும் அதன் முந்தைய மாடல் போல, ஒரு பிளாட்-எட்ஜ் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த சாதனம் 128GB UFS ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்பதை பட்டியல் வெளிப்படுத்துகிறது.

சரி, வாருங்கள், இந்த புதிய Lava Blaze 2 போனில் நாம் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம். ரூ.10,000-க்கு குறைவான விலை பிரிவில், AnTuTu மதிப்பெண்களின் அடிப்படையில், Lava Blaze 2 மிகவும் வேகமான ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று Lava கூறுகிறது. இந்த சாதனம் 6ஜிபி ரேம் கொண்டதாக இருக்கும் என்றும், இது 5ஜிபி விர்ச்சுவல் ரேமை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

லாவா பிளேஸ் 2 சமீபத்தில் கீக்பெஞ்ச் பெஞ்ச்மார்க் தரவுத்தளத்தில் காணப்பட்டது. இது UniSoC சிப்செட் உடன் கீக்பெஞ்ச் பட்டியலில் காணப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 உடன் வரும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர இந்த போன் பற்றிய மற்ற விபரங்கள் நமக்கு இன்னும் தெரியவில்லை. இதற்கிடையில், Lava Blaze NXT ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளை பற்றி விரைவாக பார்க்கலாம். Lava Blaze 2 இதனை தழுவிய அம்சங்களை கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

Lava Blaze 2 மீது ஒரு கண்ணு இருக்கட்டும்! ரூ.10000 விலையில் புது போன்!

இந்த சாதனம் 6.5 இன்ச் அளவுள்ள HD+ ரெசல்யூஷன் IPS LCD டிஸ்ப்ளேவை வழங்குகிறது. Lava Blaze NXT ஸ்மார்ட்போன் MediaTek Helio G37 சிப்செட் உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 உடன் 3ஜிபி விர்ச்சுவல் ரேம் அம்சத்தையும் வழங்குகிறது. இது 13எம்பி பிரைமரி ஷூட்டர் உட்பட டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

இது 8MP முன்பக்க ஷூட்டரை வழங்குகிறது. இது 5000mAh பேட்டரி உடன் நார்மல் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. டேட்டா மற்றும் பேட்டரி சார்ஜிங்கிற்கு டைப்-சி போர்ட்டை கொண்டுள்ளது. Lava Blaze NXT கிளாஸ் ரெட், கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் கிரீன் வண்ண விருப்பங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வரவிருக்கும் புதிய Lava Blaze 2 சாதனத்தில் சிறந்த அம்சங்களை நாம் எதிர்ப்பார்கலாம். குறிப்பாக இது 10,000 விலையில் அறிமுகமாகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze 2 Teased As Fastest Mobile Under Rs 10000 Via Amazon To Launch In India Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X