4 கேமரா.. டபுள் 8ஜிபி ரேம்.. பெரிய டிஸ்பிளே.. 5ஜி போன்.. வாய் பிளக்கும் ஸ்பெக்ஸுடன் Lava Agni 2 5G சேல்ஸ்..
பட்ஜெட் பிரியர்களுக்கான பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. லாவா நிறுவனத்தின் லாவச அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G) மொபைல் சாதனம் இப்போது விற்பனைக்காக இந்தியாவில் களமிறங்கியுள்ளது. இது இப்போது சலுகை விலையுடன் வாங்குவதற்கு கிடைக்கிறது.
லாவா அக்னி 2 5ஜி சாதனம் உண்மையில் ஒரு சூப்பர் பேக்கேஜ் சாதனமாகும். காரணம், இது பட்ஜெட் (Budget) விலையில் 4 கேமரா, 8 ஜிபி ரேம் (RAM) மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) அம்சம், மிக பெரிய டிஸ்பிளே மற்றும் போனை ஒரு நாள் முழுக்க தடையில்லா இயக்கத்தில் வைக்க கச்சிதமான பேட்டரி என்று பல அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

Lava Agni 2 5G ஆனது ஒரு அற்புதமான 6.78' இன்ச் முழு HD+ டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது. இதன் பெரிய டிஸ்பிளே அளவு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக அமைந்துள்ளது. இந்த டிஸ்பிளே 1080 x 2460 பிக்சல் தெளிவுத்திறன் உடன் வருகிறது. இதன் காரணமாக இது மேம்பட்ட காட்சி தரம் மற்றும் துடிப்பான வண்ணங்களை வழங்குகிறது.
இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) வீதத்தைக் கொண்டுள்ளது. இதன் சாஃப்ட் டச் அம்சம், பயனர்களின் டச் அனுபவத்தை மென்மையாக்குகிறது. நீங்கள் திரைப்படங்களைப் பார்க்கிறீர்கள் அல்லது உலாவுகிறீர்கள் என்றால், உங்களால் டீப்பான நிறங்களை உணர முடியும்.
லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு அற்புதமானது. ஏனெனில் இதில் ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 4 கேமராக்கள் மொபைல் போன் (4 camera mobile phone) கொடுக்கப்பட்டுள்ளது. இது 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் (Ultra wide) சென்சார் மற்றும் இரண்டு 2MP மேக்ரோ (Macro) கேமராக்கள் மற்றும் ஆட்டோஃபோகஸ் (Auto focus) கொண்ட டெப்த் சென்சார் உட்பட நான்கு கேமராக்களைக் கொண்டுள்ளது.

இதில் குவாட் கேமரா அமைப்பு (Quad Camera Setup) இருப்பதினால், ஏராளமான கேமரா மோட்களை பயன்படுத்தி பல்வேறு விதமான புகைப்படங்களை எடுக்க முடியும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு உதவும் வகையில் இதன் முன்பக்கத்தில் 16MP பஞ்ச்-ஹோல் கேமராவையும் (Punch hole camera) கொண்டுள்ளது. லாவா அக்னி 2 சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7050 பிராசஸர் (MediaTek 7050 Processor) உடன் வருகிறது.
மீடியாடெக் டைமன்சிட்டி 7050 பிராசஸர் (MediaTek 7050 Processor) உடன் வரும் முதல் இந்திய ஸ்மார்ட்போன் சாதனமாக லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் திகழ்கிறது. இந்தியாவின் முதல் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 பிராசஸர் (MediaTek 7050 Processor) சிப்செட் சாதனம் இது மட்டுமே. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் அம்சத்தை கொண்டுள்ளது.
இது மாலி ஜி68 ஜிபியு (Mali-G68 GPU) அம்சத்தை கொண்டுள்ளது. இது உங்கள் போனில் இருக்கும் மொபைல் ஆப்ஸ் (Mobile Apps) மற்றும் கேம்களுக்கான கிராபிக்ஸ்களை (Graphics) மிகவும் சிறப்பாக கையாளுகிறது. இத்தகைய சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போனை தடையில்லாமல் இயக்க, இதன் ஹூட்டின் அடியில் 4700mAh Li-Po பேட்டரியுடன் (Battery) இது வருகிறது.

இதன் விலை பற்றி பேசுகையில், இந்த லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் சாதனமானது இப்போது ரூ. 25,999 விலைக்கு (Price) பதிலாக ரூ.21,999 விலையில் வாங்க தற்போது கிடைக்கிறது. லாவா போனின் இந்த அற்புதமான டீல் இப்போது அமேசான் (Amazon) இல் கிடைக்கிறது. Lava Agni 2 5G இன் விலை ஆன்லைன் ஸ்டோரில் 15% குறைந்துள்ளது. இதன் மூலம் ரூ.25,999 இலிருந்து ரூ.21,999 ஆக குறைந்துள்ளது.
நீங்கள் பரிமாற்றம் மற்றும் வங்கி ஒப்பந்தங்களையும் சேர்த்து பயன்படுத்தினால், கூடுதல் சலுகையையும் பெறலாம். இத்துடன் கூடுதலாக இந்த லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனின் மீது எக்ஸ்சேஞ் சலுகையும் (Exchange offer) கிடைக்கிறது. இதன் மூலம் இந்த சாதனத்தின் விலையை ரூ.20,850 வரை குறைக்கலாம். உங்களிடம் இருக்கும் பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து மிக குறைந்த விலையில் இந்த போனை தூக்கி செல்லுங்கள்,


Click it and Unblock the Notifications








