ஹேக்கிங் மோசடி : $30 மில்லியன் இழந்த கொரியன் கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ்!

டலீட் செய்யப்பட்ட டிவீட்டில் அந்நிறுவனம் கூறியதாவது, 31மில்லியன் டாலர் மதிப்புள்ள 35பில்லியன் டோக்கன்கள் இன்று ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

|

கொரியன் கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ் நிறுவனமான காய்ன்ரெயில் ஹேக்கிங்கால் 40மில்லியன் டாலரை இழந்து ஒரு சில வாரங்களே ஆன நிலையில், மற்றொரு கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ் நிறுவனமான பிட்ஹம்ப் , கிரிப்டோகரன்சியில் ஹேக்கர்களால் 30மில்லியன் டாலர்களை இழந்ததாக கூறியுள்ளது.

ஹேக்கிங் மோசடி : $30 மில்லியன் இழந்த கொரியன் கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ்!

காய்ன்ரெயில் வேண்டுமானால் கொரியாவின் சிறிய எக்ஸ்சேன்ஜ் ஆக இருக்கலாம், ஆனால் பிட்ஹம்ப் பெரியது. இது எதீரியம் மற்றும் பிட்காயின் வர்த்தகம் செய்யும் உலகின் டாப்10 எக்ஸ்சேன்ஜ்களில் ஒன்று மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இ.ஓ.எஸ்-ல் முதலிடத்தில் உள்ளது.

31மில்லியன்

31மில்லியன்

டலீட் செய்யப்பட்ட டிவீட்டில் அந்நிறுவனம் கூறியதாவது, 31மில்லியன் டாலர் மதிப்புள்ள 35பில்லியன் டோக்கன்கள் இன்று ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. ஹேக்கிங் தாக்குதலைப் பற்றி எந்த தகவல்களையும் வெளியிடவில்லை என்றாலும், இதனால் பயனர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வதாக கூறியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை அடுத்து, அதன் வாலட் சிஸ்டத்தில் மாற்றங்களை செய்வதற்காக வைப்புநிதி மற்றும் வர்த்தகங்களை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது.

ஹேக்கிங்

ஹேக்கிங்

இந்த ஹேக் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு பிட்ஹம்ப் தனது டீவிட்டில், "மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான அமைப்பை உருவாக்குவதற்காக தனது அனைத்து சொத்துக்களையும் கோல்ட் வாலட்டிற்கு மாற்றுவதாக" கூறியது. இது தான் ஹேக்கிங் தாக்குதலுக்கு காரணமாக இருந்ததா எனத் தெரியவில்லை.

கிரிப்டோ

கிரிப்டோ

அடிக்கடி இந்த ஹேக்கிங்கள் நிலையற்றதாக கூறப்படும் நிலையில், பெரும்பாலான இந்த சம்பவங்களுக்கு உள் வேலைகள் காரணமாக இருக்கும் என கிரிப்டோ சமூகம் கூறுகிறது.

மூன்றாம் தரப்பு விசாரணை

மூன்றாம் தரப்பு விசாரணை

இந்த சம்பவத்தை பொறுத்தவரை கொரிய அரசிடம் இருந்து 30மில்லியன் வரி பில்லை பிட்ஹம்ப் பெற்றதாக வெளியான தகவல் சந்தேகத்தை கிளப்புகிறது.இந்த சம்பவத்தில் சுதந்திரமான தணிக்கை அல்லது மூன்றாம் தரப்பு விசாரணை இல்லையெனில், உண்மையாக என்ன நடந்தது என்பதை கண்டறிவது மிகவும் கடினம்.

ஹார்ட்வேர் கீ

ஹார்ட்வேர் கீ

இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், கிரிப்டோ கரன்ஸியை வாங்குபவர்கள் டோக்கன்களை எக்ஸ்சேன்ஜ்களில் வைக்காமல் தங்களுடைய தனிப்பட்ட வாலட்களில்(ஹார்ட்வேர் கீ உடன்) வைப்பதன் மூலம் ஹேக்கிங் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். இந்த சம்பவத்தை பொறுத்தவரை,பிட்ஹம்ப் இழப்புகளை சமாளிக்கும் என்றாலும் , பிரச்சனைகளை தவிர்க்க டோக்கன்களை பாதுகாப்பதும் நமது கடமை.

Best Mobiles in India

English summary
Korean crypto exchange Bithumb says it lost over 30M following a hack : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X