விமானத்தில் செக்-இன் பைகளில் லேப்டாப் வைக்க தடை வரலாம்!

|

விமான பயணத்தின் போது ஸ்மார்ட்போன்களைப் போன்ற மின்னணு கேஜெட்டுகள் தீ பிடிக்கும் பல சம்பவங்களைக் குறித்து கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கேட்கிறோம். இந்த வார துவக்கத்தில், டெல்லி இருந்து இந்தூருக்கு சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், கேலக்ஸி ஜெ7 ஸ்மார்ட்போனில் இருந்து புகை எழும்பிய செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் செக்-இன் பைகளில் லேப்டாப் வைக்க தடை வரலாம்!

இந்நிலையில் விமான பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், லேப்டாப் போன்ற பெரியளவிலான தனிப்பட்ட மின்னணு சாதனங்கள் செக்-இன் பைகளில் வைக்க, சர்வதேச விமான ஏஜென்ஸிகள் தடை விதிக்க துவங்கியுள்ளன.

ஏனெனில் செக்-இன் பைகளில் இவற்றின் பேட்டரிகளை கண்காணிக்க முடியாமல் போகலாம். டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், இதுபோன்ற மின்னணு சாதனங்கள் தீப்பிடிப்பதைத் தவிர்க்கும் ஒரு நடவடிக்கையாக இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், சூட்கேஸில் வைக்கப்படும் போது லேப்டாப் போன்ற பெரியளவிலான மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள், எளிதில் தீப்பற்றி எரியும் அபாயம் உள்ளது.

இந்த சூழ்நிலையில் விமானத்தில் உள்ள தீ தடுப்பு அமைப்பு, இதை சாதாரணமாக எடுத்து கொண்டால், முழு விமானத்தின் இழப்பிற்கு வழிவகுப்பதாக அமைய வாய்ப்புள்ளது.

அறிமுகம் : சூப்பர் பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் நோக்கியா 2.!அறிமுகம் : சூப்பர் பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் நோக்கியா 2.!

ஆனால் மேற்கூறிய எலக்ட்ரானிக் சாதனங்கள், பயணிகளின் கைப்பைகளில் இருக்கும் பட்சத்தில், அவற்றில் இருந்து புகை வருவது பயணிகளுக்கு தெரியவரும். அதைத் தொடர்ந்து பெரியளவிலான மின்னணு சாதனங்கள் தீப்பற்றி எரியும் சம்பவத்தை எப்படி கையாளுவது என்ற பயிற்சி, விமான பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு விமானத்தின் சரக்கு பகுதியில் உள்ள ஏதாவது ஒரு எலக்ட்ரானிக் சாதனம் தீப்பற்றி எரிந்து, அது முழுமையாக பரவி விமான ஓட்டுநர் பகுதியான காக்பிட்டில் எச்சரிக்கை மணி ஒலிக்கும் வரை, சரக்கு பகுதியில் உள்ள விமான பணியாளர் அறிய முடியாது என்தால் செக்-இன் லக்கேஜில் தனிப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை வைக்க தடை விதிக்கப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்குள் மிகவும் காலம் கடந்திருக்கும் என்பதோடு, சரக்கு பகுதிக்குள் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.

மற்றொருபுறம், மேற்கூறிய எலக்ட்ரானிக் சாதனங்கள் கேபின் பகுதியில் இருக்கும்பட்சத்தில், புகை எழும்பினாலும் பலருக்கும் தெரியவரலாம் என்பதால், விமான பணியாளர்களால் அந்தச் சூழ்நிலையை மிக விரைவாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.

விமானத்தின் செக்-இன் பைகளில் தனிப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு தடை விதிக்கும் கருத்தை குறித்து சர்வதேச விமான ஏஜென்ஸிகள் ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் ஏதாவது ஒரு முன்னணி விமான பயண ஏஜென்ஸி, மேற்கூறிய முடிவை ஏற்றுக் கொண்டால், அந்த நடபடியை இந்தியாவும் பின்பற்றும் என்று பொது விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏற்கனவே நம் நாட்டில் விமானங்களில் உள்ள சென்-இன் பைகளில், பவர் பேங்க், இ-சிகரெட்கள் மற்றும் மொபைல்போன் சார்ஜர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Laptops are said to be soon banned from the check-in luggage on flights in India in order to prevent fire accidents during flight.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X