இது வீடா, தியேட்டரா? சகல அம்சங்களுடன் அறிமுகமான Kodak Matrix QLED ஸ்மார்ட்டிவிகள்!

|

Kodak நிறுவனம் தனது முதல் QLED ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Kodak Matrix QLED என புதிய ஸ்மார்ட் டிவிகளுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த டிவிகளானது 50-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஆகிய மூன்று மாடல்களில் வெளியாகி இருக்கிறது.

இது கூகுள் டிவிகள் ஆகும். இதில் கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவு இருக்கிறது. நாட்டில் நிறுவனத்தின் 7-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக புதிய க்யூஎல்இடி டிவிகளை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Kodak Matrix QLED ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

Kodak Matrix QLED ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

Kodak Matrix QLED ஸ்மார்ட் டிவி அம்சங்கள் குறித்து பார்க்கையில், புதிய மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஸ்மார்ட்டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த க்யூஎல்இடி டிவிகள் 50-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஆகிய மூன்று அளவுகளில் வெளியாகி இருக்கின்றன.

DTS TruSurround தொழில்நுட்பம்

DTS TruSurround தொழில்நுட்பம்

வெளியாகியுள்ள அனைத்து மாடல்களும் டால்பி அட்மாஸ் மற்றும் டால்பி விஷன் ஆடியோ ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது சிறந்த படம் மற்றும் ஆடியோ தரத்தை உறுதியளிக்கிறது.

புதிய ஸ்மார்ட்டிவிகளானது DTS TruSurround தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட ஒலி வெளியீட்டு ஆதரவைக் கொண்டிருக்கிறது.

HDR 10+ டிஸ்ப்ளே ஆதரவு

HDR 10+ டிஸ்ப்ளே ஆதரவு

புதிய ஸ்மார்ட் டிவிகள் ஆனது 1.1 பில்லியன் வண்ணங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 10-பிட் 4K QLED பேனல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பார்வை அனுபவத்தை வழங்கும் HDR 10+ டிஸ்ப்ளே இதில் இருக்கிறது.

புதிய கோடக் ஸ்மார்ட்டிவிகளானது 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

UI நேவிகேஷன் மற்றும் மீடியா ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுடன் மென்மையான செயல்திறனை இது கொண்டிருக்கிறது.

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

புதிய Kodak QLED TV ஆனது MT9062 செயலி மூலம் இயக்கப்படுகிறது. USB 2.0, HDMI 3 மற்றும் ப்ளூடூத் டூயல் பேண்ட் என பல இணைப்பு ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்டிவிகள் Chromecast வீடியோ சந்திப்புகளுக்கான அணுகலுடன் கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு சாதனங்களில் இருந்து மியூசிக், வீடியோக்களை வயர்லெஸ் முறையில் ஸ்ட்ரீம் செய்ய இந்த ஸ்மார்ட்டிவி அனுமதிக்கிறது.

டால்பி ஆடியோ ஸ்பீக்கர் பாக்ஸ்

டால்பி ஆடியோ ஸ்பீக்கர் பாக்ஸ்

வடிவமைப்பு மற்றும் ஆடியோ அமைப்பை பொறுத்த வரை, Kodak QLED ஸ்மார்ட் டிவிகள் ஆனது பெசல்-லெஸ் டிசைன் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

40 வாட்ஸ் டால்பி ஆடியோ ஸ்பீக்கர் பாக்ஸ் இதில் பொருத்தப்பட்டுள்ளது. கோடாக்கின் முந்தைய மாடல் டிவிகளை போன்று இந்த புதிய மாடல்களிலும் வாய்ஸ் ஆதரவுடன் கூடிய ரிமோட்கள் வழங்கப்படுகிறது.

வாய்ஸ் கட்டுப்பாட்டு ரிமோட் ஆதரவு

வாய்ஸ் கட்டுப்பாட்டு ரிமோட் ஆதரவு

ரிமோட்டின் மூலம் வாய்ஸ் செலுத்தி டிவியை கட்டுப்படுத்தலாம்.

இந்த ரிமோட்டில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் யூடியூப் ஆகிய அணுகலை நேரடியாக இணைக்க பிரத்யேக தனி பட்டன்கள் இதில் இருக்கிறது.

புதிய QLED TV அம்சங்கள்

புதிய QLED TV அம்சங்கள்

புதிய ஸ்மார்ட்டிவிகள் Google TV இயக்க ஆதரவைக் கொண்டிருக்கிறது. எனவே இதில் 18+, கிட்ஸ் பயன்பாடு, ஸ்மார்ட் ஹோம் என பல்வேறு ஆதரவுகளை இயக்கிக் கொள்ளலாம்.

உங்கள் Google ஆதரவு ஃப்ரொபைல் மூலமாக திரைப்படங்கள் மற்றும் டிவிகளை சேமித்துக் கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

QLED TV டிவி பிரிவில் பலத்த போட்டியை ஏற்படுத்தும் வகையில் இந்த ஸ்மார்ட்டிவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்டிவியின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம்.

Kodak Matrix QLED ஸ்மார்ட் டிவிகளின் விலை

Kodak Matrix QLED ஸ்மார்ட் டிவிகளின் விலை

Kodak Matrix QLED ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், 50 இன்ச் QLED மாடலின் விலை ரூ.33,999 எனவும் 55 இன்ச் QLED மாடலின் விலை ரூ.40,999 எனவும் 65 இன்ச் QLED டிவி மாடலின் விலை ரூ.59,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவிகள் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Kodak Matrix QLED Smart TVs Launched in India with 3 Different Sizes: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X