விபத்துகள் குறையும்: ஊட்டியில் அமைக்கப்படும் கொரியன் தொழில்நுட்பம்.! வீடியோ.! முழுவிவரம்.!

|

இப்போதுவரும் சில தொழில்நுட்பங்கள் மக்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இனி வரும் காலங்களில் மிகச் சிறந்த தொழில்நுட்பங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுழலும் ரப்பர் தடுப்புச் சுவர்கள்

சுழலும் ரப்பர் தடுப்புச் சுவர்கள்

அதன்படி தமிழகத்தில் முதல்முறையாக மலைப்பாதைகளில் வாகனங்கள் பள்ளத்தில் விழுவதைத் தடுக்கும்கொரியன் தொழில்நுட்பமானசுழலும் ரப்பர் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக தற்சமயம் இந்த சுழலும் ரப்பர் தடுப்புச் சுவர்கள் உதகையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

கொடைக்கானல், வால்பாறை, நீலகிரி

கொடைக்கானல், வால்பாறை, நீலகிரி

கொடைக்கானல், வால்பாறை, நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் கொண்டை ஊசி வளைவுகளில் நிகழும் வாகன விபத்துகளில் பல உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பது அனைவரும்தெரியும்.

இதுதான் தள்ளுபடி: 425 நாட்களுக்கும் தினசரி 3 ஜிபி டேட்டா: பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்புஇதுதான் தள்ளுபடி: 425 நாட்களுக்கும் தினசரி 3 ஜிபி டேட்டா: பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு

உதகை-மைசூர்

உதகை-மைசூர்

இந்நிலையில் வாகனங்கள் தடுப்புச்சுவர்களில் மோதி சேதமடைவதைத் தவரிக்கவும், பள்ளங்களில் விழுவதைத் தவிர்க்கவும் சுழுலும் ரப்பர் தடுப்புகள் உதகை-மைசூர் மலைப்பாதையில் சோதனை முறையில் அமைக்கப்பட்ட வருகின்றன.

சாலை பக்கமே திரும்பிச் செல்லும்

குறிப்பாக வளைவுகளில் அமைக்கப்பட்ட இந்த தடுப்புகளில் உருளும் ரப்பர் உருளைகள் இருக்கும். எனவே கட்டுப்பாட்டைஇழந்து ஏதேனும் வாகனம் மோதினால் உருளைகள் மேல் பட்டு மீண்டும் சாலை பக்கமே திரும்பிச் செல்லும்.இதனால் பெரிய விபத்துகள் தடுக்கப்படும்.

2019: அதிகம் பார்க்கப்பட்ட வைரல் யூடியூப் வீடியோக்கள்!2019: அதிகம் பார்க்கப்பட்ட வைரல் யூடியூப் வீடியோக்கள்!

அதிகாரிகள் தரப்பில் தகவல்

அதிகாரிகள் தரப்பில் தகவல்

மேலும் இந்த தொழில்நுட்பம் வெற்றி அடையும் பட்சத்தில் அனைத்து மலைப்பாதைகளிலும் இந்த கொரியன் தொழிலநுட்பதடுப்புச் சுவர்கள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 7: 6.44-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரியல்மி எக்ஸ்50.!ஜனவரி 7: 6.44-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரியல்மி எக்ஸ்50.!

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி, சுற்றுலாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. சீசன் காலங்களில் குளு, குளு காலநிலையை அனுபவிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். எனவே அப்படி வரும் பயணிகளுக்கு இந்த புதிய தொழில்நுட்பம் கண்டிப்பாக பாதுகாப்பு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Source: puthiyathalaimurai.com

Best Mobiles in India

English summary
Korean Technology Rolling Barriers System Installing in Ooty to Reduce Road Accidents: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X