லாவா ஏ97 : ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ உடன் ரூ.5,949/-க்கு அறிமுகம்..!
லாவா இந்தியாவில் ஒரு புதிய தொடர் ஸ்மார்ட்போன் ஆன ஏ97 கருவியை வெளியிட்டுள்ளது அதன் விலை ரூ.5,949 என்று தற்போது அந்நிறுவனத்தின் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது உடன் விரைவில் ஆன்லைன் சேனல்கள் வழியாக சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாவா ஏ97 கருவியில் ஒரு 5 இன்ச் எப்டபுள்யூவிஜிஏ (FWVGA) (480x854 பிக்சல்கள்) டிஎஃப்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இரட்டை சிம் ஸ்லாட் கொண்ட இது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளம் மற்றும் 4ஜி வோல்ட் ஆதரவும் கொண்டுள்ளது (ஆனால் ஒரு நேரத்தில் ஒரே ஒரு 4ஜி சிம் மட்டுமே ஆதரவு வழங்கும்)
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இது இந்தியாவின் 4ஜி எல்டிஇ பேண்ட்களை ஆதரிக்கிறது - எப்டிடி- எல்டிஇ பேண்ட் 3 (1800MHz), பேண்ட் 5, மற்றும் ட்டிடிடி-எல்டிஇ பேண்ட் 40 (2300MHz) ஆகியவைகளை ஆதரிக்கிறது.
பிற சிறப்பம்சங்கள் :
எச்டி குரல் அழைப்பு ஆதரவு : ஆம்
முன்பக்க கேமிரா : எல்இடி பிளாஷ் கொண்ட 5 எம்பி ஆட்டோபோக்கஸ்
பின்பக்க கேமிரா : nஎல்இடி பிளாஷ் கொண்ட 5 எம்பி
ப்ராசஸர் : 1.3 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர்
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரேம் : 1ஜிபி
மெமரி : 8 ஜிபி (எஸ்டி கார்ட் கொண்டு 32 ஜிபி வரையிலாக நீட்டிக்கலாம்)
பேட்டரி : 2350 எம்ஏஎச் திறன்
பிற இணைப்பு வசதிகள் : ஜிபிஆர்எஸ்/எட்ஜ், 3ஜி, 4ஜி, வைஃபை 802.11 பி/ஜி/என், ப்ளூடூத், எப்எம் ரேடியோ,மைக்ரோ யூஎஸ்பி மற்றும் ஜிபிஎஸ்
வண்ணம் : நீளம், தங்கம் மற்றும் சாம்பல்
எடை : (145x72x9.2எம்எம்) அளவீடு கொண்டு160 கிராம்
மேலும் படிக்க :
மோட்டோ கருவிகளுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு நௌக்கட்!


Click it and Unblock the Notifications