55' இன்ச் மாடலே 'இந்த' விலை தானா.. பட்டைய கிளப்பும் கோடாக் 4K ஸ்மார்ட் டிவிகள்.. எப்போ வாங்கலாம் தெரியுமா?

|

சமீபத்திய வளர்ச்சியில், கோடாக் டிவி இந்தியா, வரவிருக்கும் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டே விற்பனைக்காக நிறுவனம் இன்றுவரை மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றை அறிவித்துள்ளது. கோடாக் நிறுவனம், அதன் மேக் இன் இந்தியா கொள்கையை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாகியுள்ளது. கோடாக் நிறுவனம் இப்போது அதன் 7XPRO தொடரின் கீழ் புதிய அளவிலான ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய ஸ்மார்ட் டிவியை கோடாக் நிறுவனம் 4K தொழில்நுட்பத்துடன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

ஆரோக்கியமான பொழுதுபோக்கு தீர்வுக்கு அறிமுகமாகும் புதிய கோடாக் 7XPRO 4K டிவிகள்

ஆரோக்கியமான பொழுதுபோக்கு தீர்வுக்கு அறிமுகமாகும் புதிய கோடாக் 7XPRO 4K டிவிகள்

இந்த புதிய அளவிலான ஸ்மார்ட் டிவிகள் நாட்டில் கிடைக்கும் சிறந்த 4k TV விருப்பமாக இருக்கும் என்று கோடாக் நிறுவனம் கூறியுள்ளது. இது ஆரோக்கியமான பொழுதுபோக்கு தீர்வுகள் மற்றும் அனுபவத்தை வழங்குவதை அதன் பயனர்களுக்கு என்று கோடாக் நிறுவனம் உறுதி செய்துள்ளது. சூப்பர் பிளாஸ்ட்ரோனிக்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு அவ்னீத் சிங் மர்வா, மேக் இன் இந்தியா முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளார்.

கோடாக்கின் புதிய 7XPRO தொடரின் 4K தர ஸ்மார்ட் டிவி

கோடாக்கின் புதிய 7XPRO தொடரின் 4K தர ஸ்மார்ட் டிவி

கோடாக்கின் புதிய 4கே தரத்தில் தனித்துவமான மற்றும் பிரீமியம் 7XPRO பெசல் லெஸ் தொடரை அறிமுகப்படுத்துவதில் கோடாக் பிராண்ட் மிகவும் உற்சாகமாக இருப்பதாக ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அறிமுகப்படுத்தப்படும் புதிய வகை சாதனங்களின் தொழில்நுட்பம் இந்தியாவில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 7XPRO தொடரின் அறிமுகத்துடன், இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட் டிவி சந்தையில் முன்னணியில் இருக்க கோடாக் விரும்புகிறது என்று அவர் கூறியுள்ளார்.

திடீரென IRCTC ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதியில் மாற்றம்: இதை செய்தால் டிக்கெட், இல்லையெனில் இருக்கை கிடையாதுதிடீரென IRCTC ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதியில் மாற்றம்: இதை செய்தால் டிக்கெட், இல்லையெனில் இருக்கை கிடையாது

43' இன்ச், 50' இன்ச் மற்றும் 55' இன்ச் மாடல்கள் அறிமுகமா?

43' இன்ச், 50' இன்ச் மற்றும் 55' இன்ச் மாடல்கள் அறிமுகமா?

வரவிருக்கும் இரண்டு ஆண்டுகளில், கோடாக் பிராண்ட் இந்தியாவின் மிகவும் பிரீமியம் ஆண்ட்ராய்டு டிவியாக இருக்க வேண்டும் என்றும், நாட்டின் ஸ்மார்ட் டிவி பிரிவில் 7% பங்கை கோடாக் நிறுவனம் அடைவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். வரவிருக்கும் கோடாக்
ஸ்மார்ட் டிவியின் விவரக்குறிப்பு மற்றும் விலை விவரங்கள் பற்றிப் பார்க்கலாம். கோடாக் 7XPRO தொடரின் கீழ் உள்ள ஸ்மார்ட் டிவிகள் முறையே 4k டிஸ்ப்ளேகளுடன் 43' இன்ச், 50' இன்ச் மற்றும் 55' இன்ச் ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கும்.

கோடாக் 7XPRO 4K ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சம் என்ன?

கோடாக் 7XPRO 4K ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சம் என்ன?

இந்த அனைத்து மாடல்களும் டூயல் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் சரவுண்ட் சவுண்ட் உடன் கூடிய உயர்தர 40W ஒலி வெளியீட்டைக் கொண்டிருக்கும். இது தவிர, சாதனம் 2.4GHz முதல் 5GHz இணைய அலைவரிசையை ஆதரிக்கும். இதில் கூகுள் அசிஸ்டண்ட் குரல் கட்டுப்பாடு மற்றும் டூயல்-பேண்ட் Wi-Fi ஆகிய சில முக்கிய அம்சங்களை கோடாக் சேர்த்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. கோடாக் 7XPRO தொடரின் கீழ் உள்ள மாதிரிகள் ARM Cortex A53 செயலியில் செயல்படும் மற்றும் ஆண்ட்ராய்டு இடைமுகத்தைக் கொண்டிருக்கும் ஸ்மார்ட் டிவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியில் தண்ணீர் எப்படி உருவானது? சூரியன் தான் நமக்கு தண்ணீர் கொடுத்ததா? உண்மையை கட்டவிழ்த்த விஞ்ஞானிகள்..பூமியில் தண்ணீர் எப்படி உருவானது? சூரியன் தான் நமக்கு தண்ணீர் கொடுத்ததா? உண்மையை கட்டவிழ்த்த விஞ்ஞானிகள்..

ஒப்பிட முடியாத அல்டிமேட் சினிமா அனுபவம்

ஒப்பிட முடியாத அல்டிமேட் சினிமா அனுபவம்

கோடாக் ஸ்மார்ட் டிவியில் உள்ள இணைப்பு விருப்பங்கள் பற்றி பார்க்கையில், இந்த கோடாக் 7XPRO சீரிஸ் USB 2.0, HDMI 3 மற்றும் புளூடூத் v. 5.0 ஆகியவை பயனர் நட்பு ரிமோட் கண்ட்ரோல் மூலம் அணுகக் கூடியவை. இந்த கோடாக் 7XPRO சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளில் பெசல் லெஸ் டிஸ்ப்ளே மற்றும் டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்டர் ஆகியவை இடம்பெறும். இது தவிர, இந்த கோடாக் 7XPRO சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை பயனர்கள் அற்புதமான விலையில் ஒப்பிட முடியாத சினிமா அனுபவத்தையும் பெறுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

6000க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு ஆப்ஸ்

6000க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு ஆப்ஸ்

இந்த கோடாக் 7XPRO சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் 500,000 பிளஸ் டிவி ஷோக்களுடன் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி எல்ஐவி, கூகுள் பிளே ஸ்டோர் போன்ற 6000க்கும் மேற்பட்ட ப்ளஸ் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ்கள் போன்ற அம்சத்தை இந்த இந்த கோடாக் 7XPRO சீரிஸ் டிவி வழங்குகிறது. இதன் ஸ்பீக்கர்கள், ஹெட்ஃபோன்கள், கேம் கன்ட்ரோலர்கள், மவுஸ் மற்றும் கீபோர்டுகள் ஆகியவற்றுக்கான கூடுதல் சாதன ஆதரவையும் பயனர்கள் இந்த டிவிகளில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஓ மை காட்' உலகமே பயன்படுத்தும் இந்த 15 விஷயங்களை இந்தியர்களா கண்டுபிடித்தார்கள்? சத்தியமா நம்ப மாட்டீங்க..'ஓ மை காட்' உலகமே பயன்படுத்தும் இந்த 15 விஷயங்களை இந்தியர்களா கண்டுபிடித்தார்கள்? சத்தியமா நம்ப மாட்டீங்க..

கோடாக் 7XPRO 4K சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை எப்போது வாங்கலாம்?

கோடாக் 7XPRO 4K சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை எப்போது வாங்கலாம்?

இந்த கோடாக் 7XPRO சீரிஸ் சாதனத்தின் விலை விவரக்குறிப்புகளைக் கருத்தில் கொண்டு பயனர்கள் இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடலை வரும் டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கும் பிளிப்கார்ட் விற்பனையில் சிறப்பு அறிமுக விலையில் வாங்கலாம். குறிப்பாக இந்த டிவிகள் அறிமுகப்படுத்தப்படும் நேரத்தில் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று பிராண்ட் தெரிவித்துள்ளது. கோடாக்கின் புதிய வரம்பில் மூன்று கோடாக் 7XPRO சீரிஸ் மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கோடாக் 7XPRO சீரிஸ் ஸ்மார்ட் டிவியின் விலை என்ன?

கோடாக் 7XPRO சீரிஸ் ஸ்மார்ட் டிவியின் விலை என்ன?

இதன் படி, இந்த கோடாக் 7XPRO சீரிஸ் வரிசையில் உள்ள முதல் மாடல் என்றால் அது முறையே 43UHD7XPROBL ஸ்மார்ட் டிவி மாடலாகும். இந்த இந்த கோடாக் 7XPRO 43' இன்ச் மாடல் இந்தியாவில் வெறும் ரூ. 23,999 என்ற வெளியீட்டு விலையில் கிடைக்கும். அதேபோல், அடுத்ததாக இந்த கோடாக் 7XPRO வரிசையில் உள்ள 50UHD7XPROBL மாடல் 50' இன்ச் டிஸ்பிளே உடன் இந்தியாவில் வெறும் ரூ. 30,999 என்ற விலைக்குக் கிடைக்கும். இறுதியாக, இந்த கோடாக் 7XPRO சீரிஸ் வரிசையில் உள்ள மூன்றாவது மாடலான 55UHD7XPROBL மாடல், 55' இன்ச் டிஸ்பிளே உடன் வெறும் ரூ.33,999 என்ற விலைக்கு வாங்கக் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Kodak TV India Announces Launch Of New Range Of 7XPRO Bezel Less Series Smart TVs : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X