Home
News

சந்திரயான்-3 நிலவில் தென் துருவத்தில் இல்லை.. பகீர் பீதியை கிளப்பிய சீனா.. காரணம் என்ன?

ஆசியாவின் இரண்டு பெரிய நாடுகளான இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டி விண்வெளியிலும் விரிவடைந்துள்ளது. சந்திரயான்-3 திட்டத்தை இந்தியர்கள் அதிகம் மிகப்படுத்துவதக சீன விஞ்ஞானி ஒருவர் பகீர் கருத்தை வெளியிட்டுள்ளார். இதில் சந்திரயான்-3 தென் துருவத்திலேயே இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO), நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 (Chandrayaan-3) விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த திட்டத்தின் முக்கிய பகுதியாக, கடந்த 23 ஆம் தேதி விக்ரம் லேண்டர் (Vikram lander) வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் (Moon's south pole) தரையிறக்கப்பட்டது.

சந்திரயான்-3 நிலவில் தென் துருவத்தில் இல்லை.. பீதியை கிளப்பிய சீனா!

நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இந்தியா (India) மாறியது. இதனைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து, பிரக்யான் ரோவர் (Pragyaan rover) நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி, 12 நாட்கள் இடைவெளி இல்லாத ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வுகளை விக்ரம் லேண்டர் பூமிக்கு பத்திரமாக அனுப்பியது.

இதை தொடர்ந்து நிலவில் இருள் நாள் துவங்கிய காரணத்தினால், நிலவின் தென் துருவத்தில் மூன் லேண்ட்டிங் செய்யப்பட்ட பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் இரண்டுமே முன்னெச்சரிக்கையாக ஓய்வு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இஸ்ரோ இவை இரண்டையும் டீப் ஸ்லீப் (deep sleep) மோடிற்கு கொண்டு சென்றது. நிலவின் தென் துருவத்தில் நிகழும் இருள் நாள் முடிந்த பிறகு, இவற்றை எழுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருந்தது.

ஆனால், டீப் ஸ்லீப் மோடிற்கு சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை எழுப்ப முயற்சித்த இஸ்ரோவுக்கு, இப்போது வரை எந்த சிக்னலும், தொடர்பும் லேண்டர் மற்றும் ரோவர் உடன் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ளும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் தோல்வி அடையவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இதற்கு மத்தியில், 'சீனாவின் சந்திர ஆய்வுத் திட்டத்தின் தந்தை (Father of China's lunar exploration program)' என்று போற்றப்படும் 'உயான் ஜியூன்' (Ouyang Ziyuan), சந்திரயான்-3 தரையிறங்கிய தளம் சந்திரனின் தென் துருவத்தில் இல்லை, சந்திர தென் துருவ பகுதியில் சந்திராயன்-3 இல்லை, அல்லது சந்திர தென் துருவ பகுதிக்கு அருகில் சந்திரயான்-3 இல்லை" என்று அவர் கூறி புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சந்திரயான்-3 நிலவில் தென் துருவத்தில் இல்லை.. பீதியை கிளப்பிய சீனா!

அவருடைய, கணக்கின் படி, சந்திரயான்-3 தென் துருவப் பகுதியில் இருந்து சுமார் 619 கிலோமீட்டர் (385 மைல்) தொலைவில் லேண்ட் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதற்கான விளக்கத்தையும் அவர் விளக்கியுள்ளார். பூமியில், தென் துருவமானது 66.5 மற்றும் 90 டிகிரி தெற்கே வரையறுக்கப்படுகிறது. ஏனெனில் அதன் சுழற்சி அச்சு சூரியனுடன் ஒப்பிடும்போது சுமார் 23.5 டிகிரி சாய்ந்துள்ளது.

சந்திரனின் சாய்வு 1.5 டிகிரி மட்டுமே என்பதால், துருவப் பகுதி மிகவும் சிறியதாக இருக்கும். எனவே, சந்திரயான்-3 தரையிறங்கும் தளம் நிலவின் தென் துருவத்தில் இல்லை என்று கூறியுள்ளார். அதேபோல், நிலவின் தென் துருவத்தின் துருவப் பகுதியில் இப்போது சந்திரயான்-3 இல்லை என்றும் அவர் ஆணித்தரமாக கூறுவதாக சீன (China) பத்திரிகையிடம் தனது தகவலை பகிர்ந்திருக்கிறார்.

இது தற்போது பெரும் சர்ச்சையை உருவாகியுள்ளது. சீனாவின் விண்வெளித் திட்டம் "2010 இல் சாங்'இ-2 ஏவப்பட்டதில் இருந்து பூமி-சந்திரன் (earth - moon) பரிமாற்ற சுற்றுப்பாதையில் நேரடியாக ஆர்பிட்டர்கள் மற்றும் லேண்டர்களை அனுப்பும் திறன் கொண்ட நாடக திகழ்கிறது. இந்தியா தனது ஏவுகணை வாகனங்களின் குறைந்த திறன் கொண்ட ஒரு சூழ்ச்சியை இன்னும் வழங்கவில்லை.

சீனா பயன்படுத்திய இயந்திரமும் மிகவும் மேம்பட்டது. இருப்பினும், சந்திரயான்-3 மற்ற விண்கலங்களை விட தெற்கே சென்றது என்பதே உண்மையாகும். சந்திரனின் தென் துருவத்தின் அருகே விண்கலத்தை தரையிறக்க முயன்ற ரஷ்யாவின் (Russia) முயற்சி கடந்த மாதம் நிலவில் விழுந்து தோல்வியில் முடிந்தது என்பது உண்மையே.

2019 ஆம் ஆண்டு நிலவின் தொலைதூரத்தில் முதன்முதலில் தரையிறங்கிய சீனாவின் Chang'e 4 விண்கலம், 45 டிகிரி தெற்கே தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1968 ஆம் ஆண்டில், 41 டிகிரி தெற்கில், சர்வேயர் 7 என்ற நாசா ஆய்வுக் கருவி சந்திரனை அடைந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. இவை அணைத்தும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப தேவைப்படும் தகவல்களை சேகரிக்க பயன்படுத்தப்பட்ட திட்டங்கள் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
The landing site of Chandrayaan-3 is not at the lunar south pole claims China scientist Ouyang Ziyuan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X