Home
News

பொதுமக்களை கவர்ந்த மொழிபெயர்ப்புக் கருவி: நம்ம ஊருக்கு ஒரு பார்சல்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிபெயர்ப்பு சார்ந்த தகவல்களை பெற ஆப் வசதி இருந்தபோதிலும், ஒரு கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் லாங்கோகோ என்பவர்.

விரிவாகப் பார்ப்போம்

விரிவாகப் பார்ப்போம்

பொதுவாக ஆப் மற்றும் கூகுள் வசதிகளை பயன்படுத்தி மொழிபெயர்ப்பு செய்யும் போது எப்படியும் சில சிக்கல்கள் வரும், ஆனால் லாங்கோகோ என்ற இந்த மனிதன் கண்டுபிடித்த கருவி துல்லியமான ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழி பெயர்ப்பு செய்து காட்டுகிறது, இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பல வல்லுனர்களை கவர்ந்துள்ளது

பல வல்லுனர்களை கவர்ந்துள்ளது

ஒரு மொழிக்காரர் பேசியதை ஒரே வினாடியில் மொழிபெயர்த்து, இன்னொரு மொழிக்காரருக்குப் புரியும் வகையில் பேசிக்காட்டும் சில கருவிகள் வந்துவிட்டது, ஆனால் லாங்கோகோ என்பவர் தயாரித்துள்ள ஜெனிசிஸ் என்ற கையடக்க மொழிபெயர்ப்பு கருவி பல வல்லுனர்களை கவர்ந்துள்ளது.

தமிழ், ஹிந்தி மற்றும் இந்திய ஆங்கிலம்

தமிழ், ஹிந்தி மற்றும் இந்திய ஆங்கிலம்

தமிழ், ஹிந்தி மற்றும் இந்திய ஆங்கிலம் உட்பட 100மொழிகளில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மொழிபெயர்த்து, இனிய குரலில் பேசிக்காட்டுகிறது ஜெனிசிஸ். விமான நிலையத்துக்கு வழி கேட்பதிலிருந்து, அருகே நல்ல தங்கும் விடுதி, உணவகம் எங்கே இருக்கிறது என்பது வரை, சில வரிகள் முதல், பல பத்திகளுக்கு பேசி அடுத்த மொழிக்காரருடன் எளிதில்
கருத்துப் பரிமாற லாங்கோகோ ஜெனிசிஸ் உதவுகிறது.

செயற்கை நுண்ணறிவு மென்பொருள்

செயற்கை நுண்ணறிவு மென்பொருள்

குறிப்பாக வைஃபை வசதி கொண்ட இந்த மொழிபெயர்ப்புக் கருவிக்கு மூளையாக செயல்படுவது, ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள், இதுவும் லாங்கோகோவின் மேமக் கணிய இணைப்பும் இந்த கருவியின் பன்மொழிப் புலமையை தொடர்ந்து மெருகேற்றியபடியே இருக்கும்.

மொழிபெயர்ப்பின் துல்லியமும் கூடும்

மொழிபெயர்ப்பின் துல்லியமும் கூடும்

இப்போது சீன, கொரிய பேச்சு மொழிகளை சில பிழைகளுடனே மொழிபெயர்ப்பதாக விமர்சனம் இருந்தாலும், ஒருவர் தொடர்ந்து இந்த கருவியை பயன்படுத்தும்போது, அவரது பேச்சு நடைக்கு இக்கருவி பழகிக்கொள்ளும் என்பதால்,
மொழிபெயர்ப்பின் துல்லியமும் கூடும் என ஜெனிசிசை உருவாக்கியவர்கள் கூறியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
langogo-genesis-ai-language-translator-device : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X