Home
News

டிச.14 முதல் புது ஆதார் ரூல்ஸ்.. இனி ஒவ்வொரு முறையும் 50 ரூபாய்.. Aadhaar மையத்தில் கூட்டம் குவிய போகுது!

யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது - கடந்த பல மாதங்களாக - ஆதார் அட்டை தொடர்பான ஒரு புதிய மாற்றத்தை அமலுக்கு கொண்டுவர போராடி வந்தது. ஒருவழியாக இதற்கான கடைசி காலக்கெடு டிசம்பர் 14 ஆம் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அது இலவச ஆதார் அப்டேட்டிற்கான (Free Aadhaar Update) காலக்கெடுவாகும். ஆரம்பத்தில் இது ஜூன் 14, 2024 அன்று முடிவடைய இருந்தது. பின்னர் இலவச ஆதார் அப்டேட் காலம் மேலும் 2 முறை நீட்டிக்கப்பட்டது. முதலில் செப்டம்பர் 14 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு, இறுதியாக டிசம்பர் 14 ஆம் தேதிக்கு வந்து நிற்கிறது.

டிச.14 முதல் புது ஆதார் ரூல்ஸ்.. இனி ஒவ்வொரு முறையும் 50 ரூபாய்!

இது பெரும்பாலும், மீண்டும் நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதால், ஆதார் அட்டையில் உள்ள, உங்களை பற்றிய விவரங்களில் (பெயர், முகவரி போன்ற விவரங்களில்) ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால்.. அதை டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் செய்தால்.. இலவசமாக செய்யலாம். அதன்பிறகு ஒவ்வொரு முறையும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த இலவச சேவை அதிகாரப்பூர்வ மை ஆதார் போர்டல் வழியாக மட்டுமே கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது தற்போது வரையிலாக ஆன்லைன் வழியிலான ஆதார் அப்டேட் மட்டுமே இலவசமாக செய்ய கிடைக்கிறது. அதையே ஆதார் மையம் வழியாக செய்தால் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது இந்த கட்டண முறை ஆன்லைன் சேவைக்கும் வரவுள்ளது.

எனவே ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டியது இருந்தால், அதை இலவசமாக இப்போதே ஆன்லைன் வழியாக செய்து விடுங்கள். இல்லை என்றால் டிசம்பர் 14 ஆம் தேதிக்கு பிறகு ஆதார் மையங்களில் நீண்ட வரிசையில் நின்று அதை செய்ய வேண்டி இருக்கும்.

ஒருவேளை ஆன்லைன் வழியாக ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியாவிட்டால்.. இதோ அதை செய்வதற்கான படிப்படியான வழிமுறைகள்:
01. முதலில் அதிகாரப்பூர்வ யுஐடிஏஐ இணையதளத்தை (Official UIDAI Website) அணுகவும். அதாவது myaadhaar.uidai.gov.in க்கு செல்லவும்.

02. இப்போது மை ஆதார் (My Aadhaar) என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் அப்டேட் யுவர் ஆதார் (Update your Aadhaar) என்பதை கிளிக் செய்யவும்.
03. இப்போது அப்டேட் ஆதார் டீட்டெயில்ஸ் ஆன்லைன் (Update Aadhaar Details Online) பக்கத்தில் டாக்குமெண்ட் அப்டேட் (Document Update) என்பதை தேர்ந்தெடுக்கவும்.

04. ஆதார் அட்டை எண் (Aadhaar Card Number) மற்றும் கேப்ட்சா குறியீட்டை (Captcha Code) உள்ளிட்ட பின்னர் சென்ட் ஒடிபி (Send OTP) என்பதை கிளிக் செய்யவும்.
05. பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு (Registered Mobile Number) அனுப்பப்பட்ட ஒடிபி-ஐ பயன்படுத்தி லாக்-இன் (Login) செய்யவும்.

06. இப்போது நீங்கள் அப்டேட் செய்ய விரும்பும் விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும். அதாவது பெயர் (Name), முகவரி (Address) அல்லது பிறந்த தேதி (Date of birth - DOB).
07. புதுப்பிக்கப்பட வேண்டிய தகவலை வழங்கவும் மற்றும் அதற்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.

08. கடைசியாக சப்மிட் அப்டேட் ரெக்வஸ்ட் (Submit Update Request) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். இதை செய்து முடித்ததும், உங்கள் விண்ணப்பத்தை கண்காணிப்பதற்கான அப்டேட் ரெக்வஸ்ட் நம்பர் (Update Request Number - URN) ஆனது எஸ்எம்எஸ் வழியாக அனுப்பப்படும்.

ஒருவேளை நீங்கள் ஆதார் அட்டைக்கான பயோமெட்ரிக் விவரங்களில் மாற்றங்களை செய்ய வேண்டி இருந்தால்.. அதாவது கருவிழி, கைரேகைகள், மொபைல் எண் அப்டேட் அல்லது புகைப்படம் போன்ற விவரங்களை அப்டேட் செய்ய விரும்பினால், அதை ஆன்லைன் வழியாக செய்ய முடியாது; ஆஃப்லைனில் (ஆதார் சேவை மையம் வழியாகவே) செய்யப்பட வேண்டும். மேலும் பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்களை ஒரு முறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Last Chance Update Name Address Date of Birth in Aadhaar For Free Rs 50 Charge After December 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X