நாள் ஒன்றிற்கு 2ஜிபி + வாய்ஸ் வழங்கும் ஏர்டெல்-ன் ரூ.449/- அறிமுகம்.!
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.449/- திட்டத்தில் மொத்தமாக 140ஜிபி டேட்டா பெற முடியும், அதன்பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் ஜியோவிற்கு போட்டியாக பல்வேறு சிறப்பு சலுகை மற்றும் திட்டங்களையும் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி ஏர்டெல் நிறுவனம் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஜியோ நிறுவனம் விரைவில் புதிய திட்டத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இதற்கு முன்பு வோடபோன் நிறுவனம் அதன்படி ரம்ஜான் ஆஃபர் எனும் தலைப்பில் தினசரி 1.4ஜிபி மற்றும் 3ஜிபி டேட்டா வழங்கும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஏர்டெல் அறிவித்துள்ள சலுகையை பார்ப்போம்.

ஏர்டெல்:
ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் ரூ.449/- என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, அதன்படி இந்த திட்டத்தில் நாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தை 70 நாட்கள் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.449/- திட்டம்:
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.449/- திட்டத்தில் மொத்தமாக 140ஜிபி டேட்டா பெற முடியும், அதன்பின்பு இலவச கால் அழைப்புகள்,
ரோமிங் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டேட்டா ஆட்-ஆன் பேக்ஸ்:
அறிமுகமாகியுள்ள ரூ.193/- பேக் உடன் சேர்த்து ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு நுழைவு நிலை அளவிலான டேட்டா ஆட்-ஆன் பேக் ஆன ரூ.49/- திட்டமும் அறிமுகம் ஆகியுள்ளது. விலைகளில் மற்றும் டேட்டா நன்மைகளில் வேறுபாடுகள் இருந்தாலும் கூட, ரிலையன்ஸ் ஜியோவின் ஆட்-ஆன் திட்டங்களும், ஏர்டெல் நிறுவனத்தின் ஆட்-அந்த திட்டங்களும் ஒரே மாதிரியான செயல்பாடுகளை தான் கொண்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.


1.4 ஜிபி அளவிலான அதிவேக டேட்டா :
அதாவது, ஏர்டெல் ரூ.199/-ன் அதே டேட்டா மற்றும் வாய்ஸ் நன்மைகளுடன் சேர்த்து, கூடுதலாக இந்த ரூ.219/-ன் கீழ் வரம்பற்ற ஹலோ ட்யூன்ஸ்
சலுகையும் கிடைக்கும். இதனை பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு ஹலோ டியூன் அமைக்க முடியும். ஒட்டுமொத்த நன்மைகளை
பொறுத்தவரை, ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அனைத்து புதிய ரூ.219/- ப்ரீபெய்ட் திட்டமானது, ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவுடன் சேர்த்து வரம்பற்ற வாய்ஸ் நன்மைகளை மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்தின் கீழ் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications