மலிவு விலையில் போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிவித்தது வோடபோன்.!
ரெட் இன்டர்நேஷனல், ரெட் இன்டர்நேஷனல் பிளஸ், ரெட் சிக்னேச்சர் மற்றும் ரெட் சிக்னேச்சர் பிளஸ் சலுகைகளில் அதிகபட்சம் 12 மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது .
வோடபோன் நிறுவனம் சமீபத்தில் ஜியோவிற்கு போட்டியாக பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது வோடபோன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால் தங்களது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு குறைந்த கட்டணத்தை உறுதி செய்யும் சலுகைகள் வோடபோன் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வோடபோன் புதிய சலுகைகளுடன் மொபைல் இன்சூரன்ஸ், அன்லிமிட்டெட் சர்வதேச ரோமிங் சலுகைகள், பொழுதுபோகுக்கு தரவுகள் அதன்பின்பு பல்வேறு இதர சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் போஸ்ட்பெயிட்
குறிப்பாக ரெட் போஸ்ட்பெயிட் சலுகைகளில் பயனருக்கு தகுந்த சலுகையை ஆப்டிமைசேஷன் தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்த
கட்டணத்தை ஒவ்வொரு மாதமும் உறுதிசெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரெட் போஸ்ட்பெயிட் பயனர்கள் எவ்வித அதிரச்சியும் கொள்ள வேண்டியதில்லை.

20சதவீதம்:
மேலும் ரெட் பேசிக் சலுகை விலை ரூ.299 முதல் துவங்கி அதிகபட்சம் சிக்னேச்சர் சலுகை விலை ரூ.2,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த ரெட் சேவையின் கீழ் பயனர்கள் அதிகபட்சம் 20சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று கூறப்படுகிது.

அமேசான் பிரைம் :
இதில் என்டர்டெயின்மென்ட் சலுகையில் அமேசான் பிரைம் சேவைகளுக்கு 12 மாத இலவச சந்தா, மேலும் 12 மாதங்களுக்கு வோடபோன்
பிளே இலவசமாக வழங்கப்படுகிறது. பின்னர் தொலைக்காட்சி நிகழ்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றை இந்த சேவையின் மூலம்
இலவசமாக பார்க்க முடியம்.

நெட்ஃப்ளிக்ஸ் :
ரெட் இன்டர்நேஷனல், ரெட் இன்டர்நேஷனல் பிளஸ், ரெட் சிக்னேச்சர் மற்றும் ரெட் சிக்னேச்சர் பிளஸ் சலுகைகளில் அதிகபட்சம் 12 மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது என வோடபோன் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச அழைப்புகள்:
ரெட் என்டர்டெயின்மென்ட் பிளஸ் சலுகையில் அதிக விலை கொண்ட சலுகையை தேர்வு செய்யும் பயனர்களுக்கு மொபைல் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களை எவ்வித சேதங்களில் இருந்தும் பாதுகாத்து கொள்ள முடியும். பின்பு உலகின் 20 நாடுகளுக்கு அன்லிமிட்டெட் இலவச அழைப்புகள் மற்றும் டேட்டா உள்ளிட்டவை ரூ.180 கட்டணத்தில் ஆட்-ஆன் பேக்கில்
வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications