காட்டில் புதைந்துள்ள மாயா நாகரிகக் கட்டுமானங்கள்! வெளிக்கொண்டு வந்த லேசர் தொழில்நுட்பம் !

  மத்திய அமெரிக்காவின் வடபகுதியில் 2,50,000 சதுர கி்.மீட்டர் பரப்பளவில் யுகாடன் தீபகற்பம், கௌதமாலா, பெலிஸ் (Yucatan peninsula, Guatemala and Belize) ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த தாழ்நிலப் பகுதியை மாயா தாழ்நிலம் (Maya Lowland) என அழைக்கிறோம். இங்கு பரவியிருந்த நாகரிகத்தைச் செவ்வியல் மாயா நாகரிகம் (Classic Maya civilization) என்கிறோம்.

  செவ்வியல் காலத்தின் பிற்பகுதியில் அதாவது கி.பி.650 முதல் 800 வரையிலான காலப்பகுதியில் மாயா தாழ்நிலம் (Maya Lowland) முழுவதும் 11 மில்லியன் மக்கள் வாழ்ந்திருந்ததாகக் கணிக்கப்பட்டு உள்ளது.

  வான்வழிக் கண்ணாடியிழைத் தொலைவுணர்வுத் தொழில் நுட்பத்தின் வழியாக (technology of aerial optical remote sensing) ஆராய்ந்து பார்த்ததில், அழிந்து போன பழங்கால மாயா நாகரிகத்தின் அடுக்குக் கட்டுமானங்கள் (Maya complex), கௌதமாலாவில் அமைந்துள்ள பீடன் (Petén) என்னும் அடர்ந்த காட்டின் அடிப்பகுதியில் தென்பட்டுள்ளன.

  மத்திய அமெரிக்கப் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பழங்காலக் கட்டமைப்புகள் லிடார் (LiDAR) தொழில் நுட்பத்தின் மூலமாகக் கண்டறியப்பட்டுள்ளன.

  காட்டில் புதைந்துள்ள மாயா நாகரிகக் கட்டுமானங்கள்!

  கௌதமாலாவில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்தக் கட்டமைப்புகளில் வீடுகள், சாலைகள், கால்வாய்கள், கோவில்கள், பிரமிடுகள், தொகுப்புக் குடியிருப்புகள் என ஒரு பெரும் நகரத்துக்கு உரிய பல்வேறு வகையான கட்டமைப்புகள் உள்ளன.

  மாயா நாகரிகத்தைப் பற்றி முன்னர் கணித்து இருந்தததை விட மிகப் பெரிய நாகரிகமாக இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  காட்டில் புதைந்துள்ள மாயா நாகரிகக் கட்டுமானங்கள்!

  இந்த மாயா நாகரிகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏறக்குறைய 11 மில்லியன் மக்களுக்கு இருப்பிடமாகவும், அடையாளமாகவும் திகழ்ந்திருக்கிறது.

  லேசர் ஓளியின் மூலமாகத் தொலைவில் உள்ள கட்டமைப்புப் பகுதிகளைக் கண்டுணரும் தொழில் நுட்பமான லிடார் ஸ்கேன் (LiDAR scans) தொழில் நுட்பத்தின் வாயிலாகக் கண்டறியப்பட்டுள்ள மாய நாகரிகத்தைப் பற்றிய செய்திகள் ஆச்சரியம் அளிப்பவையாக உள்ளன.

  இதுவரை 362 சதுர கி்.மீட்டர் நிலப் பகுதிகளை ஆய்வு செய்துள்ள அறிஞர்கள், இன்னும் 952 சதுர கி.மீட்டர் விவசாய நிலப்பகுதிகளின் அடிப்பகுதியை ஆய்வு செய்ய இருக்கின்றனர்.

  காட்டில் புதைந்துள்ள மாயா நாகரிகக் கட்டுமானங்கள்!

  மாயா நாகரிகத்தின் பண்பாடு மற்றும் இயற்கைப் பாரம்பரியத்தை வெளிக் கொண்டு வருவதற்காக PACUNAMஎன்னும் அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் மூலமாக, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கெளதமாலாவைச் சேர்ந்த 18 அறிஞர்கள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு லிடார் தொழில் நுட்பத்தின் மூலம் (LiDAR technology) ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

  “ மாடிக் கட்டடங்கள், நீர்ப்பாசனக் கால்வாய்கள், அணைகள், பாதுகாப்புச் சுவர்கள் போன்றவற்றைப் பார்க்கும் பொழுது நாம் நினைத்து இருந்ததற்கும் மேலாக மாயா நாகரிகம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது” என்கிறார் ஆய்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் துறைப் பேராசிரியர் ஃபிரான்சிஸ்கோ எஸ்ட்ராடா-பெல்லி (Francisco Estrada-Belli) என்பவர்.

  “லிடார் தொழில் நுட்பம் அடர்ந்த வனப் பகுதியையும் ஊடுருவி நிலப்பகுதியில் மறைந்துள்ள மனிதர்களால் எழுப்பப்பட்டுள்ள கட்டுமானங்களைக் கண்டறிய உதவுகிறது” என்கிறார் மார்செல்லோ கனுடோ (Marcello Canuto) என்னும் ஆராய்ச்சியாளர்.

  லிடார் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி PACUNAM அமைப்பு நடத்தும் இந்த ஆய்வு இடை அமெரிக்கக் கண்டத்தில் (Mesoamerican) மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளிலேயே மிகவும் பரந்து விரிந்ததாகக் கருதப்படுகிறது.

  ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வு முயற்சிகள் மாயா நாகரிகம் குறித்த மிகத் துல்லியமான தவல்களைத் தருகின்றன. இந்த ஆய்வுகள், மாயா தாழ்நிலத்தில் நிலவிய நகர நாகரிகம், பண்பாடு, இயற்கைப் பாரம்பரியம் குறித்த விவாதங்களுக்குப் புத்துயிர் அளித்துள்ளன.

  English summary
  Lasers Reveal More than 60,000 Lost Maya Structures hidden in the Jungle: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more