Home
News

விட்றாதீங்க.. நவ.18 உடன் விடைபெறும் BSNL சீனியர் சிட்டிசன் பிளான்.. மாசம் ரூ.151 செலவில் 365 நாள் வேலிடிட்டி!

சமீபத்தில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அறிமுகம் செய்திருந்த - சீனியர் சிட்டிசன்களுக்கான ஸ்பெஷல் பிளான் ஒன்று வருகிற 2025 நவம்பர் 18 ஆம் தேதிக்கு பிறகு ரீசார்ஜ் செய்ய கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது பிஎஸ்என்எல் சம்மன் பிளான் (BSNL Samman Plan) ஆகும்.

கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிஎஸ்என்எல் அறிவித்த பல வகையான சலுகைகளில் இதுவும் ஒன்றாகும். அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனமானது, மூத்த குடிமக்கள் என வகைப்படுத்தப்பட்ட 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட புதிய பயனர்களுக்கு 365 நாள் செல்லுபடியாகும் காலத்துடன் புதிய பிஎஸ்என்எல் சம்மன் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தது.

நவ.18 உடன் விடைபெறும் BSNL சீனியர் சிட்டிசன் பிளான்!

புதிய திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 2ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளுடன் வருகிறது. இந்த திட்டத்துடன் ஆறு மாத பிஐடிவி (BiTV) சந்தாவும் கிடைக்கும். இது ஒரு வரையறுக்கப்பட்ட கால சலுகையாகும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கூற்றுப்படி இது 2025 நவம்பர் 18 வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

சீனியர் சிட்டிசன் திட்டம் என்றும் அழைக்கப்படும் இந்த புதிய பிஎஸ்என்எல் சம்மன் திட்டத்தின் விலை ரூ.1,812 ஆகும். அதாவது மாதாந்திரம் ரூ.151 என்கிற செலவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. மாதந்தோறும் அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்ய விரும்பாத சீனியர் சிட்டிசன்கள், இந்த திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல் சேவையின் கீழ் புதிய கஸ்டமராக இணைவதன் மூலம் மலிவான விலைக்கு 1 ஆண்டு முழுவதுமான நன்மைகளை பெறலாம்.

நவம்பர் 15 ஆம் தேதி உடன் விடைபெறும் 1 ரூபாய் 4ஜி பிளான்: பிஎஸ்என்எல்-ன் ரூ.1812 சம்மன் திட்டத்தை போலவே 2025 தீபாவளி போனான்ஸாவின் ஒரு பகுதியாக, புதிய வாடிக்கையாளர்களுக்குகாக அறிவிக்கப்பட்ட ரூ.1 மதிப்பிலான 4ஜி திட்டமும் நவம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு ரீசார்ஜ் செய்ய கிடைக்காது

இந்த ரூ.1 திட்டத்தின் கீழ் புதிய கஸ்டமர்கள் ஒரு மாத கால இலவச மொபைல் சேவைகளை பெறலாம். அதாவது 30 நாள் செல்லுபடியாகும் காலத்துடன், புதிய பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் கட்டாய கேஒய்சி நடைமுறைக்குப் பிறகு, ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, டெய்லி 100 இலவசஎஸ்எம்எஸ்கள், இலவச சிம் கார்டு ஆக்டிவேஷன் ஆகியவற்றைப் பெறலாம். இதுவும் ஒரு குறிப்பிட்ட கால சலுகையாகும்; ஆர்வமுள்ளவர்கள் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் இந்த திட்டத்தை பெறலாம்.

8 பிஎஸ்என்எல் திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள் குறைப்பு: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் "திருத்தப்பட்ட" ரூ.1499 திட்டம் ஆனது இப்போது இது 32 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. முன்னர் 24 ஜிபி டேட்டாவை வழங்கியது. மேலும் இதன் வேலிடிட்டி 336 நாட்களில் இருந்து 300 நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது 160 நாட்கள் என்கிற வேலிடிட்டிக்கு பதிலாக 150 நாட்கள் வேலிடிட்டியை மட்டுமே வழங்குகிறது. பிஎஸ்என்எல் ரூ.897 ப்ரீபெய்ட் திட்டம் 180 நாட்கள் என்கிற வேலிடிட்டிக்கு பதிலாக இப்போது 165 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்.

மேலும் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி ஆனது 84 நாட்களில் இருந்து 70 நாட்களாக குறைக்கபட்டுள்ளது. பிஎஸ்என்எல் ரூ.439 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது 90 நாட்களுக்கு பதிலாக 80 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். பிஎஸ்என்எல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 65 நாட்களில் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர் இப்பொது 48 நாட்கள் செல்லுபடியாகிறது. முன்பு, இந்த திட்டம் 54 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வந்தது.

Best Mobiles in India

English summary
Last Chance to Senior Citizens in India BSNL Samman Plan Offer Ends November 18
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X