செவ்வாய் கிரகத்தில் 2 மிகப்பெரிய நிலநடுக்கம் பதிவு: 94 நிமிடங்கள் அதிர்ந்த கிரகம்.. காலனி அமைப்பதில் சிக்கலா?

|

பூமிக்கு நிகரான மற்றொரு வாழக்கூடிய கிரகமாகச் செவ்வாய் கிரகத்தை உருவாக்க மனிதன் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறான். கிரகம் விட்டு கிரகம் தாண்டி நடைபெறும் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் பல நம்ப முடியாத வினோத தகவல்கள் நமக்குக் கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கண்டறியப்பட்ட தகவலின் படி, செவ்வாய் கிரகத்தில் இதுவரை நிகழ்ந்திடாத வகையில் மிகப் பெரிய நிலநடுக்க நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, ஒன்றல்ல இரண்டு மிகப் பெரிய நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாயில் பதிவான இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கங்கள்

செவ்வாயில் பதிவான இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கங்கள்

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் இன்சைட் லேண்டரின் நில அதிர்வு அளவீடு மூலம் இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்களில் ஒன்று ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆகவும், மற்றொரு நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகவும் பதிவாகியுள்ளது. அதிகாரப்பூர்வமாகக் கிடைக்கக்கூடிய தரவுகளின்படி, இந்த இரண்டு பூகம்பங்களும் செவ்வாய் கிரகத்தில் இதுவரை ஏற்பட்டு, கண்டறியப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களை விட சுமார் ஐந்து மடங்கு மிகவும் வலிமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

நாசாவின் இன்சைட் லேண்டரின் புதிய கண்டுபிடிப்பு

நாசாவின் இன்சைட் லேண்டரின் புதிய கண்டுபிடிப்பு

இன்சைட் மூலம் கண்டறியப்பட்ட மற்ற நில அதிர்வு நடவடிக்கைகளுடன் இந்த நிகழ்வை ஒப்பிடுகையில், இரண்டு புதிய நிலநடுக்கங்களும் உண்மையான புறநிலைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்."அவை கணிசமான வித்தியாசத்தில் மிகப்பெரியவை மற்றும் மிக தொலைதூர நிகழ்வுகள் மட்டுமல்லாமல், S1000a ஸ்பெக்ட்ரம் மற்றும் கால அளவை இது கொண்டுள்ளது. இவை உண்மையிலேயே செவ்வாய் கிரக நில அதிர்வு அட்டவணையில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்," என்று திட்ட ஆராய்ச்சியாளரான பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அன்னா ஹார்லெஸ்டன் கூறியுள்ளார்.

90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..

செவ்வாய் கிரகத்தில் இது எங்கு உருவானது தெரியுமா?

செவ்வாய் கிரகத்தில் இது எங்கு உருவானது தெரியுமா?

இந்த ஆராய்ச்சி, அமெரிக்காவின் நில அதிர்வுப் பதிவு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பள்ளத்தாக்கு வலையமைப்பு மற்றும் சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிராபென் அமைப்புகளில் ஒன்றான வாலஸ் மாறினேரிஸ் (Valles Marineris) இல் 4.2 அளவு நிலநடுக்கத்தின் (S0976a என அழைக்கப்படும்) தோற்றத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பகுதி நில அதிர்வு சுறுசுறுப்பாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக நம்பினர், ஆனால் இந்த நிகழ்வு அதன் நில அதிர்வு செயல்பாட்டின் முதல் உறுதிப்படுத்தல் ஆகும்.

24 நாள் இடைவெளியில் மிகப் பெரிய நிலநடுக்கம்

24 நாள் இடைவெளியில் மிகப் பெரிய நிலநடுக்கம்

முதல் நிகழ்விற்கு 24 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது 4.1 ரிக்டர் அளவுள்ள செவ்வாய் நடுக்கம் (S1000a) பதிவானதாக அமெரிக்காவின் நிலநடுக்கவியல் சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு முதன்முறையாக பிடிஃப் அலைகள், சிறிய அலைவீச்சு அலைகள் கோர் மேன்டில் எல்லையைக் கடந்து சென்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசாவின் மார்ஸ் இன்சைட் லேண்டர் மிஷன் மூலம் நடப்பட்ட நில அதிர்வு அளவி கண்டறியப்பட்டது. இது செவ்வாய் கிரகத்தின் தொலைதூரத்தில் உருவானது என்பதைத் தவிர, ஆராய்ச்சியாளர்களால் அதன் சரியான இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

செவ்வாய் கிரகத்தில் சூரிய கிரகணம்: நாசாவின் பெர்ஸ்வெரன்ஸ் ரோவர் எடுத்த வீடியோ.. மார்ஸுக்கு இரண்டு நிலவுகளா?செவ்வாய் கிரகத்தில் சூரிய கிரகணம்: நாசாவின் பெர்ஸ்வெரன்ஸ் ரோவர் எடுத்த வீடியோ.. மார்ஸுக்கு இரண்டு நிலவுகளா?

94 நிமிடங்கள் நீடித்து நிலைத்த செவ்வாய் கிரக நிலநடுக்கம்

94 நிமிடங்கள் நீடித்து நிலைத்த செவ்வாய் கிரக நிலநடுக்கம்

இந்த நிகழ்வும் உண்மையில் நாம் எதிர்பார்த்திடாத வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இது வெளியிடப்பட்ட நில அதிர்வு ஆற்றல் செவ்வாய் கிரகத்தில் மிக நீளமாகப் பதிவாகி சுமார் 94 நிமிடங்கள் நீடித்து நிலைத்துள்ளது. இந்த இரண்டு நிலநடுக்க நிகழ்வுகளின் நில அதிர்வுத் தரவைப் படித்த பிறகு செவ்வாய் கிரகத்தில் உள்ள உள் அடுக்குகளைப் பற்றி மேலும் அறிய ஆராய்ச்சியாளர்கள் இப்போது முயல விரும்புகிறார்கள். இதன் மூலம், செவ்வாய் கிரகம் பற்றி நாம் இன்னும் அதிகப்படியான புதிய தகவலைக் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

செவ்வாய் கிரகத்தில் மனித காலனியை அமைக்க இன்னும் கூடுகள் ஆராய்ச்சி

செவ்வாய் கிரகத்தில் மனித காலனியை அமைக்க இன்னும் கூடுகள் ஆராய்ச்சி

நமது விண்வெளி விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தை காலனித்துவப்படுத்த திட்டமிட்டுள்ளதால் செவ்வாய் கிரகம் முக்கிய ஆர்வமாக உள்ளது. இந்த நிகழ்வுகள் நிலையான மனித இருப்பு சாத்தியமா இல்லையா என்பது பற்றிய நுண்ணறிவை அளிக்கும். செவ்வாய் நிலநடுக்கங்கள் குறிப்பிட்ட நிறமாலை அளவுகோலில் அளவிடப்படுகின்றன, அதேசமயம் பூகம்பங்கள் ரிக்டர் அளவுகோலைப் பயன்படுத்திக் கணக்கிடப்படுகின்றன. பூமி வாசிகளுக்கான செவ்வாய் கிரக காலனியை உருகுவதற்கு முன், செவ்வாய் கிரகத்தில் இருக்கும் சாத்தியக் கூறுகளைப் பற்றி நாம் தெளிவாக ஆராய வேண்டும் என்பது முக்கியமானது.

WhatsApp, Messenger, Telegram டிரிக்ஸ்: எரிச்சலூட்டும் மெசேஜ்களை எப்படி மியூட் செய்வது? இனி பிளாக் வேண்டாம்..WhatsApp, Messenger, Telegram டிரிக்ஸ்: எரிச்சலூட்டும் மெசேஜ்களை எப்படி மியூட் செய்வது? இனி பிளாக் வேண்டாம்..

Most Read Articles
Best Mobiles in India

English summary
Largest Two Marsquakes Till Date Detected On Mars What Does This Mean : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X