Kodak CA தொடர் ஸ்மார்ட் டிவிகளுடன் ரூ.14,999 மதிப்புள்ள 'இந்த' சாதனம் இலவசம்.. குறுகிய காலத்திற்கு மட்டுமே..

|

கோடக் நிறுவனம் தனது கோடக் எச்டி எல்இடி டிவிகளின் CA சீரிஸ் மீது புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கோடக் நிறுவனம் குறிப்பிட்டுள்ள காலகட்டத்தில் புதிய CA தொடர் டிவிகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ .14,999 மதிப்புள்ள கோடக் ட்வின் டவர் ஸ்பீக்கர் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இத்துடன் பிற மாடல்களுக்கும் பிரத்தியேக தள்ளுபடி மற்றும் இலவசங்களை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

கோடக் CA ஸ்மார்ட் டிவிகளுடன் இலவசம்

கோடக் CA ஸ்மார்ட் டிவிகளுடன் இலவசம்

இந்த சலுகையின் சிறப்பம்சமாக கோடக் 65 CA 1010 மாடல் டிவி உடன் ரூ .14,999 மதிப்புள்ள இலவச கோடக் 36 இன்ச் ட்வின் டவர் ஸ்பீக்கர் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல், நிறுவனத்தின் கோடக் 55' இன்ச் CA ஸ்மார்ட் டிவி மாடல் உடன் ரூ .5,299 மதிப்புள்ள சவுண்ட்பார் இலவசமாகக் கிடைக்கிறது. அதேபோல், ரூ .3,299 மதிப்புள்ள ப்ளூடூத் ஸ்பீக்கர் கோடக் 43" மாடல் சிஏ டிவியுடன் கிடைக்கிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 31, 2021 வரை மட்டுமே செல்லுபடியாகும்.

ரூ .14,999 மதிப்புள்ள 36 இன்ச் ட்வின் டவர் ஸ்பீக்கர் இலவசமா?

ரூ .14,999 மதிப்புள்ள 36 இன்ச் ட்வின் டவர் ஸ்பீக்கர் இலவசமா?

இந்த இலவச ஸ்பீக்கர் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கான சலுகைகள் கோடக்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிகளில் மட்டுமே பொருந்தும். சலுகையின் கீழ் உள்ள மூன்று ஸ்மார்ட் டிவிகளும் CA தொடரிலிருந்து வந்தவை என்பதை கவனிக்க மறக்காதீர்கள். சலுகைக்கான முதல் ஸ்மார்ட் டிவி 65 இன்ச் 65CA0101 ஸ்மார்ட் டிவி ரூ. 62,990 விலையில் கிடைக்கிறது. இந்த டிவியை வாங்கும்போது தான் ​​பயனர்களுக்கு நிறுவனத்திடமிருந்து ரூ .14,999 மதிப்புள்ள 36 இன்ச் ட்வின் டவர் ஸ்பீக்கர் இலவசமாகக் கிடைக்கிறது.

Jio ரூ.399 திட்டம்: இலவச 4k செட்டாப்-பாக்ஸ் உட்பட இவ்வளவு சலுகைகளா? மறுபடியும் அம்பானியின் அதிரடி ஆரம்பம்.!Jio ரூ.399 திட்டம்: இலவச 4k செட்டாப்-பாக்ஸ் உட்பட இவ்வளவு சலுகைகளா? மறுபடியும் அம்பானியின் அதிரடி ஆரம்பம்.!

ரூ .5,299 மதிப்புள்ள 100W சவுண்ட் பார் இலவசமா?

ரூ .5,299 மதிப்புள்ள 100W சவுண்ட் பார் இலவசமா?

சலுகையில் கிடைக்கும் இரண்டாவது ஸ்மார்ட் டிவி 55 இன்ச் 55CA0909 மாடல் ஸ்மார்ட் டிவி ஆகும், இது ரூ .42,990 பிரத்தியேக விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கும்போது, ​​பயனர்களுக்கு ரூ .5,299 மதிப்புள்ள 100W சவுண்ட் பார் நிறுவனத்திடமிருந்து முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது. கடைசியாக, 43 இன்ச் 43CA2022 மாடல் ஸ்மார்ட் டிவி ரூ .31,990 என்ற பிரத்தியேக விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கும்போது, ​​பயனர்கள் ரூ .3,299 மதிப்புள்ள இலவச புளூடூத் ஸ்பீக்கர் இலவசமாகக் கிடைக்கிறது.

கோடக் சிஏ தொடர் டிவியின் சிறப்பம்சம்

கோடக் சிஏ தொடர் டிவியின் சிறப்பம்சம்

இவை அனைத்தும் தற்போது கோடக்கிலிருந்து ஒரு விளம்பர காலத்தின் கீழ் மட்டுமே கிடைக்கும் சலுகைகள் ஆகும். அதாவது இந்த சலுகைகள் அதிக நேரம் இருக்காது, நிறுவனத்தின் அறிவிப்புப் படி வரும் ஆகஸ்ட் இறுதி வரை மட்டுமே இது செல்லுபடியாகும். கோடக் சிஏ தொடரில் 4 கே, எச்டிஆர் 10 டிஸ்ப்ளே, டால்பி விஷன், டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் போன்ற அற்புதமான அம்சங்கள் உள்ளன. இது சமீபத்திய Android 10 இயங்குதளத்தில் இயங்கக்கூடியது. இதில் கூகிள் அசிஸ்டன்ட் உதவியாளரும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Kodak Offering Benefits Up To Rs 15000 With CA Series Smart TV : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X