Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. உண்மையை அம்பலப்படுத்திய ஓபன் சிக்னல்!
இந்திய டெலிகாம் துறையானது, மிகவும் முக்கியமான கட்டத்தில் பயணித்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை என்று நம்புகிறோம்!
இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகமாகி உள்ள நிலைப்பாட்டில், அடுத்து வரும் சில மாதங்கள் "யார் டாப்பு!" என்பதை மட்டுமின்றி "யாரு டூப்பு?" என்கிற உண்மையையும் அம்பலப்படுத்த போகிறது!
இதற்கிடையில் "இப்போதே" ஓரு உண்மை தெரிய வந்துள்ளது!

ஷாக் ஆகிப்போன ஜியோ, ஏர்டெல் வாசிகள்!
இதற்கிடையில், ஓபன் சிக்னல் (Opensignal) வழியாக கிடைத்துள்ள புதிய தரவுகள், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை மட்டுமின்றி.. ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்களையும் ஷாக் ஆக்கி உள்ளது!
அதென்ன தரவுகள்? ஏர்டெல் மற்றும் ஜியோ யூசர் ஷாக் ஆகும்படி என்ன நடந்துள்ளது? இவ்விரு நிறுவனங்களில் உண்மையிலேயே யாரு டாப்பு? யாரு டூப்பு? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

ஓபன் சிக்னல் - என்றால் என்ன?
ஓபன் சிக்னல் வழியாக கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளை பற்றி பார்க்கும் முன்னர், ஓபன் சிக்னல் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
அப்போது தான், இந்த தரவுகள் எவ்வளவு முக்கியமானது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்!

பகுப்பாய்வு செய்வதில் கில்லாடி!
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், Opensignal என்பது "மொபைல் நெட்வொர்க் அனுபவத்தை அளவிடுவதில்" நிபுணத்துவம் பெற்ற ஒரு சுயாதீன பகுப்பாய்வு நிறுவனம் (Independent analytics company) ஆகும்.
இந்நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல்-ஐ குறிப்பிட்டு சில முக்கியமான தரவுகளை பகிர்ந்துள்ளது.
அந்த தரவுகள் மேற்குறிப்பிட்ட இரண்டு டெலிகாம் நிறுவனங்களின் சில முகமூடிகளை கிழிக்கும்படி உள்ளன என்றே கூறலாம்!

விளம்பரம் செய்தால் மட்டும் போதுமா?
"நாங்கள் தான் பெஸ்டு!", "எங்களுடைய சேவைகள் தான் சிறந்தது" என்று ஜியோவும், ஏர்டெல்லும் மாறி மாறி விளம்பரம் செய்து கொள்வது ஒருபக்கம் இருக்க..
உண்மையிலேயே.. எந்த நிறுவனம் எந்தெந்த சேவைப்பிரிவுகளில் சிறப்பாக செயல்படுகிறது? யார் உண்மையான வெற்றியாளர்? என்கிற உண்மையை ஓபன் சிக்னல் அம்பலப்படுத்தி உள்ளது!

ஏர்டெல் - எங்கு..எதில் கெத்து காட்டுகிறது?
ஓபன் சிக்னல் வழியாக வெளியான தரவுகளின் படி - வீடியோ எக்ஸ்பீரியன்ஸ், கேம்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் வாய்ஸ் ஆப் எக்ஸ்பீரியன்ஸ் ஆகியவற்றில் ஏர்டெல் ஒரு "முழுமையான" வெற்றியாளர் ஆகும்.
மேலும் "சிறந்த டவுன்லோட் ஸ்பீட் எக்ஸ்பீரியன்ஸ்" என்கிற பிரிவின் கீழும் ஏர்டெல் தன்னை ஒரு வெற்றியாளராக நிலைநிறுத்தி கொண்டுள்ளது.

பெரிதாக சோபிக்காத ஜியோ!
கடந்த ஜூன் 1, 2022 முதல் ஆகஸ்ட் 29, 2022 வரையிலாக, மொத்தம் 90 நாட்களுக்கு, இந்தியாவின் நான்கு முக்கியமான மொபைல் நெட்வொர்க் ஆப்ரேட்டர்களின் சேவைகளை பெறும் நுகர்வோர்களின் மொபைல் நெட்வொர்க் அனுபவத்தை மதிப்பீடு செய்த பிறகே Opensignal இந்த தரவுகளை வெளியிட்டுள்ளது!
ஆக இந்த தரவுகளின் வழியாக மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் - கடந்த 90 நாட்களாக - ரிலையன்ஸ் ஜியோ பெரிதாக ஒன்றும் சோபிக்கவில்லை என்பதை வெளிப்படையாக அறிய முடிகிறது!

உடனே ஜியோவை மட்டம் தட்ட ஆரம்பித்து விட வேண்டாம்!
ஏனென்றால், அதே ஓபன் சிக்னல் தரவுகளின் படி, கிடைக்கும் தன்மை (Availability) மற்றும் 4G கவரேஜ் எக்ஸ்பீரியன்ஸில் முன்னணியில் உள்ளது - பார்தி ஏர்டெல் அல்ல, ரிலையன்ஸ் ஜியோ தான்!
ஆம்! கவரேஜ் பிரிவில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது மொத்தம் மூன்று விருதுகளை வென்றுள்ளது. இதன் வழியாக, கிடைக்கும் தன்மை மற்றும் 4G கவரேஜ் அடிப்படையில் ஜியோ ஒரு "முழுமையான" வெற்றியாளராக தன் பயணத்தை தொடர்கிறது!

ஆக.. ஏர்டெல்லும் சோபிக்கவில்லை!
வெளியான தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள டெலிகாம் பயனர்கள் தங்களின் அதிகப்படியான நேரத்தை (99.4%) ஜியோவின் 4ஜி நெட்வொர்க்கின் மொபைல் பிராட்பேண்ட் சேவைகளுடன் செலவிடுகின்றனர் என்கிறது!
ஆக பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி சேவைகளால் ஜியோவின் 4ஜி சேவைகளின் தரத்தை எட்ட முடியவில்லை என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது!


Click it and Unblock the Notifications