Home
News

4, 5 நாள்ல.. வேலையை காட்டிய Nothing Phone 2a.. திடீர்னு கருப்பாக மாறும் டிஸ்பிளே.. கதறும் கஸ்டமர்ஸ்!

ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை.. உண்மையாகவே நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை தொடங்கியதும், மக்கள் "அடித்து பிடித்து" ஆர்டர் போட்டனர். நத்திங்கின் கூற்றுப்படி 1 மணி நேரத்தில் 60,000 யூனிட்களும், முதல் நாளிலேயே 1 லட்சம் யூனிட்களும் விற்று தீர்ந்தன.

ஆனால் நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) மாடலை வாங்கிய கஸ்டமர்கள், இந்த ஸ்மார்போனின் ஓவர்ஆல் பெர்ஃபார்ம்மென்ஸில் மகிழ்ச்சியடையவில்லை என்பது போல் தெரியவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் யூஸர் இன்டர்பேஸில் ஏற்படும் பின்னடைவு மற்றும் நடுக்கம் (Lag and Jitters in User Interface) ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

4, 5 நாள்ல.. வேலையை காட்டிய Nothing Phone 2a.. கதறும் கஸ்டமர்ஸ்!

நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனை வாங்கிய வாடிக்கையாளர்கள் இதுகுறித்த புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் எக்ஸ் தளத்தில் கொட்டத் தொடங்கியதும், உடனே ஓடிவந்த நத்திங் நிறுவனம், இந்த பிரச்சனைகளை சரிசெய்யும் சாஃப்ட்வேர் அப்டேட்டையும் (Software Update) வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டின் கீழ் என்னென்ன சரி செய்யப்படும் என்கிற விவரங்களும் (Update Log) பகிரப்பட்டுள்ளது.

அப்டேட் லாக்கின்படி, நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவில் 5 மாற்றங்கள் / மேம்பாடுகள் நிகழும். கேமராவின் கலர் அக்யூரஸி (Colour Accuracy) மற்றும் சாச்சுரேஷன் (Saturation) மேம்படுத்தப்படும். கூடுதலாக, அல்ட்ரா எச்டிஆர் போட்டோக்ளின் ப்ரைட்னஸ் மற்றும் டோன்களும் (Brightness and tones of Ultra HDR photos) மேம்படுத்தப்படும்.

4, 5 நாள்ல.. வேலையை காட்டிய Nothing Phone 2a.. கதறும் கஸ்டமர்ஸ்!

மேலும் போர்ட்ரெய்ட் மோடில் உள்ள பொக்கே எபெக்ட் ஃபைன்-ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர்த்து, மெயின் கேமரா மற்றும் அல்ட்ரா-வைட் கேமராவிற்கு இடையேயான கலர் கான்சிஸ்டென்சி மேம்படுத்தப்பட்டுள்ளது. கடைசியாக நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் கேமராவின் ஒட்டுமொத்த செயல்திறனும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பொது மேம்பாடுகளை (General Improvements) பொறுத்தவரை, பிஜிஎம்ஐ மற்றும் பலவற்றை உள்ளடக்கிய கேம்களின் ஒட்டுமொத்த செயல்திறனும் மேம்படுத்தப்படும். ஆப்களை லான்ச் செய்யும்போதும், அதில் இருந்து வெளியேறும்போதும் ஏற்படும் அனிமேஷன் திணறலும் மேம்படுத்தப்படும். ரெக்கார்டர் விட்ஜெட்டின் அனிமேஷனும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

4, 5 நாள்ல.. வேலையை காட்டிய Nothing Phone 2a.. கதறும் கஸ்டமர்ஸ்!

பக் திருத்தங்களை (Bug Fixes) பொறுத்தவரை லாக் ஸ்கிரீனில் இருந்து ஆப்களை தொடங்கும் போது ஏற்படும் ஃப்ளிக்கரிங் சிக்கல் (Flickering issue) சரி செய்யப்பட்டுள்ளது. ஹோம் ஸ்க்ரீன் மற்றும் லாக் ஸ்கிரீன் வால்பேப்பர்களில் "அசாதாரணமாக காட்டப்படும்" சிக்கலும் (Home screen and lock screen wallpapers displayed abnormally) சரி செய்யப்பட்டுள்ளது.

குவிக் செட்டிங்ஸில் (Quick Settings) வைஃபை அல்லது செல்லுலார் டேட்டா தகவல்கள் தவறாக காண்பிக்கும் சிக்கலும் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இன்கம்மிங் கால்களின் போது டிஸ்பிளே கருப்பு நிறமாக மாறும் () சிக்கலும் தீர்க்கப்பட்டுள்ளது. கடைசியாக சிஸ்டமின் ஓவர்ஆல் ஸ்டெபிலிட்டியும் (Overall stability of system) மேம்படுத்தப்பட்டுள்ளது.

நத்திங் போன் 2ஏ-வின் விலை நிர்ணயம்: பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,999 க்கு அறிமுகமாகி உள்ளது. 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.27,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நத்திங் போன் 2ஏ-வின் முக்கிய அம்சங்கள்: பேக் பேனலில் மூன்று கிளிஃப் எல்இடி ஸ்ட்ரிப்ஸ்களை (Glyph LED strips) கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு திறனுக்கான ஐபி54 ரேட்டிங் உடன் வருகிறது. மேலும் இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட் உடன் வருகிறது. மேலும் இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, 32எம்பி செல்பீ கேமரா, டூயல் ரியர் கேமரா செட்டப், அதில் 50எம்பி மெயின் கேமரா சென்சார் + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lagging Flickering Display UI Issues in Nothing Phone 2a Company Released New OS Update to Fixed all
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X