சீனாவின் விண்வெளி ஆயுதங்கள் : அதிர்ச்சியில் அமெரிக்கா..!!

By Meganathan
|

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, உலக மக்களை அவ்வப்போது வியப்பில் ஆழ்த்தும் பல விஷயங்களை மேற்கொள்வதில் முதன்மை, இவைகளோடு அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி என அனைத்து துறைகளிலும் அதீத வளர்ச்சி மற்றும் முன்னிலையில் இருக்கும் ஓர் நாடு - சீனா.

சீனாவின் முகமூடியை கிழித்த செயற்கைகோள் புகைப்படங்கள்..!

இத்தனை இருந்தும் ரகசியமாக சீனா செய்து வந்த பல திட்டங்கள் அமெரிக்கா உட்ப்பட உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் ரகசியமாக சீனா செய்து வந்த பல நாச வேலைகள் அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிக்கை

அறிக்கை

அமெரிக்கா - சீனா வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஆய்வு ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சீன ஆயுதங்கள் குறித்து பல்வேறு திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதல்

தாக்குதல்

அதன் படி சீனாவின் வாண்வெளி திட்டங்கள், விண்வெளி ஆயுதங்கள் அமெரிக்காவின் விண்வெளி திட்டங்களை தாக்கும் வகையில் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிப்பதாக கூறப்படுகின்றது.

பல வழிகள்

பல வழிகள்

மேலும் விண்கலங்களை தாக்கும் ஏவுகணை, கணினி வலையமைப்பு, மற்றும் தரையில் இருந்தே விண்கலங்களை இயங்க விடாமல் தடுக்கும் சாட்டிலைட் ஜாமர் போன்றவகளை சீனா வைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ராணுவம்

ராணுவம்

இதோடு மின்சாதன இயக்கி, விண்கலங்களை தாக்கும் சைபர் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை சீன ராணுவத்தினர் பயன்படுத்த இருப்பதும் இந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தாக்குதல்

தாக்குதல்

சுற்றுவட்டப்பாதையின் கீழ் மற்றும் மேல் பகுதிகளில் இருக்கும் செயற்கைகோள்களை நேரடியாக தாக்கும் இரு ஏவுகணைகளை தயாரித்து கடந்த ஆண்டு சீனா சோதனை செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பெயர்

பெயர்

அதன் படி சீனா சோதனை செய்த எஸ்சி-19 மற்றும் டிஎன்-2 ஏவுகணைகள் நேரடியாக அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் கண்காணிப்புசெயற்கைகோள்களை டிஎன்-2 நேரடியாக தாக்கும் என்றும் கூறப்படுகின்றது.

ஆயுதம்

ஆயுதம்

வான்வெளி சார்ந்த ஆயுதங்களை பொருத்த வரை இணை சுற்றுப்பாதை ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களை சீனா தயாரித்து வருவதும் இந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

வகை

வகை

சீனாவின் இந்த வகை ஆயுதங்கள் வெடிக்கும் தன்மை, லேசர் மற்றும் ரேடியோ ஃப்ரீக்வன்சி மற்றும் ஜாமர் போன்றவகளை கொண்டிருக்கும் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல்

தாக்குதல்

வான்வெளியில் இந்த ஆயுதங்கள் இலக்கை நெருங்கி, அவைகளை செயல் இழக்க வைத்தல், அல்லது அவைகளோடு மோதி வெடிக்க வைக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

அறிக்கை

அறிக்கை

இந்த ஆய்வு அறிக்கை அடுத்த மாதம் பொது மக்கள் பார்வைக்கு வெளியிட இருப்பதாக சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ இயக்கம் தெரிவித்துள்ளது.

ஆபத்து

ஆபத்து

சீனாவின் சைபர் தாக்குதல் அமெரிக்க ராணுவ திட்டங்கள் மற்றும் தேசிய உள்கட்டமைப்புகளை அழிப்பதோடு செயற்கைகோள்கள் வெளிப்படுத்தும் மைக்ரோவேவ் கதிர்கள் அமெரிக்காவின் கணினி நெட்வர்க்களையும் கட்டுப்படுத்த முடியும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல்

தகவல்

வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டால் இது போன்ற தாக்குதல்களின் மூலம் அமெரிக்காவின் தகவல்களை அச்சுறுத்தும் என்பதோடு செயற்கைகோள்களை ஹேக் செய்து அழிக்கவும் முடியும் என்றும் கூறப்படுகின்றது.

அதிகரிப்பு

அதிகரிப்பு

அமெரிக்காவை தொடர்ந்து சீனாவும் விண்வெளி ஆயுதங்களை அதிகளவில் தயாரித்து வருவதாக கூறப்படுகின்றது. விண்வெளி தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் புதிய ஆயுதங்களை தயாரிக்க சீன குடியரசு தலைவர் சி ஜின்பிங் இந்தாண்டின் துவக்கத்தில் கேட்டுகொண்டிருப்பதாக அந்நாட்டின் சின்ஹூவா எனும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

'அமைதியான முறையில் விண்வெளியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறித்தி வந்தாலும், விண்வெளியில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வருவதோடு, ராணுவ பலத்தையும் கூட்டியுள்ளது, இதனால் நாமும் அவர்களுக்கு இணையாக அனைத்து வகையிலும் தயாராக வேண்டும்' என பெய்ஜங் நகரை சேர்ந்த விண்வெளி தகவல்களை வழங்கும் பத்திரிக்கையின் தலைவர் வாங் யனான் தெரிவித்திருந்தார்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்.

Best Mobiles in India

English summary
Latest details of Chinese space weapons revealed. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X