Mobikwik வாடிக்கையாளர்களுக்கு இப்படியொரு சோதனையா? வந்தது புதிய சிக்கல்.!

|

இந்தியாவில் பேடிஎம், கூகுள் பே, போன்ற செயலிகளை போல் மொபிக்விக் செயலியையும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சிறந்த பேமண்ட் செயலியாக உள்ளது இந்த மொபிக்விக். இந்நிலையில் மொபிக்விக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

 டார்க் வெப்

டார்க் வெப்

அண்மையில் வெளிவந்த தகவலின்படி மொபிக்விக் செயலியை பயன்படுத்தும் பயனர்களின் தகவல்கள், பெயர், பான் எண், ஆதார்எண் மற்றும் KYC விபரங்கள் போன்றவை டார்க் வெப் இணையத்தில் கசிந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

எத்திகல் ஹேக்கர் ராபர்ட் பேப்டிஸ்

எத்திகல் ஹேக்கர் ராபர்ட் பேப்டிஸ்

மேலும் மொபிக்விக் பயனர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்திருப்பதை குறித்து பிரெஞ்சு எத்திகல் ஹேக்கர் ராபர்ட் பேப்டிஸ் ட்விட்டரில் ட்வீட் செய்ததுள்ளார். அதேபோல் இந்த தகவல் கசிவைப் பற்றி இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் கடந்த மாதமே அவர் பெற்ற தகவல்களுடன் ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிளைட் மோடு இல்லாமல் எப்படி உங்கள் போனிற்கு வரும் இன்கம்மிங் கால்ஸ்-களை நிறுத்துவது?ஃபிளைட் மோடு இல்லாமல் எப்படி உங்கள் போனிற்கு வரும் இன்கம்மிங் கால்ஸ்-களை நிறுத்துவது?

3.5 மில்லியன் மொபிக்விக் பயனர்களின் தகவல்கள்

குறிப்பாக ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி 3.5 மில்லியன் மொபிக்விக் பயனர்களின் தகவல்கள் கசிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிலும் 8.2டிபி அளவிலான தகல்கள் கசிந்திருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தகவல்கள் டார்க் வெப் இணையதளத்தில் விற்பனைக்கு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

போக்கோவா? கொக்கா ? தரமான அம்சங்களுடன் போக்கோ எக்ஸ்3 ப்ரோ அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!போக்கோவா? கொக்கா ? தரமான அம்சங்களுடன் போக்கோ எக்ஸ்3 ப்ரோ அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

மொபிக்விக் நிறுவனம்

மொபிக்விக் நிறுவனம்

ஆனால் மொபிக்விக் நிறுவனம் இதை முழுமையாக மறுத்துள்ளது. மொபிக்விக் நிறுவனம் கூறியது என்னவென்றால், இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் தெரிவித்தது உண்மை அல்ல என்றும், அவர் பதிவிட்ட புகைப்படங்கள் போலியானது, அது போல யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும் எனவும், தங்கள் நிறுவனத்தை சேர்ந்த பயனர்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாக மொபிக்விக் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

ATM பின் நம்பர் மறந்துவிட்டதா? டென்ஷன் ஆகாதீங்க, ஈசியா புது PIN நம்பர் உருவாக்கலாம்..எப்படி தெரியுமா?ATM பின் நம்பர் மறந்துவிட்டதா? டென்ஷன் ஆகாதீங்க, ஈசியா புது PIN நம்பர் உருவாக்கலாம்..எப்படி தெரியுமா?

ஆராய்ச்சியாளர் மீது கடும்

குறிப்பாக தவறான குற்றச்சாட்டை முன் வைத்ததற்காக அந்த ஆராய்ச்சியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மொபிக்விக் இந்த மாதத் துவகத்தில் ட்வீட் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த சிக்கல்: எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்?- இனி இந்த பிரச்சனை!அடுத்த சிக்கல்: எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்?- இனி இந்த பிரச்சனை!

க் நிறுவனம் தகவல் கசிவு குறித்த

இந்த மொபிக்விக் நிறுவனம் தகவல் கசிவு குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்த போதிலும், பல டவிட்டர் பயனர்கள் தங்களது தகவல்களை தாங்களே இணையத்தில் பார்த்ததாகவும், மொபிக்விக் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஏமாற்ற வேண்டாம் எனவும் ட்விட் செய்துள்ளனர். ஆனாலும் மக்கள் பல்வேறு செயலிகளில் தங்களது தகவல்களை கொடுக்கும் முன்பு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என்பதை பார்த்து பின்பு தகவல்களை கொடுப்பது மிகவும் நல்லது.

Best Mobiles in India

English summary
KYC information of MobiQuick users leaked to Darknet: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X