BSNL சிம் யூஸ் பண்ணுற எல்லா கஸ்டமர்களும் ஷாக்.. உண்மையை அப்படியே போட்டு உடைத்த TRAI ரிப்போர்ட்!
இன்னும் 4ஜி அறிமுகம் ஆகவில்லை.. 5ஜி நெட்வொர்க் பற்றிய பேச்சுக்கள் கூட இன்னும் அடிபட தொடங்கவில்லை.. இருந்தாலும் கூட தொடர்ந்து பிஎஸ்என்எல் சிம் காரட்டை (BSNL SIM Card) பயன்படுத்தும் பல்லாயிரக்கணக்கான பிஎஸ்என்எல் கஸ்டமர்களில் நீங்களும் ஒருவர் என்றால் மனதை தேற்றிக்கொள்ளவும்!
இல்லையென்றால்.. டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) சமீபத்திய அறிக்கையை அப்படியே புறக்கணித்து விடவும். ஏனென்றால் டிராயின் இந்த லேட்டஸ்ட் அறிக்கையில் உள்ள தரவுகள் நிச்சயம் உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும்!

டிராய் வெளியிட்டுள்ள கடந்த ஜூன் 2023 க்கான மாதாந்திர செயல்திறன் தரவுகளின்படி (June 2023 Monthly Performance Data), அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் நிறுவனமானது, தொடர்ச்சியான முறையில் அதன் ஆக்டிவ் யூசர்களை (Active Users) இழந்து வருகிறது.
அறியாதோர்களுக்கு, ஆக்டிவ் யூசர்கள் அல்லது செயலில் உள்ள பயனர்கள் என்றால்.. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், ஒரு குறிப்பிட்ட சேவையின் கீழ் செயலில் இருக்கும் பயனர்கள் ஆவர். டெலிகாம் துறையை பொறுத்தவரை, ஆக்டிவ் யூசர்கள் என்பது வருவாய்க்கான மிகவும் முக்கியமான ஒரு அளவீடு ஆகும்.
அப்படியான ஆக்டிவ் யூசர்கள் தொடர்ச்சியான முறையில் ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்பது அந்நிறுவனத்தின் மீதான அதிருப்தியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. இந்த டிராய் அறிக்கையில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் பிஎஸ்எஸ்எல் நிறுவனம் மட்டுமே தனது ஆக்டிவ் யூசர்களை இழக்கவில்லை.
விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடாபோன ஐடியா (Vodafone Idea) நிறுவனமும் கூட தொடர்ச்சியாக அதன் ஆக்டிவ் யூசர்களை இழந்து வருவதை டிராயின் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. டிராய் தரவுகளின்படி வோடபோன் ஐடியாவிடம் 202.75 மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் உள்ளன; அதாவது இந்நிறுவனம் 2.51 மில்லியன் ஆக்டிவ் யூசர்களை இழந்துள்ளது.
மறுகையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் 52.04 மில்லியன் மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் உள்ளன, அதாவது இந்நிறுவனம் 0.74 மில்லியன் ஆக்டிவ் யூசர்களை இழந்துள்ளது. இவ்விரு நிறுவனங்களின் கஸ்டமர்களும் எங்கே 'ஜம்ப்' அடிக்கிறார்கள் என்று பார்த்தால்.. வேறு எங்கே? - ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு தான்!
ஏனென்றால், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டுமே தொடர்ச்சியான முறையில் வயர்லெஸ் மற்றும் வயர்லைன் சந்தாதாரர்களை சேர்த்த வண்ணம் உள்ளனர். டிராயின் சமீபத்திய தரவுகளின்படி ரிலையன்ஸ் ஜியோ 2.27 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களையும் ஏர்டெல் 1.4 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களையும் தன்வசம் சேர்ந்துள்ளன.
அதே சமயம் வோடபோன் ஐடியா 1.2 மில்லியன் வயர்லெஸ் பயனர்களை இழந்துள்ளது. பிஎஸ்என்எல் 1.8 மில்லியன் வயர்லெஸ் பயனர்களை இழந்துள்ளது. கடந்த ஜூன் 2023 இறுதியில், ஜியோ வயர்லெஸ் சந்தாதாரர்கள் பிரிவில் 38.35% சந்தை பங்கை தன்வசம் கொண்டிருந்தது. ஏர்டெல், 32.68% சந்தைப் பங்கையும், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் முறையே 20.08% மற்றும் 8.71% சந்தை பங்கையும் கொண்டிருந்தன.
ஆக்டிவ் யூசர்கள் பிரிவில், ஜியோ இப்போது 414.49 மில்லியன் ஆக்டிவ் வயர்லெஸ் யூசர்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் 2.34 மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் என்கிற வளர்ச்சியை கண்டுள்ளது. ஏர்டெல் நிறுவனமானது 372.77 மில்லியன் ஆக்டிவ் யூசர்களை கொண்டுள்ளது, இது 0.11 மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் என்கிற வளர்ச்சியை கண்டுள்ளது
ஆகமொத்தம் வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களின் நஷ்டமானது ஏர்டெல் மற்றும் ஜியோவிற்கு லாபமாக மாறுவதை வெளிப்படையாக புரிந்துகொள்ள முடிகிறது. வயர்லைன் பிரிவில் கூட, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் நல்ல நிலையில் உள்ளன. இவ்விரு நிறுவனங்களும் முறையே 0.20 மற்றும் 0.13 மில்லியன் பயனர்களை சேர்ந்துள்ளன.
அதேசமயம் வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் முறையே 0.01 மில்லியன் மற்றும் 0.05 மில்லியன் பயனர்களை இழந்துள்ளன. கடந்த ஜூன் 2023 மாதம் மட்டுமல்ல, இந்த போக்கு கடந்த பல மாதங்களாகவே தொடர்கிறது. விஐ மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இரண்டுமே தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்கான சரியான வழியை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்; இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாக கூடும்!


Click it and Unblock the Notifications








