இந்த வங்கியில் அக்கவுண்ட் இருக்கா? இனி SMSக்கு கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
பொதுவாக நாம் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், யாருக்காவது பணம் அனுப்பினாலும் நமக்கு மெசேஜ் வந்து விடும். அதேசமயம் நமக்கு யாராவது பணம் அனுப்பினாலும் அல்லது ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தாலும் நமக்கு மேசேஜ் வந்துவிடும். இந்நிலையில் ஒரு தனியார் வங்கி ஒவ்வொரு மாதத்திற்கும் மெசேஜ் (SMS) சேவைக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்க உள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கி
அதாவது கோடக் மஹிந்திரா வங்கி (kotak mahindra bank) தான் மெசேஜ் (எஸ்எம்எஸ்) சேவைக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்க உள்ளது. அதன்படி இனி ஒரு மாதத்திற்கு 30 எஸ்எம்எஸ் மட்டும் தான் இலவசம். அதற்கு மேல் வரும் பணப்பரிவர்த்தனைகளுக்கான ஒவ்வொரு எஸ்எம்எஸ்-க்கும் ரூ.0.15 பைசா கட்டணம் செலுத்த வேண்டும் என கோடக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த புதிய உத்தரவு டிசம்பர் 2025 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் சிலர் தினசரி அதிகளவு யுபிஐ பயன்படுத்துவதன் மூலம் அதிகளவு எஸ்எம்எஸ் வரும். அப்படிப்பட்டவர்களுக்கு 30 SMS லிமிட் முடிந்த உடன் அதன் பிறகு வரும் ஒவ்வொரு SMSக்கு ரூ.0.15 பைசா கட்டணமாகச் செலுத்த வேண்டிய நிலைமை இருக்கும்.
அதுவும் ATM பணம் எடுத்தல், UPI/NEFT/RTGS/IMPS பரிமாற்றங்கள், பணப் பரிவர்த்தனைகள், காசோலை வைப்புத்தொகை, டெபிட் & கிரெடிட் கார்டு பயன்பாடு போன்றவை இதில் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தினசரி அதிகளவு யுபிஐ பணப்பரிவர்த்தனை செய்பவர்கள் வங்கியின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இருந்தபோதிலும் 30 எஸ்எம்எஸ் லிமிட்க்கு மேல் ஒவ்வொரு எஸ்எம்எஸ்-க்கு ரூ.0.15 பைசா கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று கவலைப்படும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று அருமையான அறிவிப்புகளைக் கொடுத்துள்ளது கோடக் மஹிந்திரா வங்கி (kotak mahindra bank).
1.அதாவது இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகையை ரூ.10,000 வரை மெயின்டெயின் (maintain) செய்தால் இந்த கட்டணம் வசூலிக்கப்படாது.
2. வங்கியில் 811 கணக்கு வைத்துள்ளவர்கள் combined balance இருப்புத் தொகையை ரூ.5000 வரை (maintain) செய்பவர்களுக்கும் இந்த கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.அடுத்து சம்பள கணக்கு வைத்துள்ளவர்கள் மாதம் மாதம் தவறாமல் சம்பளம் வருபவர்களுக்கும் இந்த எக்ஸ்ட்ரா சார்ஜ் (extra charges) வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோடக் மஹிந்திராவங்கி ஆனது மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. அதேபோல் சமீபத்தில் பான் கார்டு தொடர்பான ஒரு தகவலும் வெளியானது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

பான் கார்டு அப்டேட்
அதன்படி பான் கார்டு மற்றும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுவும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் உங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆகும். குறிப்பாக இந்த காலக்கெடுவிற்குள் இணைக்கவிட்டால், ஜனவரி 1 2026, முதல் உங்கள் பான் எண் செயலிழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பான் எண் செயலிழந்தால் சம்பளக் கிரெடிட், எஸ்பிஐயில் முதலீடு, வரி செலுத்துதல் போன்ற பல நிதி நடவடிக்கைகளைச் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
photo credits: freepik


Click it and Unblock the Notifications








