விஸ்வரூபம் எடுக்கும் VI.. ரூ.401க்கு 200GB டேட்டா! பிரைம், ஹாட்ஸ்டார் இன்னும் பல! இப்போ வாங்க..

|

புதிய Vi Max போஸ்ட்பெய்ட் திட்டங்களை விஐ அறிவித்திருக்கிறது. இதில் வரம்பற்ற குரலழைப்பு மாதத்திற்கு 3000 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல சலுகைகள் அடங்கும். வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளும் இந்த திட்டத்தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. விஐ வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ரீசார்ஜ் பிளான்கள் என்றே இதை குறிப்பிடலாம்.

விஸ்வரூபம் எடுக்கும் விஐ

விஸ்வரூபம் எடுக்கும் விஐ

இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் பிற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சமீபத்தில் அறிமுகமான ஜியோ அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் ஏர்டெல் நிறுவனமானது ஜியோவுக்கு கடுமையான போட்டியாக இருக்கிறது. மூன்றாவது இடத்தில் இருக்கும் விஐ சமீப காலமாக வாடிக்கையாளர்களை இழந்த நிலையில் இருந்தது. இந்த நிலையில் விஐ புதிய மேக்ஸ் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை திருப்தி அடைய செய்திருக்கிறது.

புதிய Vi Max போஸ்ட்பெஸ்ட் திட்டங்கள்

புதிய Vi Max போஸ்ட்பெஸ்ட் திட்டங்கள்

Vi (Vodafone Idea) இந்தியாவில் புதிய Vi Max போஸ்ட்பெஸ்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களில் டேட்டா, வாய்ஸ் காலிங், சர்வதேச ரோமிங் (ஐஆர்) உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வரம்பற்ற முறையில் வழங்கப்படுகின்றன. Vi Max திட்டங்களானது நான்கு விலைப்பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை ரீசார்ஜ் திட்டம் விலை கம்மி தான்

அடிப்படை ரீசார்ஜ் திட்டம் விலை கம்மி தான்

Vi Max அடிப்படை விலை ரூ.401 முதல் தொடங்கி ரூ.1101 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அடிப்படை ரீசார்ஜ் திட்டமே அதிக நன்மைகளை கொண்டிருக்கிறது. உயர்ந்த நிலையில் உள்ள ரீசார்ஜ் திட்டங்கள் பல்வேறு சலுகைகளைக் கொண்டுள்ளது.

நவம்பர் 1 முதல் அனைவருக்கும்

நவம்பர் 1 முதல் அனைவருக்கும்

இந்த விஐ மேக்ஸ் ரீசார்ஜ் திட்டமானது நவம்பர் 1 ஆம் தேதி முதலே இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கத் தொடங்குகிறது. அதேபோல் அனைத்து புதிய மேக்ஸ் திட்டங்களும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் மாதத்திற்கு 3000 எஸ்எம்எஸ் நன்மைகளைக் கொண்டிருக்கிறது.

பல்வேறு சலுகைகள் உடன் ரூ.401 ரீசார்ஜ் திட்டம்

பல்வேறு சலுகைகள் உடன் ரூ.401 ரீசார்ஜ் திட்டம்

அடிப்படை விலையில் கிடைக்கும் Max 401 ரீசார்ஜ் திட்டமானது பெயர் குறிப்பிடுவது போல் ரூ.401 என்ற விலையில் கிடைக்கிறது. இதில் 50ஜிபி டேட்டா மற்றும் 200ஜிபி ரோல்-ஓவர் டேட்டா நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல் பயனர்கள் இரவு நேரத்தில் வரம்பற்ற டேட்டா நன்மைகளைப் பெறுவார்கள். கூடுதல் திட்ட பலன்களாக 12 மாதங்களுக்கு இலவச சோனி லைவ் மொபைல் அணுகல், விஐ மூவிஸ் மற்றும் டிவி அணுகல், 1000 விஐ கேம்கள், ஹங்காமா மியூசிக் அணுகல் என பல சலுகைகள் கிடைக்கிறது.

விஐ மேக்ஸ் 501 திட்டம்

விஐ மேக்ஸ் 501 திட்டம்

விஐ மேக்ஸ் இன் இரண்டாவது ரீசார்ஜ் திட்டம் மேக்ஸ் 501 திட்டமாகும். பெயர் குறிப்பிடுவது இதன் விலை ரூ.501 ஆகும். இந்த திட்டத்தில் 90 ஜிபி மாதாந்திர டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் அமேசான் பிரைமுக்கான 6 மாத சந்தாவும், டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான 12 மாத சந்தாவும் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 5 கோல்ட் கேம்கள் அணுகலும் கிடைக்கிறது.

வரம்பற்ற டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டம்

வரம்பற்ற டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டம்

அடுத்த திட்டம் Vi Max 701 ஆகும். இதன் விலை ரூ.701 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வரம்பற்ற டேட்டா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. 12 மாத சூப்பர் டிஸ்னி+ ஹார்ட்ஸ்டார் சந்தா மற்றும் 6 மாத அமேசான் பிரைம் சந்தா அணுகலும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ப்ரீமியம் ரீசார்ஜ் திட்டம்

ப்ரீமியம் ரீசார்ஜ் திட்டம்

மேக்ஸ் ரீசார்ஜ் திட்டத்தில் ப்ரீமியம் திட்டமாக இருப்பது Vi Max RedX 1101 திட்டம் ஆகும். இதன் விலை ரூ.1101. Vi Max 701 போன்ற பலன்கள் இந்த திட்டத்திலும் வழங்கப்படுகிறது. இதில் கூடுதலாக மேக் மை ட்ரிப், ஏர்போர்ட் லவுஞ்ச் அணுகல் நான்கு முறைகளுக்கு வழங்கப்படுகிறது. ரூ.2999 மதிப்புள்ள ஐஆர் ரோமிங் பேக் சலுகையும் கிடைக்கிறது. கூடுதலாக பயனர்கள் 12 மாதத்திற்கான சோனி வைர் ப்ரீமியம் சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Launched Vi Max Recharge Plans: 200GB data for Rs.401! Amazon Prime, Hotstar and more

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X