லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: பெண்ணின் உயிரை காப்பற்றிய ஐபோன்.!

By Prakash
|

அமெரிக்காவின் லாஸ் வேகாஸிலுள்ள கேசினாவில், இசை நிகழ்ச்சி நடைபெற்றுவந்தது. அந்த இசை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக சுமார் 25 ஆயிரம் பேர் வரை அந்த இடத்தில் கூடியிருந்தனர். அப்போது அருகில் இருக்கும் ஹோட்டல் அறையில் இருந்து ஸ்டீபன் பாடக் என்பவர் சுட்டதில் 58 பேர் பலியாகினர், 500 பேர் காயம் அடைந்தனர்.

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: பெண்ணின் உயிரை காப்பற்றிய ஐபோன்.!

இங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சியை நன்கு நோட்டமிட்டு இந்த படாக் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கிறார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழக்க வேண்டிய ஒரு பெண் தான் வைத்திருந்த ஐபோன் மூலம் உயிர்பிழைத்தார்.

அமெரிக்கா:

அமெரிக்கா:

அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் ‘ரூட் 91 ஹார்வெஸ்ட்' என்ற பெயரில் 3 நாள் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி செப்டம்பர் 29-ல் தொடங்கியது. மேலும் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு மண்டாலே பேரிசார்ட் அண்ட் கேசினோ என்ற ஓட்டலுக்கு எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடகர் ஜேசன் அல்தீன் பாடிக் கொண்டிருந்தார்.

 மண்டாலே பே:

மண்டாலே பே:

மண்டாலே பே ஓட்டலின் 32-வது மாடியிலிருந்த ஓர் அறையிலிருந்து ஸ்டீபன் படாக் துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சுட்டத்தில் 58 பேர் பலியாகினர்.
மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

23 துப்பாக்கிகள்:

23 துப்பாக்கிகள்:

இச்சம்பவத்தை தொடர்ந்து ஸ்டீபன் படாக் தங்கியிருந்த விடுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்து
மொத்தம் 23 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவரது வீட்டில் இருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஸ்டீபன் படாக்:

ஸ்டீபன் படாக்:

குற்றவாளி ஸ்டீபன் படாக், ஏகே 47 ரக துப்பாக்கி மூலம் பொது மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளான்.

ரோஸ் கோல்டு ஐபோன்:

ரோஸ் கோல்டு ஐபோன்:

இந்த சம்பவத்தில் உயிரிழக்க வேண்டிய ஒரு பெண் தான் வைத்திருந்த ரோஸ் கோல்டு வண்ண ஐபோன் மூலம் உயிர்பிழைத்தார் என தகவல்
வெளிவந்துள்ளது, ஐபோன் தன் உடலில் தோட்டா நுழையாமல் தடுத்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Las Vegas Victim Miraculously Survives After Bullet Hits Her iPhone During Mass Shooting; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X