இன்ஸ்டாகிராமில் 300 மில்லியன் ஃபாலோவர்களை பெற்ற முதல் பெண்- உலகப் புகழ்., அப்படி என்ன செய்தார் தெரியுமா?

|

இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடர்பவர்களை பெற்ற முதல் பெண் என்ற பெருமையை கைலே ஜென்னர் பெற்றிருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராமில் 300 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்றிருக்கிறார்.

300 மில்லியன் பின்தொடர்பவர்கள்

300 மில்லியன் பின்தொடர்பவர்கள்

அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும், சமூகவலைதள ஆளுமையும், தொழிலதிபரும் ஆன கைலே ஜென்னர் இன்ஸ்டாகிராமில் உலகின் அதிகம் பின்தொடரும் பெண்மணியாக உருவெடுத்திருக்கிறார். இரண்டாவது முறை தாயாகப் போகும் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனரான கைலே ஜென்னர், சமீபத்தில் இந்த சாதனை நிகழ்த்திய பாப் நட்சத்திரமான அரியானா கிராண்டேவை முறியடித்து இருக்கிறார். இவரது கணக்கு கடந்த வியாழக்கிழமை 300 மில்லியன் பின்தொடர்பவர்களை எட்டியது.

https://www.instagram.com/p/CYK9M_IFkHA/?utm_source=ig_web_button_share_sheet

புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு தளமான இன்ஸ்டா

24 வயதே ஆன கைலே, புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு தளமான இன்ஸ்டாவில் 300 மில்லியன் பின்தொடர்பவர்களை அடைந்த முதல் பெண்ணாக இருக்கிறார். உலகளவில் பொதுவாக அதிகம் பின்தொடர்பவர்களை கொண்ட நபருக்கான தலைப்பு தற்போது வரை கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் இருக்கிறது. இவருக்கு இன்ஸ்டாகிராமில் 389 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர். இதற்கும் மேலாக இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கு 460 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

https://www.instagram.com/p/CYZoooZv2CY/?utm_source=ig_web_button_share_sheet

சமூகவலைதளங்களில் இருந்து விலகி இருந்த கைலே

நவம்பர் 5 அன்று ஹூஸ்டனில் நடந்த ஆஸ்ட்ரோவொர்ல்ட் இசை விழாவில் தனது பார்ட்னர் டிராவிஸ் ஸ்காட்டின் நிகழ்ச்சியின் போது நெரிசலில் சிக்கி பத்து பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கைலே சமூகவலைதளங்களில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் கைலே தனது தாய்மை வெளிப்பாடு குறித்த புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார். அதாவது கைலே தனது கர்ப்பிணி வயிற்றை காண்பிக்கும் வகையிலான இரண்டு புகைப்படங்களை வெளியிட்டார்.

2022 புத்தாண்டில் பகிர்ந்த முதல் இரண்டு படங்கள்

2022 புத்தாண்டில் பகிர்ந்த முதல் இரண்டு படங்கள்

இவர் இந்த 2022 புத்தாண்டில் பகிர்ந்த முதல் இரண்டு படங்கள் இதுவாகும். அதில் பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கும் புகைப்படம் மில்லியன் கணக்கான விருப்பங்களையும் ஆயிரக்கணக்கான கமெண்ட்களையும் பெற்றிருக்கிறது. கைலே தற்போத மூன்று வயது மகளுக்கு தாயாக இருக்கிறார். கைலே முதல் மகள் 2018-ல் பிறந்தது. 2018-ல் தனது முதல் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த போது அந்த பதிவு 18.3 மில்லியனுக்கும் அதிகமானோரால் லைக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இளம் பெண்களின் மனநிலை

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இளம் பெண்களின் மனநிலை

கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ஆய்வுப்படி, இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இளம் பெண்களின் மனநிலையை இந்த ஆப்ஸ் இன்னும் கூடுதலாக மோசமாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள சில பெண்களின் மனநிலையில் தற்கொலைக்கான எண்ணங்களை இந்த ஆப்ஸ் ஏற்படுத்தியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியானது. சமூக ஊடங்களில் போக்கு இன்றைய இளம் தலைமுறையினர் இடையே வெகுவாக பரவியுள்ளது. இந்தியாவில் பள்ளி மாணவர்கள் கூட பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற முக்கிய சமூக வலைதள பக்கங்களில் அவர்களுக்கென்று தனியாக அக்கௌன்ட் வைத்துள்ளனர். இதில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இளம் பெண்களின் நிலையை மோசமாக்குவதாக தெரிவிக்கப்பட்டது. இதில் சிலருக்கு தற்கொலை எண்ணம் ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப்

ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடங்களில் அதிகளவு நேரம் செலவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதில் சிலர் அடிமைத்தனத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுக்க நிகழும் நிகழும் உண்மை என்பதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க யாரும் முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அளவுக்கு மீறினால் அமிர்ந்தமும் நஞ்சு என்ற வாக்கியத்திற்கு ஏற்ப சமூக வலைதள பயனர்கள் ஒரு கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். எப்போதும் அளவுடன் சமூக ஊடகத்தை பயன்படுத்துவது யாருக்கும் சிக்கல் அளிக்காது என்று மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமூக ஊடக பயன்பாட்டிற்கு மக்கள் அடிமையாகும் போது தான் ஆபத்தான சூழ்நிலை உருவாகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டு கூறியுள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Kylie Jenner Gets 300 Million Followers on Instagram: First Woman to Reach 300 Million Followers on Social Media

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X