Home
News

நம்பியார் காலத்து டெக்னிக் பயன்படுத்தி தப்பியோடிய ஏ.டி.எம் ஹேக்கர்: சென்னையில் பரபரப்பு.!

திருட்டை அசத்தலாக செய்து முடித்த கையோடு திரும்பிக்கூட பார்க்காமல் அங்கிருந்து வேறு மாநிலத்திற்குச் சென்று விடுவார்கள் இந்த திருடர்கள்.

இந்திய முழுவதும் ஹேக்கிங் சார்ந்த திருட்டு அதிகமாக நடைபெற்று வருகிறது என்று தான் கூறவேண்டும், மேலும் ஏ.எடி.எம் இயந்திரங்களில் ஸ்கிம்மர், பின் ஹோல் கேமரா போன்றவற்றை பொருத்தி வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை திருடி வந்தவர்கள் இப்போது பாதுகாப்புக்கு ஏ.டி.எம் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஹேக் செய்யும் அளவிற்கு திருடர்கள் முன்னேறிவிட்டனர்.

சென்னை: ஏ.டி.எம் கேமராவைக் ஹேக் செய்து கொள்ளையடித்த கொள்ளையர்கள்.!

சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தவர்களை கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விஜயகுமார் மண்டல், ஜீஹேந்தர்குமார் மண்டல், பாஸ்கர் குமார் ஆகியோர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களின் கூட்டாளி இரு தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் சிக்கினார்.

 சென்னை

சென்னை

முக்கிய குற்றவாளி கொடுத்த தகவலின் பேரிலேயே சென்னையில் இருந்தவர்களை மடக்கியது கொல்கத்தா காவல்துறை. இந்த திருட்டு கும்பல் சற்று வித்தியாசமாக செயல்படுகிறது என்று தான் கூறவேண்டும்.

போலி ஏ.டி.எம் கார்டு

போலி ஏ.டி.எம் கார்டு

இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில் இருக்கும் ஏ.டி.எம் மையங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை திருடும் இவர்கள், அதை வைத்து போலி ஏ.டி.எம் கார்டு தயார் செய்கின்றனர். பின்பு அங்கிருந்து
வேறு மாநிலத்திற்குச் சென்று தாங்கள் தயாரித்த போலி ஏ.டி.எம் கார்டு மூலம் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிப்பார்கள்.

வேறு மாநிலத்திற்குச் சென்று விடுவார்கள்

வேறு மாநிலத்திற்குச் சென்று விடுவார்கள்

திருட்டை அசத்தலாக செய்து முடித்த கையோடு திரும்பிக்கூட பார்க்காமல் அங்கிருந்து வேறு மாநிலத்திற்குச் சென்று விடுவார்கள் இந்த திருடர்கள். இந்தியாவில் உள்ள பல மாநில காவல்துறையினர் இவர்களை தேடி அலைந்தனர். தகவலறிந்து காவல்துறையினர் வருவதற்குள் இவர்கள் வேறு மாநிலத்திற்கு சென்று
விடுவார்கள். இப்படியே மாநிலம் விட்டு மாநிலம் தாவியவர்கள் கடைசியில் சென்னையில் பிடிபட்டனர்.

விசாரணை

விசாரணை

மேலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து 3 பேரிடமும் கொல்கத்தா காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கழிவறைக்குச் செல்வதாகக் கூறிச்சென்ற பாஸ்கர் குமார் என்பவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிவிட்டார்.

புகார் அளித்துள்ளது கொல்கத்தா காவல்துறை:

புகார் அளித்துள்ளது கொல்கத்தா காவல்துறை:

பின்பு அவரை கண்டுபிடித்து தரும்படி தருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது கொல்கத்தா காவல்துறை. பின்பு வங்கிக்கே தெரியாமல் ஏ.டி.எம்-ல் சிசிடிவி கேமராக்களை கொள்ளைக்கும்பல் ஹேக்
செய்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Kolkata police arrest 3 ATM thieves in city; one escapes : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X