இது வேறயா.. ஜியோ கஸ்டமர்களே.. ஏர்டெல்லுக்கு ஜம்ப் அடிக்க ரெடி ஆகிக்கோங்க.. Open Signal-ன் பகீர் ரிப்போர்ட்!
மொபைல் நெட்வொர்க் அனுபவத்தை (Mobile Network Experience) அளவிடுவதில் நிபுணத்துவம் பெற்ற, ஒரு சுயாதீனமான பகுப்பாய்வு நிறுவனமான ஓப்பன் சிக்னல் (Open Signal), ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களை அலெர்ட் செய்யும்படியான ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதென்ன அறிக்கை? இதோ விவரங்கள்:
நீங்களொரு ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் யூசராக (Jio Fiber Broadband User) இருந்தால், ஓப்பன் சிக்னலின் இந்த சமீபத்திய அறிக்கையானது நிச்சயம் உங்கள் மனதை புண்படுத்தும். அதிலும் குறிப்பாக நீங்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிராட்பேண்ட் (Airtel Xstream Broadband) சேவையை புறந்தள்ளி விட்டு, ஜியோ ஃபைபரை தேர்வு செய்து இருந்தால்.. இன்னும் மோசம்!

சமீபத்தில் இந்த ஓப்பன் சிக்னல் நிறுவனமானது இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எந்த டெலிகாம் நிறுவனம் சிறந்த பிராட்பேண்ட் அனுபவத்தை (Best Broadband Experience) வழங்குகிறது என்கிற பகுப்பாய்வை நடத்தியது. இந்த பகுப்பாய்வானது ஐந்து பிரிவுகளின் கீழ்.. ஏர்டெல், பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் ஜியோ ஆகிய மூன்று பெரிய பிராண்டுகளுக்கு இடையே நடத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மற்றும் 7 முக்கிய இந்திய நகரங்களில் உள்ள பயனர்களின் தரவுகளை அடிப்படையாக கொண்ட இந்த பகுப்பாய்வின் முடிவில் ஐந்து பிரிவுகளில் நான்கு பிரிவுகளில் ஏர்டெல் நிறுவனமே முன்னிலை வகித்துள்ளது. அதாவது ஜியோவின் ஜியோ ஃபைபர் மற்றும் பிஎஸ்என்எல்-ன் பார்த் ஃபைபர் சேவைகளை பின்னுக்கு தள்ளி.. பயனர்களுக்கு சிறந்த பிராட்பேண்ட் அனுபவத்தை வழங்குவது ஏர்டெல்-ன் எக்ஸ்ட்ரீம் சேவைதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 2024-க்கான இந்தியாவின் ஃபிக்ஸட் பிராட்பேண்ட் அனுபவ அறிக்கையின்படி (India Fixed Broadband Experience Report), நிலையான தரம், வீடியோ அனுபவம், பதிவிறக்க வேகம், உச்சக்கட்ட பதிவிறக்க வேகம் மற்றும் பதிவேற்ற வேகம் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களின் பிராட்பேண்ட் சேவைகளை ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஏர்டெல் நிறுவனம் தான் "பெஸ்ட்" என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட பகுப்பாய்வானது அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய ஏழு முக்கிய இந்திய நகரங்களையும் உள்ளடக்கியது மற்றும் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகம், லேடன்சி, நடுக்கம் (Jitter), பாக்கெட் லாஸ் (Packet loss) மற்றும் முதல் பைட்டுக்கான நேரம் (Time to the first byte) உள்ளிட்ட ஆறு முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளையும் உள்ளடக்கியுள்ளது.

ஆனால் ஸ்பீடை பொறுத்தவரை ஜியோ நிறுவனமானது அனைத்து நகரங்களிலும் நிலையான தரத்தில் முதலிடம் வகிக்கிறது. ஏர்டெல் நிறுவனமானது அகமதாபாத் மற்றும் மும்பையில் முன்னணியில் உள்ளது, அதே நேரத்தில் ஹாத்வே நிறுவனமானது பெங்களூரில் ஆதிக்கம் செலுத்துகிறது. சென்னையை பொறுத்தவரை ஹாத்வே சேவையானது ஆக்ட் (ACT) உடன் முதல் இடத்தை பகிர்ந்து கொள்கிறது. எக்ஸைடெல் நிறுவனமானது டெல்லி மற்றும் ஹைதராபாத்தில், டவுன்லோட் மற்றும் அப்லோட் ஸ்பீட் ஆகிய இரண்டிலும் தனித்து நிற்கிறது.
ஜியோ நிறுவனம் இரண்டு புதிய ஏர்ஃபைபர் ஆட்-ஆன் திட்டங்களை (Jio AirFiber Add-on Plans) அறிமுகப்படுத்தியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ரூ.101 மற்றும் ரூ.251 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இவ்விரு புதிய திட்டங்களுமே, ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு மேலாக கூடுதல் டேட்டாவை (Extra Data) வழங்கும் திட்டங்களாகும்.
ரூ.101 டேட்டா பூஸ்டர் பேக்கின் கீழ், பேஸிக் திட்டத்தின் அதே ஸ்பீடின் கீழ் 100ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும். பேஸிக் திட்டத்தில் உள்ள டேட்டா லிமிட் தீர்ந்தவுடன், இந்த பேக்கின்கீழ் உள்ள கூடுதல் டேட்டாவை பயன்படுத்த முடியும். மறுகையில் உள்ள ரூ.251-ன் கீழ் 100ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








