Home
News

100-க்கு 200% வெற்றி.. ரூ.10,000 விலையில் தீயாய் விற்பனை.. Lava AGNI 3 போனில் அப்படி என்ன இருக்கு? உண்மை என்ன?

லாவா (Lava) நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் சாதனமான லாவா அக்னி 3 (Lava AGNI 3) ஸ்மார்ட்போன் சாதனத்தை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த போனின் அறிமுகத்திற்கு பிறகு, லாவா நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், அதன் வெற்றியை 200% அதிகரித்து வெற்றிபெற்றுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. கடந்த Lava AGNI 2 மாடலை விட, புதிய Lava AGNI 3 மாடல் நிறுவனத்தின் வளர்ச்சியை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியுள்ளதாக லாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்படி இந்த போனில் இந்த மக்கள் என்ன பார்த்தார்கள்? எதனால், இந்த போனின் விற்பனை 200% உயர்ந்தது? இந்த அசாதாரணமான வளர்ச்சிக்கு என்ன கரணம் என்பதை தெளிவாக பார்க்கலாம். 100-க்கு 100 என்றாலே அது முழுமையான வெற்றி என்று பாராட்டப்படும் காலத்தில், லாவா நிறுவனம் 100-க்கு 200% வெற்றி அடைந்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்கு நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலான Lava AGNI 3 தான் காரணம் என்றும் லாவா தெரிவித்துள்ளது.

100-க்கு 200% வெற்றி.. ரூ.10,000 விலையில் தீயாய் விற்பனை.. Lava AGNI 3

லாவா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அதன் விளம்பரம் ப்ரேச்சரத்தின் முடிவுகள் வியப்படையும் அளவீடை காண்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவரை 118 மில்லியன் மக்கள் லாவாவின் விளம்பரத்தின் மூலம், அதன் தயாரிப்புடன் இணைந்துள்ளனர். இதில் 1.5 மில்லியன் மக்கள் பல தேடல் தளங்கள் வழியாக லாவா தயாரிப்புகளை பார்வையிட்டுள்ளனர். இதன் விளைவாக லாவா போன்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

குறிப்பாக, லாவா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த Lava AGNI 3 ஸ்மார்ட்போன் மக்களிடையே கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. காரணம், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் வெறும் ரூ. 20,000 விலைக்குள் டூயல் AMOLED டிஸ்பிளேவுடன் பல அட்டகாசமான அம்சங்களை அடக்கிய ஸ்மார்ட்போனாக மக்களை வசீகரித்துள்ளது. இந்த போனில் நிறுவனம் 50MP ட்ரிபிள் AI கேமராவை வழங்கியுள்ளது.

மறுபுறம், Lava Agni 3 சாதனம் ஒரு பெஸ்டான பட்ஜெட் செக்மென்ட் 5G போனாக வெளிவந்து அதிகமான யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது 8GB+128GB ஸ்டோரேஜ் உடன் டைமென்சிட்டி 7300X சிப்செட் (Dimensity 7300X Chipset) உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் மலிவு விலையில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charge) உடன் 5000mAh பேட்டரியை (Battery) வழங்குகிறது.

இது ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 15, 16 மற்றும் 17 அப்கிரேட்களை (Android 15,16 & 17 Upgrades ) பெரும் உறுதியை பெற்றுள்ளது. இத்தகைய மலிவு விலையில் இப்படி ஒரு சக்தி வாய்ந்த மற்றும் அபாரமான டூயல் டிஸ்பிளே ஸ்மார்ட்போன் கிடைத்தால், யார் தான் இந்த போனை வேண்டாம் என்று கூறுவார்கள். இந்த போனின் மூலம் லாவா நிறுவனம் 200% வெற்றி அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த போனிற்கு அடுத்தபடியாக, லாவா நிறுவனம் இந்த நவம்பர் மாதத்தில் லாவா யுவா 2 5ஜி (Lava YUVA 2 5G) என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 10,000 விலையில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, நிறுவனம் ரூ. 20,000 விலை பிரிவில் Lava Blaze DUO 5G என்ற புதிய ஸ்மார்ட்போனை டூயல் டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யுமென்றும் அறிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava AGNI 3 saw 200 percentage growth in India Upcoming Lava Yuva 2 and Lava Blaze DUO 5G Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X