ரூ.7499-க்கு எச்டி எல்இடி டிவி வாங்கலாம்: ஸ்மார்ட்டிவி வாங்க சரியான வாய்ப்பு- கிறிஸ்துமஸ் சலுகை சார்!

|

கோடக் தனது ஸ்மார்ட் டிவிகளை விற்பனைக்கு அறிவித்துள்ளது. கோடக் பேஸ் டிவி ஆனது பொதுவாக ரூ.7999-க்கு கிடைக்கிறது. தற்போது இந்த பேஸ் டிவியானது ரூ.7499 என்ற விலையில் கிடைக்கிறது. அதேபோல் 65 இன்ச் ஸ்மார்ட்டிவிகளுக்கு ரூ.1000 வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் சில ஸ்மார்ட் டிவிகளுக்கு ரூ.2000 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. பிளிப்கார்ட் ஜிங்கிள் தின விற்பனையில் கோடக் எச்டி எல்இடி டிவிகளுக்கு சிறந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகள்

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகள்

ஸ்மார்ட் டிவி பிரிவுகளில் வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றான கோடக். பண்டிகைகளின் போது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்குவதற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நிறுவனம் பிளிப்கார்ட் உடன் இணைந்து பெசல்-லெஸ் கோடக் காப்ரோ மற்றும் 7XPRO ஆகியவற்றில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது. ஸ்மார்ட் டிவியின் விற்பனை ரூ.7499 முதல் தொடங்குகிறது. ஸ்மார்ட் டிவிகள் விற்பனை டிசம்பர் 25, 2021 முதல் கிறிஸ்துமஸ் தினத்தன்று தொடங்குகிறது.

ரூ.2000 வரை தள்ளுபடிகள்

ரூ.2000 வரை தள்ளுபடிகள்

கோடக் தனது 14 ஸ்மார்ட் டிவிகளை விற்பனைக்கு அறிவித்துள்ளது. இந்த பேஸ் டிவி பொதுவாக ரூ.7999-க்கு கிடைக்கிறது. 65 இன்ச் அளவுள்ள ஸ்மார்ட் டிவிகள் ரூ.1000 வரை தள்ளுபடிகள் அறிவித்துள்ளன. அதேபோல் சில ஸ்மார்ட் டிவிகளுக்கு ரூ.2000 வரை தள்ளுபடிகள் அறிவித்துள்ளன. கோடாக்கின் பிரபலமான CA PRO தொடர் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்ப்ளே உடன் கூடிய 43 இன்ச் மற்றும் 50 இன்ச் என்ற இரண்டு அளவுகளில் கிடைக்கிறது. இந்த CA PRO தொடர் மாதிரிகள் வழங்கக்கூடிய ஒலி வெளியீடானது 40 வாட்ஸ் மற்றும் டோல்பி எம்எஸ்12 மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் ஒலி ஆதரவோடு வருகிறது. பிளிப்கார்ட் ஜிங்கிள் தின விற்பனையில் கோடக் எச்டி எல்இடி டிவிகளுக்கு சிறந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

டூயல் பேண்ட் வைஃபை வசதி

டூயல் பேண்ட் வைஃபை வசதி

இந்த ஸ்மார்ட் டிவிகள் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 5 ஜிகாஹெர்ட்ஸ் நெட்வொர்க்குகள் உட்பட டூயல் பேண்ட் வைஃபை வசதியோடு வருகிறது. கோடக் டிவிகளின் உயர்நிலை மாடல்கள் சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் இரைச்சல் வடிகட்டியுடன் பெசல் லெஸ் டிஸ்ப்ளேவுடன் வருகின்றன. எச்டிஎம்ஐ 3, யூஎஸ்பி 2.0 மற்றும் ப்ளூடூத் வி5.0 உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளோடு வருகிறது. ஆண்ட்ராய்டு ஆதரவோடு இந்த ஸ்மார்ட் டிவி வருகிறது. கோடக் வழங்கும் ரிமோட் கண்ட்ரோல் மிகவும் ஃப்ரண்ட்லி யூஸ் கண்ட்ரோல் உடன் வருகிறது.

கூடுதலாக 10% தள்ளுபடி

கூடுதலாக 10% தள்ளுபடி

கூடுதலாகவும் சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் இந்த ஸ்மார்ட் டிவிகள் வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. டிசம்பர் 25 2021 தொடங்கும் இந்த விற்பனையானது ஐந்து நாட்கள் நடக்கிறது. நீண்ட நாட்களாக கோடக் டிவியை வாங்க நினைத்தால் புதிய கோடக் டிவியை வாங்க இது சரியான நேரமாகும்.

4கே எச்டிஆர் 10 டிஸ்ப்ளே

4கே எச்டிஆர் 10 டிஸ்ப்ளே

கோடக் சிஏ தொடர்கள் பேசல் லெஸ் டிஸைனுடன், 4கே எச்டிஆர் 10 டிஸ்ப்ளே, டால்பி விஷன், டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் போன்ற அற்புதமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது யூ.எஸ்.பி 2.0, எச்.டி.எம்.ஐ ஏ.ஆர்.சி / சி.இ.சி மற்றும் புளூடூத் 5.0 உடன் பல இணைப்பு விருப்பங்களைக் கொண்டுள்ளது. இது Android 10 உடன் கூகிள் அசிஸ்டன்ட் அணுகலையும் வழங்குகிறது.

1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ்

1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ்

கோடக் 7 எக்ஸ்ப்ரோ தொடர் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களைக் கொண்ட அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகள் ஆகும். அண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் குவாட் கோர் ARM கார்டெக்ஸ்- A53 CPU கள் மற்றும் மாலி-450MP3 GPU-களால் இயக்கப்படுகின்றது. புது ஸ்மார்ட் டிவியை குறைந்த விலையில் வாங்க இதான் நல்ல சான்ஸ்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Kodak HD Smart TV Available at Cheapest Price in Flipkart Jingle Days Sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X