டிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.! வியக்கும் பிற மாநிலங்கள்.!

யூடியூப் டியூசன் முறையும், தனி டிவி சேனல், மாணவர்களுக்கு லேப்டாப், ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த லேப்டாப் என்று டிஜிட்டல் பரிமாணத்தில் தமிழக பள்ளி கல்விதுறை சென்று கொண்டிருக்கின்றது.

|

தமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சீராக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

டிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை: வியக்கும் பிற மாநிலங்கள்

யூடியூப் டியூசன் முறையும், தனி டிவி சேனல், மாணவர்களுக்கு லேப்டாப், ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த லேப்டாப் என்று டிஜிட்டல் பரிமாணத்தில் தமிழக பள்ளி கல்விதுறை சென்று கொண்டிருக்கின்றது.

சிபிஎஸ்சி கல்வி தரத்தில் உள்ள மற்ற மாநிலங்களையும் தமிழ பள்ளி கல்விதுறை வியக்க வைத்துள்ளது.

யூடியூப் கல்வி முறை:

யூடியூப் கல்வி முறை:

யூடியூப் கல்வி முறை தமிழகத்தில் தற்போது பட்டி தொட்டி எங்கும் சூறாவளி போல் பரந்து விரிந்து கிடக்கின்றது. அதாவது தனியார் துறைகளே டிஜிட்டல் கல்வி மயத்துக்கு மாறாத போது, தமிழக பள்ளி கல்விதுறை யூடியூப் டியூசன் முறை அறிமுகம் செய்தது.
இது மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

டிஜிட்டல் கல்வி முறை:

டிஜிட்டல் கல்வி முறை:

அனுபவமிக்க ஆசியர்கள் மற்றும் பாட புத்தகம் தயாரித்த ஆசியர்களின் விளக்களுடன் தற்போது, வீடியோ காணொளி மாணவர்களின் சந்தேகங்களுக்கு எளிய முறையில் யூடிப்பில் வலம் வருகின்றது. இதற்கு பெரும் அடித்தளமிட்ட பள்ளி கல்வித்துறையின் முயற்சியை அனைத்து தரப்பு மாணவர்களும் வரவேற்றுள்ளனர்.

டிஎன் எஸ்சிஇஆர்டி (TN SCERT):

கற்றல் குறைபாடுகளை களையும் விதமாகவும், கடினமாக உள்ள பாடங்களை மாணவர்கள் மத்தியில் எளிதில் புரிய வைக்கும் விதமாகவும் தமிழக பள்ளி கல்வி துறை கடந்த 4 மாத்திற்கு முன் TN SCERT என்ற யூடியூப் சேனலை துவங்கியது. இதில் பல்வேறு வகுப்பு பாடங்களும் இடம் பெற்றுள்ளன.

ஏராளமான பாடப்பிரிவுகளுக்கும் யூடியூப் காணொளியின் விளக்கம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. இதை ஏராளமான மாணவர்களும் ஆவலுடன் தேவைப்படும் நேரத்தில் எடுத்து சந்தேகங்களை தீர்த்து வருகின்றனர்.

தேசிய நுழைவுத் தேர்வுக்கும் தயார்:

தேசிய நுழைவுத் தேர்வுக்கும் தயார்:

நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கும் 50 சதவீதம் வினாக்கள் பெரும்பாலும் 11ம் வகுப்பு மாணவர்களின் பாட புத்தங்களில் இருந்து தான் கேள்விகள் கேட்படுகின்றது.

இதற்காக தற்போது பள்ளி கல்வி துறை இந்த TN SCERT என்ற யூடியூப் சேனலை துவங்கியுள்ளது. இந்த நவீன தொழில் நுடப்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு எளிமையாக விளக்கத்துடன் வீடியோ காணொலிகளை தினமும் பதிவிட்டு வருகின்றது.

டியூசன் செலவும் மிச்சம்:

டியூசன் செலவும் மிச்சம்:

மாணவர்கள் டியூசன் சென்றாலும் அவர்களுக்கு சரியாக புரியாது. திரும்ப திரும்ப மாணவர்களின் சந்தேகங்களுக்கும் டியூசன் ஆசிரியர்களாலும் பதில் அளிக்க முடியாது.

தற்போது தமிழக பள்ளி கல்வி துறை உருவாக்கியுள்ள இந்த வீடியோ காணொளி யூடியூப் டியூசன் முறையில் எந்த நேரத்திலும், எங்கே இருந்தாலும் உடனடியாக பாடங்களை பார்த்தும் சந்தேகங்களையும் போக்க கொள்ள முடியும். வீடியோக்களை தேவைப்படும் போது, நிறுத்தியும் சந்தேகத்தை போக்கியும் கொள்ளலாம். இது மாணவர்களுக்கு விளையாட்டு போலவே இருக்கும்.

பெற்றோர்கள் மகிழ்ச்சி:

பெற்றோர்கள் மகிழ்ச்சி:

சென்னை உள்ளிட்ட பெரும் நகரங்களை பொறுத்த வரை ஒரு பாட பிரிவுக்கு ரூ.10000 வரை ஒரு ஆண்டுக்கு ஆகின்றது எனத் தெரிய வருகின்றது. பள்ளி கல்விதுறையின் இந்த முயற்சி தற்போது பலன் அளித்துள்ளதால், டியூசனுக்கு செலவிடும் பணம் மிச்சமாகும் என்று பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

80,000 சப்ஸ் கிரைப்:

80,000 சப்ஸ் கிரைப்:

TN SCERT என்ற யூடியூப் சேனலை இதுவரை 80,000 பேர் சப்ஸ் கிரைப் செய்துள்ளனர். மேலும், 1,20, 000 பேர் இதுவரை வீடியோக்களை பார்த்துள்ளனர். கிராம புறம் முதல் நகரங்கள் வரை அனைத்து பள்ளி மாணவர்களும் இந்த பள்ளி கல்வி துறையின் வீடியோவால் பயனடைந்து வருகின்றனர்.

 தனி டிவி சேனல்:

தனி டிவி சேனல்:

தமிழக பள்ளி கல்வி சார்பில் தனியாக டிவி துவங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இதற்கான ஆயத்த பணிகளும் திட்ட மதிப்பீடுகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

ஈரோட்டில் அமைச்சர்:

ஈரோட்டில் அமைச்சர்:

நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். பிறகு, செய்தியாளர்களிடம் கூறுகையில், "அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திறக்கப்படும் இதேபோன்ற மையத்தில், குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் உதவி பெறலாம்.
இதில் அனைத்து சந்தேகங்களும் தீர்த்துக் கொள்ளலாம்.

டிஜிட்டல் மயத்தில் தமிழக பள்ளிகல்வி:

டிஜிட்டல் மயத்தில் தமிழக பள்ளிகல்வி:

வரும் கல்வியாண்டு முதல் பாடம் நடத்த ஏதுவாக ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் எனவும் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். தற்போது முழுவதுமாக தமிழக பள்ளிகல்விதுறை டிஜிட்டல் யுகத்தில் மாறி வருகின்றது. இதை பார்த்து மற்ற மாநிலங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Laptops for teachers in government’s next digital push : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X