Home
News

போச்சு.. இன்னமும் BSNL சிம் யூஸ் பண்றீங்களா.. அப்போ இன்னும் கொஞ்சம் நாள் தான்.. TRAI சொல்லும் தகவல் அப்படி!

ஜியோவும், ஏர்டெல்லும் (Jio VS Airtel) போட்டி போட்டுக்கொண்டு 5ஜி சேவைகளை (5G Service) அறிமுகம் செய்து வரும் இந்த 2023 ஆம் ஆண்டிலும் கூட, 4ஜி சேவைக்குள் (4G Service) நுழையாத பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் சிம் கார்ட்டை பயன்படுத்துபவரா நீங்கள்?

ஆமெனில் டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) சமீபத்திய அறிக்கையானது உங்கள் மனதை "தாறுமாறாக" புண்படுத்தலாம். அதே அறிக்கை, ஜியோ மற்றும் ஏர்டெல் கஸ்டமர்களின் மனதை குளுகுளுவென மாற்றும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

இன்னமும் BSNL சிம் யூஸ் பண்றீங்களா.. அப்போ இன்னும் கொஞ்சம் நாள் தான்!

டிராய் அறிக்கையில் அப்படி என்ன தான் உள்ளது? டிராய் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி 2023ல் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் சுனில் பார்தி மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனங்கள் மட்டுமே ஆக்டிவ் யூசர்களை (Active Users) சேர்ந்துள்ளன.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஜியோ நிறுவனம் 10 லட்சம் புதிய வயர்லெஸ் யூசர்களை சேர்த்துள்ளது. மறுகையில் உள்ள ஏர்டெல் நிறுவனமானது 9 லட்சத்து 80 ஆயிரம் புதிய வயர்லெஸ் யூசர்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் இவ்விரு நிறுவனங்களின் வயர்லெஸ் சந்தாதாரர்களின் (Wireless Users) ஒட்டுமொத்த எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

பிஎஸ்என்எல்-க்கு கும்பிடு போட்ட பழைய வாடிக்கையாளர்கள்: ஜியோவும், ஏர்டெல்லும் மாறிமாறி புதிய பயனர்களை சேர்க்கும் மறுகையில், அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டரான பிஎஸ்என்எல் நிறுவனம் அதே பிப்ரவரி மாதத்தில் 10 லட்சம் வயர்லெஸ் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது; இந்நிறுவனம் இழந்துள்ள ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை 4 லட்சம் ஆகும்.

ஒரு டெலிகாம் நிறுவனத்திற்கு ஆக்டிவ் யூசர்களை இழப்பதென்பது கிட்டத்தட்ட எல்லாவற்றையும் இழப்பதற்கு சமம். இருப்பினும் பிஎஸ்என்எல் தொடர்ச்சியாக தனது வாடிக்கையாளர்களை இழந்த வண்ணம் உள்ளது. இது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களது பொறுமையை இழந்துவிட்டார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த சூழ்நிலை தொடர்ந்தால்.. அடுத்துவரும் மாதங்களில் காலத்தில் பிஎஸ்என்எல்-ன் நிலைமை இன்னும் மோசமாகி விடும். இருப்பினும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) அளவிற்கு மோசமாகி விடாது. ஏனென்றால் டிராய் அறிக்கையின் படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டுமே இந்நிறுவனம் 20 லட்சம் பயனர்களை இழந்துள்ளது.

பிஎஸ்என்எல் கூட பரவாயில்லை. அதனிடம் பெரிய அளவில் 4ஜி நெட்வொர்க் இல்லை. ஆனால் வோடாபோ ஐடியா அப்படி இல்லை. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்கள் 4ஜி பயனர்களுக்கு கூடுதல் செலவின்றி வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்கும் வரை, வோடபோன் ஐடியாவால் ஒன்றுமே செய்ய முடியாது.

இதில் இருந்து தப்பிக்க, மீண்டும் பழைய நிலைக்கு வர வோடாபோன் ஐடியா நிறுவனத்திடம் இருக்கும் ஒரே ஒரு வழி - கூடிய விரைவில் தனது 5ஜி சேவையை (Vodafone Idea 5G) அறிமுகம் செய்வது மட்டுமே ஆகும். ஆனால் வோடாபோனிடம் அதற்கு போதுமான "பணவசதிகள்" இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Latest TRAI Report Revealed Only Jio Airtel Add Active Users in Feb 2023 BSNL Lost 10 Lakhs Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X