ரொம்ப பெருசு., அணல் வேகம்: நெருக்கமாக கடக்கும் விசித்திர விண்கல்- பூமிக்கு ஆபத்தா?
2001 FO32 விண்கல் வழக்கத்திற்கு மாறான விரைவான நெருக்கமான அணுகுமுறை, அதிக சாய்வான மற்றும் நீளமான விசித்திர சுற்றுப்பாதையை கொண்டிருக்கிறது. 2001 FO32 விண்கல் பல நூற்றாண்டுகளுக்கு பூமி மீது மோதும் என்ற அச்சுறுத்தல் இல்லை என்றாலும் இது அபாயகரமான விண்கல் ஆகும்.

விண்கல் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.

எரிகல் அல்லது எரி நட்சத்திரம்
எரிகல் அல்லது எரி நட்சத்திரம் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சிலவற்று பூமியில் விழுந்து, நினைத்து பார்க்கமுடியா பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.

பெரும்பாலான விண்கற்கள் பூமியை எதிர்கொள்ளும் வேகத்தைவிட அதிவேகத்தை கொண்டிருக்கும் விண்கல்தான் 2001 FO32. இது 2001 FO32 அபாயகரமான விண்கல் என பெயரிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு பூமியை கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்ட விண்கல்தான் 2001 FO32. இது பூமியில் இருந்து 2 மில்லியன் கிமீ தூரம் இருக்கும் அருகில் வராது என்றாலும், இது பூமிக்கும் சந்திரனுக்கும் ஆன தூரத்திற்கு 5 மடங்கு சமம் ஆகும்.

2001 FO32 விண்கல் பல நூற்றாண்டுகளுக்கு பூமி மீது மோதும் என்ற அச்சுறுத்தல் இல்லை என்றாலும் இது அபாயகரமான விண்கல் ஆகும். வானியல் அடிப்படையில் இது மிக நெருக்கம் என கருதப்படுகிறது. பிற விண்கற்களை விட மிக வேகமாக அதாவது 1,24,000 கிமீ வேகத்தில் இந்த விண்கல் செல்லும். 2001 FO32 விண்கல் சுற்றுப்பாதை வித்தியாசமாக வழக்கத்திற்கு மாறாக சூரியனை சுற்றி நெருக்குமான அணுகுமுறையை கொண்டுள்ளது.

புதனைவிட சூரியனுக்கு நெருக்கமாக இருக்கும் விண்கல்
2001 FO32 விண்கல் ஆனது 39 டிகிரி சாய்ந்தும், புதனைவிட சூரியனுக்கு நெருக்கமாக இருப்பதாகவும் செவ்வாய் கிரகத்தைவிட இரண்டு மடங்கு தொலைவாகவும் இருக்கிறது. 2001 FO32 விண்கல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் சூரியனை நோக்கி திரும்பிய பிறகு விண்கல் வேகம் குறைவதாக கூறப்படுகிறது.

2052 வரை விண்கல் பூமிக்கு அருகில் வராது
விண்கல் பூமியை பாதிக்கக்கூடும் வாய்ப்பு மிகக் குறைவு, காரணம் 2052 வரை இந்த விண்கல் பூமிக்கு அருகில் வர வாய்ப்பில்லை என்பதாகும். பிற விண்கற்களைவிட இந்த விண்கல் வேகமாக பயணித்து வந்தாலும் இது பூமியை மோதும் அச்சுறுத்தல் இல்லை என நாசா தரப்பில் இந்தமாத தொடக்கத்தில் கூறப்பட்டது.

விசித்திர சுற்றுப்பாதையில் விண்கல்
2001 FO32 விண்கல் வழக்கத்திற்கு மாறான விரைவான நெருக்கமான அணுகுமுறை, அதிக சாய்வான மற்றும் நீளமான விசித்திர சுற்றுப்பாதையை கொண்டிருக்கிறது. இந்த விண்கல் 0.8 முதல் 1.7 கிலோமீட்டர் விட்டம் கொண்டுள்ளதாக லைவ் சயின்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

விண்கல் சுற்றுப்பாதை கண்காணிப்பு
சூரியனை சுற்றியுள்ள 2001 FO32 விண்கல் சுற்றுப்பாதையை மிகவும் துல்லியமாக அறிவோம் எனவும் 20 ஆண்டுகளுக்கு முன்பே இது கண்டுபிடிக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது. தூரம் வானியல் அடிப்படையில் நெருக்கமாக இருந்தாலும் பூமிக்கு அருகில் வர வாய்ப்பில்லை. 2001 FO32 விண்கல் அபாயகரமானதாக நியமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications