வெறித்தனமான 5G போன் இந்தியா வருது.! விலையை கேட்டால் நீங்களே ஒன்னு வாங்குவீங்க.!
இந்தியாவில் 5ஜி மொபைல் போன்களின் (5G Mobile phones) விற்பனை சூடு பிடிக்கத்துவங்கிவிட்டது. இப்போது, மக்கள் புதிதாக வாங்க நினைக்கும் ஸ்மார்ட்போனில் கட்டாயம் 5ஜி இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறார்கள். 5ஜி பயன்படுத்த விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் மத்தியில் 5ஜி மோகம் அதிகரித்துள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது.
5ஜி போன்கள் என்று பார்க்கையில், மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் 5ஜி டிவைஸ்களுக்கு தான் இப்போது இந்தியாவில் மவுசு அதிகமாகவுள்ளது. இந்தியா பட்ஜெட் போன்களுக்கான முக்கிய சந்தையாக திகழ்வதற்கு இந்தியர்களே காரணம். இப்படி குறைந்த விலையில் 5ஜி உடன் சிறந்த அம்சத்தை வழங்கி, மக்கள் மனதை கவர்ந்த போன்களில் Lava Agni 5G சாதனமும் ஒன்று. பட்ஜெட் விலையில் வெறித்தமான போன் என்று அனைவராலும் இது பாராட்டப்பட்டது.

லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன்.!
இந்திய சந்தையில் Lava Agni 5G ஸ்மார்ட்போனை நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இப்போது வெளியான தகவலின் படி, லாவா அக்னியின் வாரிசான லாவா அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G) ஸ்மார்ட்போன் மாடலை நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக வெளிப்படுத்துகிறது. இந்த முறை அக்னி வரிசையின் கீழ் நிறுவனம் ஒரு ப்ரோ வேரியண்ட்டை அறிமுகப்படுத்தலாம் என்றும் டிப்ஸ்டர் பராஸ் குக்லானி கூறியுள்ளார்.
லாவா அக்னி 2 5ஜி சாதனம் இந்தியாவில் மிட்ரேஞ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 1080 சிப்செட் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் டிவைஸ் ஏப்ரல் அல்லது அதற்கு பின் தொடரும் நாட்களில் அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் Lava Agni 2 5G என்ன விலையுடன், என்ன அம்சத்தை பெரும் என்பது இங்கே.

Lava Agni 2 5G சிறப்பம்சம்
இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது 6.5' இன்ச் கொண்ட எச்டி+ உடன் 90Hz ரெப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 1080 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. லாவா அக்னி 2 5ஜி போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரவைப்புலத்து. இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைக் கொண்டதாக உள்ளது. இது பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டிருக்கும்.
இதில் பிரைமரி கேமரா ஷூட்டரில் OIS ஆதரவுடன் 50MP சென்சார் உடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் முன்பக்கத்தில் 16MP முன்பக்க ஷூட்டர் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. லாவா அக்னி 2 போன் ஆனது 5000mAh பேட்டரியை பேக் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது. லாவா அக்னி 2 ஆனது டைப்-சி போர்ட் மூலம் 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். இதன் விலை பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 25,000-க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புது 5ஜி போன் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இதற்கு முன் வெளியான லாவா அக்னி 5ஜி போனிற்கு இந்தியாவில் அதிக வரவேற்பு கிடைத்ததனால், இந்த மாடலுக்கும் வரவேற்பு உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications