பொசுக்குனு Redmi K50i வாங்கிட்டா.. பொறுமையா உட்காந்து வருத்தப்படனுமா!?

|

"தூக்கத்தில் கூட என்னுடைய பிராண்டின் பெயரை நீங்கள் மறக்க கூடாது" என்று கங்கணம் கட்டாத குறையாக, தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஒரு நிறுவனம் என்றால் - அது Realme (ரியல்மி) தான். அந்த பட்டியலில் அடுத்த இடம் - வேற யாருக்கும் இல்ல, நம்ம Redmi (ரெட்மி) கம்பெனிக்கு தான்!

Redmi அண்ணே.. இன்னும் First Sale கூட நடக்கல! அதுக்குள்ள?

Redmi அண்ணே.. இன்னும் First Sale கூட நடக்கல! அதுக்குள்ள?

சமீபத்தில் தான் இந்நிறுவனம் - மூன்று ஆண்டு இடைவெளிக்கு பின்னர் - இந்தியாவில் அதன் ரெட்மி கே சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்தது.

அது ரெட்மி கே50ஐ 5ஜி (Redmi K50i 5G) ஆகும். நாளை தான் (அதாவது ஜூலை 23 தான்) இந்த ஸ்மார்ட்போன் அதன் முதல் இந்திய விற்பனையையே சந்திக்க உள்ளது.

இதற்கிடையில் அடுத்த ரெட்மி கே சீரீஸ் ஸ்மார்ட்போனை பற்றி "பிரமிக்க வைக்கும்" தகவல்கள் வெளியாகி உள்ளன.

(முன் குறிப்பு: இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது எல்லாமே ரியல்மி கே50ஐ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 11டி ப்ரோ புகைப்படங்கள் தான். ரெட்மி கே60 புகைப்படங்கள் அல்ல)

பேசாமல் Redmi K50i ஐ வாங்காமல் விட்டு விடலாமா?

பேசாமல் Redmi K50i ஐ வாங்காமல் விட்டு விடலாமா?

வெளியான தகவல்கள் ரெட்மி கே60 (Redmi K60) ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தி உள்ளன.

அதைப்பார்த்த சில ரெட்மி ரசிகர்கள், "பேசாமல் ரெட்மி கே50ஐ மாடலை வாங்காமல் விட்டு விடலாம். ரெட்மி கே60 வந்ததும், அதை வாங்கிக்கொள்ளலாம்" என்கிற முடிவுக்கே வந்து விட்டனர்.

ரெட்மி கே60, அப்படி என்ன அம்சங்களை பேக் செய்கிறது? கே50ஐ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்காமல் கே60 மாடலுக்காக காத்திருப்பது புத்திசாலித்தனமா? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த கஸ்டமர்களும் செம்ம ஹேப்பி!SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த கஸ்டமர்களும் செம்ம ஹேப்பி!

Redmi K60-க்கு முன்னாடி... நியாயமான கேள்வி ஒன்னு இருக்கு!

Redmi K60-க்கு முன்னாடி... நியாயமான கேள்வி ஒன்னு இருக்கு!

நீங்கள் விவரம் தெரிந்த ஒரு ரெட்மி ரசிகராக இருந்தால்" அடேய்.. ரெட்மி K50S சீரீஸே இன்னும் அறிமுகம் ஆகல.. அதுக்குள்ள ரெட்மி K60 க்கு போய்டீங்க?" என்று கேட்கலாம்; நியாயமான கேள்வி!

ரெட்மி நிறுவனம் தனது Redmi K50S சீரீஸ் மாடல்களை வருகிற ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்ய உள்ளது தான், ஆனால் எப்படி பார்த்தாலும் அது கே50 சீரிஸ் உடன் தொடர்புடையது தானே? ரெட்மி கே60 தானே உண்மையான அப்டேடட் வெர்ஷனாக இருக்க முடியும்!

கே60 மாடலில் அப்படி என்ன பெரிய அப்டேட் கிடைக்கும்?

கே60 மாடலில் அப்படி என்ன பெரிய அப்டேட் கிடைக்கும்?

ரெட்மி நிறுவனம் கே60 சீரிஸில் அதன் Dual Platform SoC Strategy-ஐ கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. அதாவது மீடியாடெக் மற்றும் குவால்காம் கொண்டு இயங்கும் Redmi K60 Series ஸ்மார்ட்போன்களை நாம் பார்ப்போம்.

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ரெட்மி கே60 சீரீஸின் கீழ் MediaTek Dimensity 9000+ மற்றும் Qualcomm Snapdragon 8+ Gen 1 அல்லது அவற்றின் "வாரிசு"களை பேக் செய்யும் வெவ்வேறு மாடல்களை நாம் எதிர்பார்க்கலாம்.

சீரியஸ் மேட்டர்! முதல் வேலையா சீரியஸ் மேட்டர்! முதல் வேலையா "இதை" UNINSTALL பண்ணுங்க.. கதறும் Google!

அதுமட்டுமா? 2K டிஸ்பிளே, 50MP கேமரானு.. லிஸ்ட்டு போயிட்டே இருக்கு!

அதுமட்டுமா? 2K டிஸ்பிளே, 50MP கேமரானு.. லிஸ்ட்டு போயிட்டே இருக்கு!

கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி கே60 சீரிஸ் 50MP ப்ரைமரி ஷூட்டர் இருப்பதாக கூறப்படுகிறது. இது Sony IMX766 சென்சாரின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் இது 2K டிஸ்பிளேவையும் பேக் செய்யலாம். டிஸ்பிளேவின் மேல் மையத்தில் ஹோல்-பஞ்ச் கட்அவுட் இடம்பெறலாம்; அதில் செல்பீ கேமராவிற்கான இடம் ஒதுக்கப்படலாம்.

கடைசியாக, இது அண்டர்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் "ஈர்க்கக்கூடிய" பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனும் வரலாம்.

ரெட்மி கே60 எப்போது அறிமுகம் ஆகும்?

ரெட்மி கே60 எப்போது அறிமுகம் ஆகும்?

இந்த இடத்தில் தான் ஒரு பயங்கரமான டிவிஸ்ட் இருக்கிறது. குறிப்பாக ரெட்மி கே50ஐ மாடலை வாங்காமல் தவிர்க்கலாம் என்று திட்டமிடுபவர்களுக்கு!

சீன சமூக ஊடகத்தளமான Weibo வழியாக, நம்பகமான டிப்ஸ்டர்களில் "ஒருவரான" டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக நமக்கு கிடைத்துள்ள ஒரு தகவல், Redmi K60 சீரிஸ் என்னென்ன அம்சங்களை வழங்கும்? இது எப்போது அறிமுகமாகும் என்கிற விவரங்களை நம்முடன் பகிர்கிறது.

குறிப்பிட்ட டிப்ஸ்டரின் கூற்றுப்படி, ரெட்மி கே60 சீரீஸ் வருகிற 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகமாகும்!

ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!

அட ஆமாங்க.. அடுத்த வருஷம் தான்.. அதுவும் சீனாவில்!

அட ஆமாங்க.. அடுத்த வருஷம் தான்.. அதுவும் சீனாவில்!

எனவே, 3 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் அறிமுகமாகி உள்ள ரெட்மி கே50ஐ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்காமல் ரெட்மி கே60 சீரீஸ் அறிமுகமாகட்டும் என்று காத்திருப்பது அவ்வளவு புத்திசாலித்தனமான ஒரு முடிவு அல்ல!

வேண்டுமென்றால் "அப்டேட்" செய்து கொள்ளுங்கள். அதாவது Redmi K50i ஸ்மார்ட்போனை வாங்கி பயன்படுத்துங்கள். ரெட்மி கே60 சீனாவில் அறிமுகமாகி பின் இந்தியாவிற்கு வர எப்படி பார்த்தாலும் 7 - 8 மாதங்கள் ஆகிவிடும்.

அது வந்ததும் ரெட்மி கே50ஐ மாடலில் இருந்து கே60 மாடலுக்கு 'ஜம்ப்' அடித்து விடுங்கள். ஆனால் இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான 'மேட்டர்' உள்ளது. அது என்னவென்றால், கே60 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா? என்பதே ஆகும். இந்த கேள்விக்கான பதில் யாருக்குமே தெரியாது!

ஆக Redmi K50i 5G கிடைக்கும் போதே.. அதை வாங்கிக்கோங்க!

ஆக Redmi K50i 5G கிடைக்கும் போதே.. அதை வாங்கிக்கோங்க!

அறியாதோர்களுக்கு ரெட்மி K50i 5G ஆனது ஜூலை 23 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அதன் இந்திய விற்பனையை தொடங்க உள்ளது.

ஐசிஐசிஐ வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.3000 என்கிற உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இது தவிர்த்து ரூ.2,500 என்கிற எக்ஸ்சேஞ்ச் போனஸும் அணுக கிடைக்கும். இது என்னென்ன அம்சங்களை வழங்குகிறது என்கிற விரிவான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Photo Courtesy: Mi Official Website

Best Mobiles in India

English summary
Latest information about Redmi K60 may Pull back you From Redmi K50i India Sale on July 23

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X