அடுத்த மாதம் இந்நேரம்., 31,320 கிமீ வேகம், 4 கிமீ அகலம் பூமியை தாக்கவரும் விண்கல்: NASA விளக்கம்

|

மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி பயணிப்பதாகவும், இந்த விண்கல் பூமியை தாக்கினால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் எனவும் நாசா அறிவித்துள்ளது.

சிறு கற்களும், உலோகப் பாறைகளும்

சிறு கற்களும், உலோகப் பாறைகளும்

விண்கல் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.

எரிகல் அல்லது எரி நட்சத்திரம்

எரிகல் அல்லது எரி நட்சத்திரம்

எரிகல் அல்லது எரி நட்சத்திரம் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சிலவற்று பூமியில் விழுந்து, நினைத்து பார்க்கமுடியா பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.

ரூ.300-க்குள்ள தான் நம்ம பட்ஜெட்:Jio Vs Airtel Vs Vodafone சிறந்த திட்டங்கள்.,காசு மிச்சமாகும் பாஸ்!ரூ.300-க்குள்ள தான் நம்ம பட்ஜெட்:Jio Vs Airtel Vs Vodafone சிறந்த திட்டங்கள்.,காசு மிச்சமாகும் பாஸ்!

மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள்

மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள்

சூரிய குடும்பத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள் சில நேரங்களில், வியாழனின் ஈர்ப்பு விசை காரணமாக உள் சூரிய மண்டலத்தை நோக்கி பயணிக்கிறது, அதில் சிலவற்று பூமியை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது.

மூன்று வருடங்களாக சுற்றி வரும் நிலா

மூன்று வருடங்களாக சுற்றி வரும் நிலா

அதன்படி பூமியை சுற்றி வரும் புதிய நிலா ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மைனர் பிளானட் சென்டர் (Minor Planet Centre) அறிவித்தது. மூன்று வருடங்களாக சுற்றுவரும் இந்த நிலா தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு `2020 CD' என பெயரிடப்பட்டது.

4 கிலோமீட்டர் அகலம் கொண்ட பிரம்மாண்ட எரிகல்

4 கிலோமீட்டர் அகலம் கொண்ட பிரம்மாண்ட எரிகல்

நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட பிரம்மாண்ட எரிகல் ஒன்று பூமியை நோக்கி வந்துக் கொண்டு இருக்கிறது. இந்த எரிகல் வரும் ஏப்ரல் 29ம் தேதி, புதன்கிழமை அதிகாலை 4:56 மணிக்கு பூமிக்கு மிக அருகில் இந்த எரிகல் பறந்து செல்லும் என கணிக்கப்படுகிறது.

சிறிய துகள்களாக மாறவே அதிக வாய்ப்பு

சிறிய துகள்களாக மாறவே அதிக வாய்ப்பு

குறிப்பாக இந்த எரிகல் பூமியின் மீது மோதினால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது. அப்படி நடப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு என்றும் பூமியை எரிகல் நெருங்கும்போது அளவு குறைந்து சிறிய துகள்களாக மாறவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் அறிவித்துள்ளது நாசா. இந்த எரிகல்லுக்கு 52768 (1998 OR2) என பெயரிடப்பட்டுள்ளது.

31 ஆயிரத்து 320 கிலோமீட்டர் வேகத்தில் வரும் எரிகல்

31 ஆயிரத்து 320 கிலோமீட்டர் வேகத்தில் வரும் எரிகல்

இந்த எரிகல் முதலில் 1998 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எரிகல் மணிக்கு 31 ஆயிரத்து 320 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த எரிகல் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது என்பதால் இதை அபாயகரமான எரிகல்லாக நாசா குறிப்பிட்டுள்ளது.

மை டியர் PhonePe முடியலனா எங்களோட வாங்க., ஒரு ஆணியும் வேணாம்: டுவிட்டரில் மோதல் Paytm vs PhonePe!மை டியர் PhonePe முடியலனா எங்களோட வாங்க., ஒரு ஆணியும் வேணாம்: டுவிட்டரில் மோதல் Paytm vs PhonePe!

2028-ம் ஆண்டு பூமியின் அருகில் வரும் மற்றொரு எரிகல்

2028-ம் ஆண்டு பூமியின் அருகில் வரும் மற்றொரு எரிகல்

2028-ம் ஆண்டு பூமியின் அருகில் வரும் 1991-ஆம் ஆண்டு இதே போன்றதொரு '1991 VG' என்று பெயரிடப்பட்ட குட்டி கோள் ஒன்று பூமியைச் சில வருடங்கள் சுற்றி வந்தது. பின்னர் அது வேறு பாதையில் பூமியை விட்டு வெகு தூரம் சென்று விட்டது. இது மீண்டும் 2028-ம் ஆண்டு பூமியின் அருகில் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FILE IMAGES

Best Mobiles in India

English summary
Large asteroid expected to fly near by earth NASA says

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X