2022 இன் கடைசி கிரகணம்! நவ.,8 ரெடியா இருங்க.. நேரம் இதுதான்! மறக்காம இதை பண்ணுங்க!

|

2022 இன் கடைசி கிரகணம் நவம்பர் 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அன்று நடக்க இருப்பது சந்திர கிரகணம் ஆகும். சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் சமயத்தில் கிரகணம் நிகழ்கிறது. முழு சந்திர கிரகணம் கொல்கத்தா மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் பார்க்க முடியும் எனவும் பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவின் பிற பகுதிகளில் தெரியும் எனவும் வானியற்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நிகழும் சந்திர கிரகணம்..

நிகழும் சந்திர கிரகணம்..

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளை தவிர வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இந்த கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியும் வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சந்திர கிரகணம் அனைத்து இடங்களிலும் தெரியாது என்றாலும் கிரகணத்தின் பகுதி கட்டம் ஏணைய பகுதிகளில் தெரியும் என கூறப்படுகிறது.

எந்த இடத்தில் துல்லியமாக தெரியும்?

எந்த இடத்தில் துல்லியமாக தெரியும்?

நவம்பர் 8 ஆம் தேதி நடக்கும் சந்திர கிரகணம் ஆனது மதியம் 2:48 மணிக்கு தொடங்கி மாலை 6:19 மணிக்கு நிறைவடைகிறது. இந்த கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் தெரியும் என கூறப்படுகிறது. கொல்கத்தா உட்பட கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் உள்ளவர்கள் சந்திர கிரகணத்தின் மொத்த கட்டத்தையும் அனுபவிக்க முடியும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் கிழக்கு பகுதியில் சரியாக மாலை 4:52 மணி முதல் 4:54 மணி வரை முழுமையாக தெரியும் என கூறப்படுகிறது.

முழுமையாக இருக்கும் சந்திர கிரகணம்

முழுமையாக இருக்கும் சந்திர கிரகணம்

மதியம் 2:48 மணிக்கு தொடங்கி மாலை 6:19 மணி வரை நிகழும் இந்த சந்திர கிரகணம் சரியாக 5:11 மணிக்கு முழு கிரகணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முழுமையாக தெரியும் சந்திர கிரகணம் செப்டம்பர் 7, 2025 அன்று நடக்கும் எனவும் இருப்பினும் அக்டோபர் 2023 இல் நிகழும் சந்திர கிரகணத்தின் சிறிய பகுதி இந்தியாவில் காண முடியும் எனவும் கூறப்படுகிறது.

2022 இன் கடைசி கிரகணம்

2022 இன் கடைசி கிரகணம்

இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் என மொத்தம் 4 கிரகணங்கள் இந்தாண்டு நிகழ்கிறது. 2022 ஆம் ஆண்டின் நிகழும் 4 கிரகணங்களில் இது நான்காவது கிரகணம் ஆகும்.

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம்

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம்

இந்தாண்டின் முதல் சந்திர கிரகணமானது மே 15, 16 தேதிகளில் நடந்தது. சூரியன் பூமி மற்றும் சந்திரன் ஆகிய ஒரே கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கிறது. சூரிய ஒளி பூமியில் விழாதபடி சந்திரன் மறைக்கிறது. இதன் காரணமாக சந்திர கிரகணம் நிகழ்கிறது.

வெறும் கண்களால் கூட பார்க்கலாம்

வெறும் கண்களால் கூட பார்க்கலாம்

இதனால் முழு சந்திரனும் பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் விழுகிறது. இந்த நிகழ்வு அம்ப்ரா என அழைக்கப்படுகிறது. அதன்படி நிகழும் இந்தாண்டின் கடைசி கிரகணத்தை வெறும் கண்களால் கூட பார்க்கலாம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த கடைசி சூரிய கிரகணம்

நடந்து முடிந்த கடைசி சூரிய கிரகணம்

2022 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25 அன்று நடந்தது. ஐரோப்பா, யூரல்ஸ், மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா மற்றும் மேற்கு ஆசியா, ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதிகளை சேர்ந்தவர்கள் சூரிய கிரகணத்தை ஏறத்தாழ துல்லியமாக பார்க்க முடிந்ததாக கூறப்பட்டது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த கிரகணம் தென்பட்டதாக தகவல்கள் வெளியானது.

எப்படி பார்க்கலாம்?

பகுதி அல்லது வளைய கிரகணங்களை எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல எனவும் முன்னதாக நடந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நவம்பர் 8 ஆம் தேதி நடக்கும் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் கூட பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Last Lunar Eclipse to Occur on November 8: When and How to Watch Chandra Grahan?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X