Jio பயனர்களே என்ஜாய்: ரூ.249 முதல் லேட்டஸ்ட் பிளான்கள், தினசரி 2ஜிபி டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டால் ஃப்ரீ!

|

இந்தியாவில் மூன்று தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கிறது. அது ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகும். நான்காவது ஒரு நிறுவனம் இருக்கிறதே அது என்ன ஆச்சு? என்று கேள்வி வரும்பட்சத்தில்.

5ஜி அறிமுகம் செய்ய தீவிரம் காட்டி வரும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்தியில் இந்தியா முழுவதும் விரைவில் 4ஜி சேவை என்ற கோஷத்துடன் பிஎஸ்என்எல் இருக்கிறது.

ஜியோ மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்கள்

ஜியோ மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்கள்

ஜியோ அறிமுகமான குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதிக வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ இருக்கிறது.

பிற நிறுவனங்களை விட ஜியோ மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குவதே இந்த வளர்ச்சிக்கு பிரதான காரணமாகும். அதன்படி தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களை விரிவாக பார்க்கலாம்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா அணுகல்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா அணுகல்

ரிலையன்ஸ் ஜியோவின் தினசரி 2 ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.249 முதல் ரூ.2879 வரையிலான ரீசார்ஜ் திட்டங்கல் இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ அதன் குறிப்பிட்ட திட்டங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா அணுகலையும் வழங்குகிறது. திட்டங்களின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் மலிவு விலை திட்டமாகும். இந்த திட்டம் 23 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது இந்த திட்டத்தின் மொத்த செல்லுபடியாகும் காலத்திற்கும் 46 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது.

டேட்டா வரம்பு நிறைவடைந்த பிறகு இணைய வேகம் 64kbps ஆக குறைக்கப்படும். கூடுதலாக இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் Jio TV, Jio Cinema, Jio Security மற்றும் Jio Cloud உள்ளிட்ட அணுகலும் வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டமானது 28 நாட்கள் சலுகையுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது இந்த திட்டத்தில் மொத்தமாக 56 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

ஜியோ ரூ.533 மற்றும் ரூ.719 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ஜியோ ரூ.533 மற்றும் ரூ.719 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது மொத்தம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

இந்த திட்டம் செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 112 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா வரம்பு நிறைவடைந்த பிறகு இணைய வேகம் 64kbps ஆக குறைக்கப்படும்.

கூடுதலாக இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் Jio TV, Jio Cinema, Jio Security மற்றும் Jio Cloud உள்ளிட்ட அணுகலும் வழங்கப்படுகிறது.

அதேபோல் ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது 84 நாட்கள் செல்லுபடியுடன் கிடைக்கிறது. தினசரி 2 ஜிபி டேட்டா என்ற வீதம் மொத்தம் 168 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதைத் தவிர இந்த திட்டத்தில் ரூ.533 இல் வழங்கப்படும் அதே சலுகைகள் வழங்கப்படுகிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச அணுகல்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச அணுகல்

ஜியோவின் ரூ.799 ரீசாரஜ் திட்டமானது தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். தினசரி 2 ஜிபி டேட்டா என்ற வீதம் மொத்தம் 112 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான அணுகல் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ.1066 ரீசார்ஜ் திட்டம்

ஜியோ ரூ.1066 ரீசார்ஜ் திட்டம்

ஜியோ ரூ.1066 ரீசார்ஜ் திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்திலும் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான அணுகல் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது முழுமையான ஒரு ஆண்டு திட்டமாகும். இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் மொத்தமாக 730 ஜிபி டேட்டா கிடைக்கிறது. வரம்பற்ற குரல் அழைப்பு உள்ளிட்ட எஸ்எம்எஸ் அணுகலும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் கூடுதலாக எந்த சேவைகளும் நன்மைகளும் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

5ஜி சேவையில் தீவிரம்

5ஜி சேவையில் தீவிரம்

இதெல்லாம் ஒருபுறம் இருக்க முன்னதாக குறிப்பிட்டபடி ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சோதனையில் கெத்து காட்டி வருகிறது. இந்தியாவில் 5ஜி சோதனை முழுவீச்சில் மும்முரமாக நடந்து வருகிறது.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை ஜியோ மற்றும் ஏர்டெல் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) இல் 5ஜி நெட்வொர்க்கை ஜியோ சோதனை செய்தது.

மெட்ரோவில் 5ஜி சோதனை செய்த இந்தியாவின் முதல் மெட்ரோ நெட்வொர்க் இதுதான்.

10 மடங்கு அதிவேக இணையம்

10 மடங்கு அதிவேக இணையம்

இந்த சோதனையில் ஜியோ 5ஜி இன் உச்ச பதிவிறக்க வேகம் 1.45Gbps ஆக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.அதேபோல் 65Mbps பதிவேற்ற வேகத்தையும் பதிவு செய்திருக்கிறது.

1.45Gbps என்றால் எவ்வளவு வேகம் என்று தெரியுமா?.

பெங்களூருவில் உள்ள ஜியோ 5ஜி நெட்வொர்க் வேகமானது 4ஜி நெட்வொர்க்கை விட குறைந்தது 10 மடங்கு அதிகம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Latest Jio prepaid Plans with 2GB Data per day: Offers Free Disney+ Hotstar

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X