பங்கம் செய்த சிங்கத்தின் பிள்ளை.. Airtel யூசர்களே மனச கல் ஆக்கிக்கோங்க.. இல்ல Jio-க்கு மாறிடுங்க!

|

ஏர்டெல் தான் கெத்து.. Airtel தான் நல்லா இருக்கு.. என்று கூறிய அனைவருமே இனி வெளியே தலைகாட்ட முடியாதபடி ஒரு "தகவல்" வெளியாகி உள்ளது!

அதை பற்றி அறிந்தால்.. "பேசாமல் Jio-க்கு மாறிடலாமா?" என்று நீங்கள் யோசித்தால் கூட, அதில் எந்த ஆச்சரியமும் இல்லை!

அதென்ன தகவல்? அப்படி என்ன நடந்தது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

அப்பாவும் மகனும்!

அப்பாவும் மகனும்!

உங்களில் பலருக்கும் ஏற்கனவே தெரிந்து இருக்கலாம் - ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி (Mukesh Ambani) ராஜினாமா செய்து விட்டார் என்பது!

அவர் தன் பதவியை ராஜினாமா செய்த மறுநாளே ரிலையன்ஸ் ஜியோ வாரியத்தின் புதிய தலைவராக அவரது மகன் ஆகாஷ் அம்பானி (Akash Ambani) பொறுப்பேற்று கொண்டார்!

இனி தேடினாலும் கிடைக்காது.. இரவோடு இரவாக WhatsApp-ல் இருந்து காணாமல் போன முக்கிய அம்சம்!இனி தேடினாலும் கிடைக்காது.. இரவோடு இரவாக WhatsApp-ல் இருந்து காணாமல் போன முக்கிய அம்சம்!

ஆகாஷ் அம்பானிக்கு கொடுக்கப்பட்டுள்ள கெடு!

ஆகாஷ் அம்பானிக்கு கொடுக்கப்பட்டுள்ள கெடு!

ஆகாஷ் அம்பானிக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய பொறுப்புகளுக்கான பதவிக்காலம் ஜூன் 27, 2022 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை நீளும் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது!

இந்நிலைப்பாட்டில் "அப்பாவிற்கு தப்பாத பிள்ளை!" என்று ஆகாஷ் அம்பானியை பார்த்து கூறும்படியாக, ஒரு முக்கியமான உண்மை வெளியாகி உள்ளது!

அதென்ன உண்மை?

அதென்ன உண்மை?

ரிலையன்ஸ் ஜியோ தொடர்பான "அந்த" உண்மையை பற்றி அறிந்துகொள்ளும் முன்னர், நாம் ஓக்லா என்றால் என்ன? ஓக்லா டெஸ்ட் ரிப்போர்ட் என்றால் என்ன? என்பதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

அப்போது தான் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் உண்மையான நிலையை பற்றி நம்மால் புரிந்துகொள்ள முடியும்!

ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!

ஓக்லா என்றால் என்ன?

ஓக்லா என்றால் என்ன?

ஓக்லா (Ookla) என்பது கனெக்ஷன் டேட்டா ரேட் (Connection data rate) மற்றும் லேடன்சி (Latency) போன்ற இன்டர்நெட் அக்சஸ் பெர்ஃபார்மென்ஸ் மெட்ரிக்ஸை (Internet access performance metrics) "இலவசமாக" பகுப்பாய்வு செய்யும் ஒரு இணைய சேவை (Web Service ) ஆகும்.

ரத்தின சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் - இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களின் உண்மையான இன்டர்நெட் வேகம் தொடர்பான தரவுகளை புட்டுப்புட்டு வைக்கும் "ஒரு டெலிகாம் வில்லன்" என்றால் - அது ஓக்லா தான்!

ஏர்டெல் யூசர்கள்.. மனதை தேற்றிக்கொள்ளவும்!

ஏர்டெல் யூசர்கள்.. மனதை தேற்றிக்கொள்ளவும்!

சமீபத்தில் வெளியான ஓக்லாவின் ஸ்பீட் டெஸ்ட் ரிப்போர்ட் ஆனது ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களை குஷிப்படுத்திய கையோடு, ஏர்டெல் யூசர்களின் மனதை புண்படுத்தி உள்ளது என்றே கூறலாம்!

ஏனென்றால் லேட்டஸ்ட் ஓக்லா ஸ்பீட் டெஸ்ட் ரிப்போர்ட் ஆனது, ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி வேகத்துடன் ஒப்பிடும் போது ஜியோ நிறுவனத்தின் 5ஜி வேகமானது மிகவும் சிறப்பாக உள்ளது என்கிற உண்மையை அம்பலப்படுத்தி உள்ளது!

வெறும் ரூ.12,249 க்கு இப்படி ஒரு 5G Phone கிடைக்குறப்ப.. ரூ.20,000 5ஜி போன்லாம் எதுக்கு?வெறும் ரூ.12,249 க்கு இப்படி ஒரு 5G Phone கிடைக்குறப்ப.. ரூ.20,000 5ஜி போன்லாம் எதுக்கு?

ஜியோ VS ஏர்டெல் 5ஜி ஸ்பீட் டெஸ்ட் ரிப்போர்ட்!

ஜியோ VS ஏர்டெல் 5ஜி ஸ்பீட் டெஸ்ட் ரிப்போர்ட்!

வெளியான ஓக்லா ஸ்பீட் டெஸ்ட் அறிக்கையின்படி, சி-பேண்டைப் பயன்படுத்தும் போது ஜியோ 5ஜி-யின் சராசரி பதிவிறக்க வேகம் - 606.53Mbps மற்றும் 875.26Mbps வரை இருந்தது.

அதேசமயம் ஏர்டெல் 5ஜி-யின் சராசரி பதிவிறக்க வேகமானது 365.48 Mbps - 716.85 Mbps-ஐ மட்டுமே அடைய முடிந்தது. அதனை தொடர்ந்து ஓக்லாவானது, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி 5G பதிவிறக்க வேகங்களை ஒப்பிட்டு பார்த்தது.

அப்போதும் அசிங்கப்பட்ட ஏர்டெல்!

அப்போதும் அசிங்கப்பட்ட ஏர்டெல்!

4 முக்கிய நகரங்களில் கிடைத்த சராசரி 5G பதிவிறக்க வேகங்களை ஒப்பிட்டு பார்த்த போதிலும் கூட ஏர்டெல் நிறுவனமானது பின்னடைவைத்தான் சந்தித்துள்ளது

எந்தெந்த நகரங்களில்.. ஜியோவும் ஏர்டெல்லும் என்ன அளவிலானா சராசரி 5ஜி வேகத்தை பதிவு செய்துள்ளது என்கிற விவரங்கள் இதோ:

டெல்லி முதல் வாரணாசி வரை...

டெல்லி முதல் வாரணாசி வரை...

டெல்லியில் - 600Mbps (ஜியோ) 197.98Mbps (ஏர்டெல்)
மும்பையில் - 514.38Mbps (ஜியோ) 271.01Mbps (ஏர்டெல்)
கொல்கத்தாவில் - 482.02Mbps (ஜியோ) 33.83Mbps (ஏர்டெல்)
வாரணாசியில் - 485.22Mbps (ஜியோ) 516.57Mbps (ஏர்டெல்)

ஏர்டெல் உடன் ஒப்பிடும்போது, வாரணாசியை தவிர மற்ற எல்லா பகுதிகளிலும் ஜியோ தான் சிறந்த 5ஜி பதிவிறக்க வேகத்தை கொண்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிய முடிகிறது.

கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!

ஜியோவின் இந்த வெற்றிக்கு என்ன காரணம்?

ஜியோவின் இந்த வெற்றிக்கு என்ன காரணம்?

வேறு என்ன காரணம்? நடந்து முடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் போது ​​ஜியோ வாங்கிய அதிக ஸ்பெக்ட்ரம் தான் காரணம்! அதனால் தான் ஜியோவின் 5ஜி ஸ்பீட் ஆனது மிகவும் சிறப்பாக உள்ளது

அதுமட்டுமின்றி, 700MHz ஸ்பெக்ட்ரம் அலைவரிசையைக் கொண்ட ஒரே ஒரு தொலைத்தொடர்பு நிறுவனமும் - ஜியோ தான்!. நினைவூட்டும் வண்ணம் ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் ஆனது சி-பேண்ட்டை மட்டுமே கொண்டுள்ளனர்!

இந்த 700MHz இல் அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்த 700MHz இல் அப்படி என்ன ஸ்பெஷல்?

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், 700MHz என்பது லோ-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஆகும், இது நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள உட்புற சிக்னல் ஊடுருவலை (indoor signal penetration) குறைக்கிறது.

எனவே, ஜியோ நிறுவனம் சி-பேண்டைப் பயன்படுத்தும் போது, அதன் ​​செயல்திறன் நன்றாக இருக்கும். மறுகையில் உள்ள ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியாவின் செயல்திறன் ஒப்பீட்டளவில் சற்றே குறைவானதாக இருக்கும்!

Best Mobiles in India

English summary
Latest speed test report from ookla says Jio 5G download speed is far better than Airtel 5G Plus

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X