திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; வேற லெவல் டிமாண்டில் உள்ள லேட்டஸ்ட் Samsung போன்!

|

இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கென பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் இருப்பதால், புதிய Samsung மொபைல் போன்களின் அறிமுகங்கள் மீது மட்டுமின்றி, சாம்சங் மாடல்களின் மீது அறிவிக்கப்படும் விலைக்குறைப்புகள், வங்கி சலுகைகள் மற்றும் இ-காமர்ஸ் ஆபர்களையும் நாங்கள் உற்றுநோக்க வேண்டியதாக உள்ளது.

லேட்டஸ்ட் சாம்சங் மீது எக்கச்சக்கமான ஆபர்கள் அறிவிப்பு!

லேட்டஸ்ட் சாம்சங் மீது எக்கச்சக்கமான ஆபர்கள் அறிவிப்பு!

அப்படியாக தற்போது, சாம்சங்கின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது "எக்கச்சக்கமான" ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதென்ன மாடல்? அது என்னென்ன சலுகைகளை பெற்றுள்ளது? நம்பி வாங்கும் அளவிற்கு அது 'வொர்த்' ஆன போன் தானா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இந்த லிஸ்டில் உள்ள Xiaomi, Redmi, Poco போன் உங்ககிட்ட இருக்கா? ரொம்ப பாவம் நீங்க!இந்த லிஸ்டில் உள்ள Xiaomi, Redmi, Poco போன் உங்ககிட்ட இருக்கா? ரொம்ப பாவம் நீங்க!

கேலக்ஸி எஸ்21-ஐ விட

கேலக்ஸி எஸ்21-ஐ விட "சக்திவாய்ந்த" போன் மீது ஆபர்!

அது Samsung Galaxy S21 FE மாடல் ஆகும். நினைவூட்டும் வண்ணம், இது இந்த 2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் முதல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.

இது கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஸ்21 சீரிஸின் ஃபேன் எடிஷன் (Fan Edition) ஸ்மார்ட்போன் ஆகும்.

மற்ற ஃபிளாக்ஷிப் ஃபேன் எடிஷன் போன்களைப் போலவே, கேலக்ஸி எஸ்21 எஃப்இ மாடலும், வெண்ணிலா வேரியண்ட் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்21-ஐ விட அதிக சக்திவாய்ந்த அம்சங்களை பேக் செய்கிறது.

2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீது ஒரே மாதிரியான விலைக்குறைப்பு!

2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீது ஒரே மாதிரியான விலைக்குறைப்பு!

ஒருவேளை நீங்கள் ஒரு புதிய சாம்சங் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் - உங்களுக்கு ஒரு நல்ல செய்தி!

அது என்னவென்றால் Galaxy S21 ஸ்மார்ட்போனின் ஃபேன் எடிஷன் மீது ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், குறிப்பிட்ட விலைக்குறைப்பானது S21 FE ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளின் மீதும் அணுக கிடைக்கிறது.

இவ்ளோ கம்மி விலைக்கு 50MP கேமரா; 6.6-இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி-ஆ!இவ்ளோ கம்மி விலைக்கு 50MP கேமரா; 6.6-இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி-ஆ!

இனிமேல் இதுதான் Samsung Galaxy S21 FE மாடலின் புதிய விலை!

இனிமேல் இதுதான் Samsung Galaxy S21 FE மாடலின் புதிய விலை!

நினைவூட்டும் வண்ணம், Samsung கேலக்ஸி எஸ்21 FE ஆனது இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகமானது - ஒன்று 8GB + 128GB, மற்றொன்று 8GB + 256GB. இதன் அசல் விலைகள் முறையே ரூ.54,999 மற்றும் ரூ.58,999 ஆகும்

தற்போது இந்த இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளன.

ஆக வாடிக்கையாளர்கள் இப்போது 128 ஜிபி வேரியண்ட்டை ரூ.49,999 க்கும் மற்றும் 256 ஜிபி ஆப்ஷனை ரூ.53,999 க்கும் வாங்கலாம்.

இந்த புதிய விலை எங்கெல்லாம் பிரதிபலிக்கிறது?

இந்த புதிய விலை எங்கெல்லாம் பிரதிபலிக்கிறது?

சாம்சங் கேலக்ஸி S21 FE ஸ்மார்ட்போனின் இந்த புதிய விலை சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரதிபலிக்கிறது. மேலும் இதே விலைகள், பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசானிலும் பிரதிபலிக்கிறது.

அமேசானில் கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் ஆபரும் அணுக கிடைக்கும். அதன் கீழ் தகுதியான ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது, உங்களால் சாம்சங் கேலக்ஸி S21 FE-ஐ ரூ.12,500 முதல் வாங்க முடியும்.

Realme Pad X 5G: சொன்னபடி பட்ஜெட் விலையில் அறிமுகம்; ஆகஸ்ட் 1 முதல் விற்பனை!Realme Pad X 5G: சொன்னபடி பட்ஜெட் விலையில் அறிமுகம்; ஆகஸ்ட் 1 முதல் விற்பனை!

வங்கி சலுகைகள் பற்றி?

வங்கி சலுகைகள் பற்றி?

விலைக்குறைப்பு மற்றும் எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடிகளை தவிர்த்து, அமேசான் மற்றும் சாம்சங்கின் சொந்த இணையதளம் ஆகிய இரண்டிலுமே சில வங்கி சலுகைகளும் அணுக கிடைக்கிறது.

HDFC வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு சாம்சங் நிறுவனம் கூடுதலாக ரூ.2,000 என்கிற தள்ளுபடியை வழங்குகிறது. மேலும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் மீது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் அணுக கிடைக்கிறது

அமேசான் வலைத்தளத்தை போலவே சாம்சங் நிறுவனமும், இந்த ஸ்மார்ட்போனின் மீதான எக்ஸ்சேஞ்ச் சலுகையை வழங்குகிறது, இதன் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ.12,599 முதல் என்கிற விலைக்கு கேலக்ஸி எஸ் 21 எஃப்-ஐ சொந்தமாக்கி கொள்ளலாம்.

Samsung Galaxy S21 FE ஆனது ஆலிவ், கிராஃபைட், லாவெண்டர் மற்றும் ஒயிட் என்கிற 4 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ - என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ - என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

சாம்சங் Galaxy S21 FE ஆனது 6.4-இன்ச் அளவிலான FHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், கேம் மோட்-இல் 240Hz டச் சாம்ப்ளிங் ரேட், AI அடிப்படையிலான ப்ளூ லைட் கண்ட்ரோல் உடனான Eye Comfort Shield போன்றவைகளையம் பேக் செய்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 888 Octa-core ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் இது 4,500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 25W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் பவர்ஷேரையும் ஆதரிக்கிறது; ஆனால் அதற்கான சார்ஜர் தனியாக விற்கப்படுகிறது.

ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?

கேமராக்கள் எப்படி?

கேமராக்கள் எப்படி?

கேமராக்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஆனது f/2.2 மற்றும் 123˚ ஃபீல்ட் ஆஃப் வியூ கொண்ட 12MP அல்ட்ரா-வைட் கேமரா + f/1.8 உடனான 12MP வைட் அங்கிள் கேமரா + 30x ஸ்பேஸ் ஜூம் மற்றும் f/2.4 உடனான 8MP டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. முன்பக்கத்தில், f/2.2 உடனான 32MP செல்பீ கேமரா உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான One UI 4 மூலம் இயங்குகிறது. ஆப்டிகல் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இது IP68 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 5 அடி நீர் ஆழத்தில் சுமார் 30 நிமிடங்கள் வரை தாக்குப்பிடிக்கும்!

நம்பி வாங்கலாமா?

நம்பி வாங்கலாமா?

'ஓப்பன்' ஆக சொல்ல வேண்டும் என்றால், Samsung Galaxy S21 FE 5G ஆனது சாம்சங் நிறுவனத்தின் ஒரு அருமையான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். செயல்திறன் மற்றும் அம்சங்களின் அடிப்படையில் இதில் எந்த குறையும் சொல்ல முடியாது.

முன்னதாக இருந்த ஒரே குறை - சற்றே அதிகமான இதன் விலை நிர்ணயம் தான்; இப்போது ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளதால், அந்த குறையும் சரி செய்யப்பட்டுள்ளது. ஆக, இதை நம்பி வாங்கலாம்!

Photo Courtesy: Samsung

Most Read Articles
Best Mobiles in India

English summary
Latest 2022 Flagship Phone From Samsung Gets Rs 5000 Price Cut Offers Check Galaxy S21 FE New Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X