Home
News

ஓ.. இது வேறயா? ஷாக்கில் Jio பயனர்கள்.. உண்மையை போட்டு உடைத்த TRAI இன் புதிய அறிக்கை!

டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) புதிய அறிக்கையொன்று ரிலையன்ஸ் ஜியோ (Jio) வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கும், குழப்பத்திற்கும் உள்ளாக்கும் உண்மை ஒன்றை போட்டுடைத்து உள்ளது; மறுகையில் ஏர்டெல் கஸ்டமர்களை குஷிப்படுத்தி உள்ளது!

Jio VS Airtel - மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

டிராய்-இன் சமீபத்திய அறிக்கையொன்று, வெறும் 3 மாதங்களில் ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் மொத்தம் 60 லட்சம் ஆக்டிவ் யூசர்கள் (Active Users) இணைந்துள்ளனர் என்கிற தகவலை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது ஜியோ நிறுவனமானது தனது 5ஜி சேவைகளை புயல் வேகத்தில் அறிமுகம் செய்து வந்தாலும் கூட மக்கள் ஏர்டெல் நிறுவனத்தையே அதிகம் தேர்வு செய்துள்ளனர்.

ஷாக்கில் Jio பயனர்கள்.. உண்மையை போட்டு உடைத்த TRAI இன் புதிய அறிக்கை!

அதே மூன்று மாத காலத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவால் 2.7 மில்லியன் ஆக்டிவ் யூசர்களை மட்டுமே சேர்க்க முடிந்துள்ளது. டிராய் வெளியிட்டுள்ள இந்த புள்ளி விவரங்கள், கடந்த 2022 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் என்கிற காலகட்டத்திற்குள் சேகரிக்கப்பட்ட தகவல்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அதே 3 மாத கேப்புல BSNL மற்றும் Vodafone க்கு வைக்கப்பட்ட ஆப்பு

ஏர்டெல் நிறுவனத்திற்கு அபார வளர்ச்சியையும், ஜியோவிற்கு நிலையான வளர்ச்சியையும் கொடுத்த அதே 3 மாதங்கள், பிஎஸ்என்எல் மற்றும் வோடாபோன் ஐடியாவிற்கு நல்ல காலகட்டமாக இருக்கவில்லை. ஏனென்றால் குறிப்பிட்ட 3 மாதங்களில் வோடபோன் ஐடியா (Vi) மற்றும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஆகிய 2 நிறுவனங்களுமேதத்தம் சந்தாதாரர்களை இழந்துள்ளது.

டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் 0.87 மில்லியன் (அதாவது 87,000) வயர்லெஸ் பயனர்களை இழந்துள்ளது; மறுகையில் உள்ள வோடபோன் ஐடியாவானது 2.47 மில்லியன் (அதாவது 2 லட்சத்து 47 ஆயிரம்) வயர்லெஸ் பயனர்களை இழந்ததுள்ளது.

SIM கார்டு இருந்தால் மட்டும் போதாது. அது ACTIVE ஆக இருக்க வேண்டும்

ஒரு டெலிகாம் நிறுவனமானது மொத்தம் எத்தனை வாடிக்கையாளர்களை சேர்க்கிறது, எத்தனை பேரை இழக்கிறது என்பதை விட.. அந்நிறுவனத்தின் கீழ் எத்தனை கஸ்டமர்கள் ஆக்டிவ் ஆக உள்ளனர், அதாவது ஒரு நிறுவனத்தின் சேவையை எத்தனை பேர் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் என்பதே முக்கியம். ஏனென்றால், அவர்கள் தான் ஒரு நிறுவனத்தின் லாபத்தை உறுதி செய்கின்றனர்.

அந்த வகையில், ஏர்டெல்லின் ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை 359 மில்லியனிலிருந்து 364.98 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது இந்நிறுவனம் சுமார் 6 மில்லியன் ஆக்டிவ் வயர்லெஸ் பயனர்களை சேர்த்துள்ளது. ஆனால் ஜியோ நிறுவனமோ 388 மில்லியனில் இருந்து 390.7 மில்லியனாக மட்டுமே உயர்ந்துள்ளது.

ஆக Jio வை விட Airtel தான் சிறந்ததா?

இந்த கேள்விக்கு மேலோட்டமாக எந்த பதிலையும் சொல்லிவிட முடியாதது. ஏனென்றால் ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் மொத்தம் 99.29% சந்தாதாரர்கள் ஆக்டிவ் யூசர்களாக உள்ளனர்.

அதே போல ஜியோ நிறுவனத்தின் கீழ் இருக்கும் 92.10% சந்தாதாரர்கள் அந்நிறுவனத்தின் ஆக்டிவ் யூசர்களாக உள்ளனர். அதாவது இந்த 2 நிறுவனங்களின் சந்தாதாரர் தளத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. எப்போது இந்த சமநிலை தவறுகிறதோ, அப்போது தான் எது பெஸ்ட்? என்கிற முடிவுக்கு நாம் வர முடியும்!

Best Mobiles in India

English summary
Latest TRAI Report Says Airtel Added More Active Users Than Jio in 3 months
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X